மற்றவை

மாங்கனி பாக்டீரியா கரும்புள்ளி நோய்

Xanthomonas citri pv. mangiferaeindicae

நுண்ணுயிரி

சுருக்கமாக

  • இலைகளில் கருப்பு நிறத்தில், நீர்தோய்த்த புள்ளிகள் காணப்படும்.
  • இலை புள்ளிகள், பின்னர் வறண்டு, இளம் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் மாறும்.
  • இலை உதிர்வு ஏற்படும்.
  • பழங்களின் மீது பசை போன்ற கருப்பு பள்ளங்கள் தென்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மற்றவை

அறிகுறிகள்

மாங்கனி பாக்டீரியா கரும்புள்ளி நோயின் முக்கிய அறிகுறிகள் இலைகள் மற்றும் பழங்களில் தோன்றும். ஆனால் கடுமையான தொற்றுகளின் போது தண்டுகளும் கிளைகளும் பாதிக்கப்படலாம். ஆரம்பத்தில், சிறிய கருப்பு மற்றும் நீர் தோய்ந்த சிதைவுகள் இலைகளில் ஏற்படுகின்றன. இந்த புள்ளிகள் வெளிறிய ஓரங்களால் சூழப்பட்டு, நரம்புகளினால் வரையறுக்கப்பட்டிருக்கும். நோய் அதிகரிக்கும் போது, புள்ளிகள் வறண்டு, இலைகள் உதிர்ந்து விடுவதற்கு வழிவகுக்கும். ஆரம்ப நிலைகளில், நீரில் தோய்ந்த, வெளிர் நிற புள்ளிகள் பாதிக்கப்பட்ட பழங்களில் தோன்றும். பின்னர், இவை சந்தர்ப்பவாத நோய்காரணிகளை ஈர்க்கக்கூடிய தொற்று பாதித்த பசை போன்ற நீர் வடியும் அடர் நிற நட்சத்திர வடிவ பள்ளமாக மாறும். லேசான பாதிப்பு பழங்களின் தரத்தை குறைக்கும், கடுமையாக பாதிக்கப்பட்ட பழம் கீழே விழுந்து விடக்கூடும். கிளைகள் மற்றும் தண்டுகள் கருப்பாகி, வெடிப்புகள் தோன்றி சிதைவுகள் ஏற்படலாம். இது மரத்தின் வலிமையை பலவீனப்படுத்தக்கூடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

தாமிரம் ஆக்ஸிகுளோரைடு கொண்டிருக்கும் தயாரிப்புகளை வழக்கமாக தெளிப்பது நோய்த்தாக்கங்களைத் தடுப்பது மட்டுமல்லாமல், அவற்றை குறைப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மரங்களில் அசினெடோபாக்டர் பாமானி போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளும் எக்ஸ் சிட்ரியின் எண்ணிக்கையை திறம்பட குறைக்க உதவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். தியோபனாட்-மெத்தில் அல்லது பென்சிமிடஸோல் ஆகிவற்றை கொண்ட தெளிப்பான்களை மாங்கனி பாக்டீரியா கரும்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

சாந்தோமோனாஸ் சிட்ரி என்ற பாக்டீரியாவினால் இந்த நோய் ஏற்படுகிறது. இது உயிருள்ள திசுக்களில் 8 மாதங்கள் வரை வாழக்கூடியது. இது காயங்கள் மற்றும் இயற்கையான ஓட்டைகள் வழியே மரங்களை பாதிக்கிறது. நோய்க்கிருமிகள், காற்றுடன் கூடிய மழை அல்லது சீரமைப்பு போன்ற மேலாண்மை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் மூலம் மரத்திற்கு மரம் அல்லது வயல்களுக்கு இடையே பரவக்கூடும். மாற்றாக, பரவுதல் ஆனது பாதிக்கப்பட்ட தாவர பொருள் மூலம் அல்லது பழங்களை தொடுவதன் மூலம் ஏற்படுகிறது. பாக்டீரியா கரும்புள்ளி நோய் தொற்றுநோய்க்கான மிகவும் சாதகமான வெப்பநிலை 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை ஆகும். அதிகப்படியான ஈரப்பதம் கூட தொற்றுநோய்களை அதிகரிக்கிறது. தோட்டங்களை சுற்றி காற்று இடர்த்தடுப்புகள் அல்லது மர வகைகளை அடர்த்தியாக நடுதல் போன்றவற்றால் நோய் பரவுவதை தடுக்கலாம்.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான நடவு பொருள்கள் மற்றும் பதியன் முறைகளை பயன்படுத்தவும்.
  • கருவிகள் மற்றும் உபகரணங்களை கிருமி நீக்கம் செய்யவும்.
  • எதிர்ப்பு திறன் கொண்ட வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை பயன்படுத்தவும்.
  • மரங்களுக்கு நல்ல காற்றோட்டம் வழங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • பாதிக்கப்பட்ட தண்டுகள், கிளைகள் மற்றும் பழங்களை நீக்குங்கள்.
  • வயல் வேலை செய்யும் போது மா மரங்களுக்கு இயந்திர சேதம் ஏற்படுவதை தவிர்க்கவும்.
  • காற்று இடர்தடுப்புகள் மூலம் பலமான காற்று மற்றும் அதிகமான மழை ஆகியவற்றிலிருந்து மரங்களை பாதுகாக்கவும்.
  • பாதிக்கப்பட்ட பழங்கள் மற்றும் மர பொருள்களை அழித்துவிட வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க