Xanthomonas fragariae
நுண்ணுயிரி
பயிர் வகை, வானிலை மற்றும் ஆண்டின் காலம் ஆகியவற்றினைப் பொறுத்து இதன் அறிகுறிகள் அமையும். அறிகுறிகள் முதலில் நீர் தேங்கிய சிதைவுகள் போன்று, ஒளிகசியும் மற்றும் கோண புள்ளிகளாக இலைகளின் அடிப்புறத்தில் காணப்படுவதைக் கொண்டு இதனை அறியலாம். இவற்றை சூரிய ஒளியில் காட்டினால் அவை ஒளிரும், மற்றும் இலை நரம்புகளால் சட்டம் அமைத்தது போல் இருக்கும். ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது, ஒட்டும் தன்மையுள்ள பாக்டீரியாக்களைக் கொண்ட திரவம் சிதைவுகளில் இருந்து ஒழுகும். நோய் அதிகரிக்கையில், சிதைவுகள் தெளிவாக தெரியும். மேலும் இந்த சிதைவுகள் ஒழுங்கற்ற பழுப்பு அல்லது சிவப்பு நிற புள்ளிகளாக இலைகளின் மேல்புறத்தில் காணப்படும். பின்னர் அவை ஒன்றுசேர்ந்து பெரிய சிதைந்த திசுக்களின் திட்டுக்களாக உருமாறி, இலைகளுக்கு கிழிந்த அல்லது இறந்ததுபோன்ற தோற்றத்தினைக் கொடுக்கின்றன. பழத்தண்டுகள் பழுப்பு-கருப்பு நிறத்திலும், பழங்கள் உலர்ந்ததாகவும் உருவாகும், இதற்கு நீர் போக்குவரத்து பயிருக்குள் தடைபடுவதே காரணமாகும். இதனால் கனிகளின் தரம் மற்றும் தோற்றம் பாதிக்கப்படும். கனிகளில் அதிகப்படியான இனிப்புச் சுவை இருக்காது ஆனால் நிலைப்புத் தன்மை எப்போதும் போல் ஓரளவு இருக்கும்.
சான்றளிக்கப்பட்ட, கரிமப் பொருட்கள் கொண்ட காப்பர் கலவையினை தெளித்தல் முறையில் பயன்படுத்தி நோயினைக் குறைக்கலாம். சிட்ரிக் மற்றும் லாக்டிக் அமிலங்கள் போன்றவற்றைக் கொண்ட கரைசல்களைப் பயன்படுத்தி வளரும் இலைகள் மற்றும் கனிகளை பருவகாலத்தின் ஆரம்பத்திலேயே தொற்று ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கலாம்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். காப்பரை அடிப்படையாகக் கொண்ட பொருட்களை குறைந்த வெப்பநிலையில் பயன்படுத்தி ஒரு பயிரில் இருந்து மறு பயிருக்கு பாக்டீரியா திரவங்கள் மூலம் நோய் பரவுவதைக் குறைக்க இயலும். இருப்பினும், அவற்றின் அளவு மற்றும் கொடுக்கப்பட வேண்டிய எண்ணிக்கை சரியாக திட்டமிடப்பட வேண்டும், அப்போதுதான் பயிர்கள் சேதமடையாமல் இருக்கும். பூப்பூக்க தொடங்கியவுடன் மற்றும் உலர் சூழல்களில் காப்பர் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். காப்பர் ஹைட்ராக்ஸைடு கொண்ட பொருட்கள் காப்பர் சல்ஃபேட் கொண்ட பொருட்களைக் காட்டிலும் சிறந்த விளைவுகளைக் கொடுக்கும். ஆரம்ப காலத்தில், ஓக்ஸோலினிக் அமிலத்தினை பயன்படுத்துவது சிறந்த முடிவுகளைக் கொடுக்கும். அறுவடை காலத்தில் வலிடாமைசின்-ஏ கலவையினைப் பயன்படுத்துவது சிறந்த பலனளிக்கும்.
இந்த நோய்க்கான அறிகுறிகளானது ஸாந்தோமோனாஸ் ஃப்ராகரியே எனும் பாக்டீரியாக்களினால் ஏற்படுகின்றன. நிலத்தின் மீதிருக்கும் உலர் இலை கழிவுகள் மற்றும் மண்ணில் புதைந்திருக்கும் இலைகள் ஆகியவற்றின் மீது இது குளிர்காலத்தை செயலற்ற நிலையில் கழிக்கும். இவை வறட்சி போன்ற பாதகமான சூழ்நிலைகளுக்கு அதிகப்படியான தடுப்புகளைக் கொண்டுள்ளது. வசந்த காலத்தில், இவை வளர்ச்சியினை மீண்டும் தொடங்கி, பிற புதிய ஆரோக்கியமான பயிர்களை பாதிக்கிறது. மழை அல்லது மேல்நிலை நீர்ப்பாசனத்தின் நீர் தூறல்கள் மூலம் இது ஒரு தாவரத்திலிருந்து மற்றொரு தாவரத்திற்கு பரவுகின்றன. இலை பரப்பிற்கு அடியில் சுரக்கும் கசிவுகள் இரண்டாம் நிலை நோய்க்கு மூலமாக அமைகிறது. இரு நிலைகளிலுமே, இயற்கையாக ஏற்பட்ட காயங்கள் அல்லது களப்பணிகளின்போது ஏற்பட்ட காயங்களின் வழியே பாக்டீரியாக்கள் உள்நுழைகின்றன. இவை தவிர, பாதிக்கப்பட்ட நாற்றுகளாலும் புதிய விளைநிலங்களுக்கு நோய் பரவக்கூடும். குளிர்ந்த மற்றும் ஈரமான சூழ்நிலைகளில் இவை அதிகரிக்கின்றன, உதாரணமாக, உறை பனி இரவு வெப்பநிலை கொண்ட குளிர்ச்சியான வசந்த கால நாட்கள் இந்த நோய்க்கு ஏதுவானவை.