உருளைக் கிழங்கு

தண்டு கருகல் மற்றும் சிதைதல் நோய்

Pectobacterium atrosepticum

நுண்ணுயிரி

சுருக்கமாக

  • நீர் தேங்கிய சிதைவுகள் தண்டுகளின் அடிப்புறத்தில் காணப்படும், பின்னர் செடி முழுவதும் பரவும்.
  • தண்டின் உட்பகுதி திசுக்கள் அழுகும் மற்றும் கருமை நிறமாகும், செடிக்குத் தேவையான நீர் மற்றும் சத்துக்களை தடுக்கும்.
  • பாதிக்கப்பட்ட தண்டுகளைக் கொண்ட செடிகளின் இலைகள் வதங்கிபோகலாம் மற்றும் வெளிறிய நிறமாகலாம், அப்போது அவற்றின் ஓரங்கள் சுருள் போன்ற தோற்றத்துடன் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


உருளைக் கிழங்கு

அறிகுறிகள்

இந்நோய்க்கான அறிகுறிகளானது , முதலில் நீர் தேங்கிய சிதைவுகள் தண்டுகளின் அடிப்புறத்தில் காணப்படும். பின்னர் சிதைவுகள் ஒன்று சேரும், கருமை நிறமாகும் பின்னர் தண்டு முழுவதும் பரவும். தண்டின் உட்பகுதி திசுக்கள் அழுகும் மற்றும் கருமை நிறமாகும். இவை செடிக்குத் தேவையான நீர் மற்றும் சத்துக்கள் செடியின் மேற்புறத்திற்கு செல்வதைத் தடுக்கும். பாதிக்கப்பட்ட தண்டுகளைக் கொண்ட செடிகளின் இலைகள் வதங்கிபோகலாம் மற்றும் முதலில் வெளிறிய நிறத்துடனும் பின்னர் பழுப்பு நிறத்துடனும் காட்சியளிக்கும், அப்போது அவற்றின் ஓரங்கள் சுருள் போன்ற தோற்றத்துடன் காணப்படும். செடிகள் சரிந்துகிடக்கும் அல்லது மண்ணில் இருந்து எளிதில் வெளியேற்றும்படி இருக்கும். கிழங்குகள் கருமை நிறமடையத் தொடங்கியிருக்கும் மற்றும் தண்டுகளின் ஓட்டுப் பகுதி அழுகத் தொடங்கும். நோய் பரவத் தொடங்கியதும் கிழங்கு முழுவதும் அல்லது அதன் உட்பகுதி மட்டும் சிதையத் தொடங்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

உயிரியியல் முறைப்படி இந்த பாக்டீரியா தாக்குதலுக்கு எவ்வித அணுகுமுறையும் இல்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். நோய்க்கான நோய்க்கிருமிகள் பரவுவதைத் தடுக்க, காப்பர் கலந்த கலவைகளை பயன்படுத்தலாம். இருப்பினும், அத்தைகைய கலவைகள் சுற்றுப்புற சூழல் மற்றும் மனிதர்களின் ஆரோக்கியத்தினைப் பாதிக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

நோயின் வளர்ச்சியானது, விதை கிழங்குகள் வெளிவருவதற்கு முன் அல்லது பின் அழுகுவதில் இருந்து ஆரம்பிக்கும். ஈரப்பதமான சூழ்நிலைகள் அழுகுவதை அதிகப்படுத்தும். அதிகப்படியான மண் இறுக்கம் மற்றும் நீர் தேக்கம் கொண்ட பகுதிகள் இந்நோய் பாதிக்க ஏதுவான காரணிகள். அழுகிய தண்டுகள் அல்லது நிலத்திற்கு அருகேயுள்ள இறந்த இலைகளின் வழியே இந்நோய்க்கான பாக்டீரியாக்கள் செடிகளுக்குள் நுழைகின்றன. பூச்சிகள் அல்லது கருவிகளினால் செடிகளில் ஏற்படும் காயங்கள், நோய்கிருமிகளுக்கு உள்நுழையும் வாயிலாக அமையும்.


தடுப்பு முறைகள்

  • நோயற்ற தாவரங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்ட மூலங்களிடம் இருந்து கிடைக்கும் விதைகளை மட்டும் பயன்படுத்தவும்.
  • சகிப்புத்தன்மை கொண்ட பயிர்களை பயிரிடவும்.
  • கிழங்குகளின் முழுப்பகுதியினையும் பயிரிடவும், அவற்றின் ஒரு பகுதியினை மட்டும் பயிரிடுவதால் பலன் இல்லை.
  • 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குக் கீழே இருக்கும் மண்ணில் உருளைக் கிழங்கினைப் பயிரிட வேண்டாம்.
  • போதுமான அளவு உரமளிக்கவும் முக்கியமாக நைட்ரஜன் உரங்களை அளிக்கவும்.
  • கிழங்குவகை அல்லாத பிறவகைப் பயிர்களுடன் மறு பயிரிடலை 2-3 ஆண்டுகளுக்கு செய்யவும்.
  • சரியான நேரத்தில் மண்ணை உலரவிடவும், அதிகப்படியான நீர்ப்பாசனத்தினை தவிர்க்கவும்.
  • களத்தினைக் கண்காணித்து தேவையற்ற மற்றும் பாதிக்கப்பட்ட பயிர்களை நீக்கவும்.
  • அறுவடை அல்லது களப்பணிகளின் போது பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவும்.
  • சேமிப்பிடம், கருவிகள் மற்றும் இயந்திரங்கள் என களத்தில் பயன்படுத்தும் அனைத்தையும் நோய் கிருமி பரவாதவாறு சுத்தம் செய்து பயன்படுத்தவும்.
  • அறுவடைக்குப் பின்னர் களத்தில் மீதமிருக்கும் பயிர்களை அழித்துவிடவும்.
  • அறுவடைக்குப் பின்னர் நிலத்திலுள்ள மண்ணினை வெளிக்கொணர்ந்து சூரிய ஒளியில் காயவிடவும்.
  • உலர் சூழ்நிலைகளில் உருளைக் கிழங்குகளை அறுவடை செய்து அவற்றினை காற்றோட்டமான மற்றும் அடிக்கடி வெப்பநிலை மாறாத பகுதியில் சேமிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க