உருளைக் கிழங்கு

உருளைக்கிழங்கின் மோப்-டாப் வைரஸ்

PMTV

நோய்க்கிருமி

சுருக்கமாக

  • கீழ்பக்கம் அல்லது நடுப்பக்கத்து இலைகளில் பிரகாசமான மஞ்சள் நிற கொப்புளங்களும் வளைய அமைப்புகளும் காணப்படும்.
  • மேல்பக்கத்து இலைகளில் தேமல் வடிவ அமைப்புகள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


உருளைக் கிழங்கு

அறிகுறிகள்

தண்டுகளில், பிரகாசமான மஞ்சள் நிற கொப்புளங்களுடன் சிறப்பியல்பு கொண்ட தோற்ற அமைப்பும் கீழ்பக்கத்து அல்லது நடுப்பக்கத்து இலைகளில் வளையம் அல்லது கோடு போன்ற தோற்ற அமைப்பும் காணப்படும். எப்போதாவது இளம் மேல்பக்கத்து சிற்றிலைகளில், V-வடிவ வெளிறிய வடிவத்தின் இருப்பு காணப்படும், இதன் விளைவாக தனித்துவமான தேமல் போன்ற அறிகுறிகள் தென்படும். மோப்-டாப் வைரஸ் காரணமாக இலைத்திரள்கள் குவிந்து அல்லது கொத்தாக காணப்படுவதோடு, தாவரத்தின் கணுவிடைப் பகுதிகளும் மிகவும் குட்டையாக மாறிவிடும். சில சிறிய இலைகள் அலை அலையாக அல்லது சுருள் சுருளான ஓரங்களைக் கொண்டிருக்கலாம், இதன் விளைவாக குள்ளமான மற்றும் கொத்து கொத்தான வளர்ச்சி ஏற்படும். கிழங்குகளின் மேற்பரப்பில் 1 - 5 செமீ விட்டம் கொண்ட செறிவுடைய வளையங்கள் காணப்படும். கிழங்குகளில் உள்ள சதையிலும் பழுப்பு நிற சிதைந்த கோடுகள், வளைவுகள் மற்றும் வளையங்கள் தென்படலாம்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மண் மற்றும் தூண்டில் தாவர முறைகளைப் பயன்படுத்தி வைரஸைத் தனிமைப்படுத்துவதன் மூலம் வைரஸ் இருப்பதைக் கண்காணிக்கவும் மற்றும் குறிகாட்டி தாவரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் முன்கூட்டியே வைரஸைக் கண்டறியும் முறையை பயிற்சி செய்யவும். கிழங்கு நசிவு அறிகுறிகளை வெளிப்படுத்தாத உருளைக்கிழங்கு வகைகளை நடவு செய்யவும்.

இரசாயன கட்டுப்பாடு

தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கிடைக்கக்கூடிய உயிரியல் சிகிச்சைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்புடைய, நோய்க்கு எதிராக பயனளிக்கும் இரசாயனக் கட்டுப்பாடு எதுவும் இல்லை, மேலும் நோய் பரவுவதைத் தடுப்பதற்கான சிறந்த வழி PMTV இல்லாத நிலத்தில் வைரஸ் இல்லாத கிழங்குகளை நடவு செய்வதாகும்.

இது எதனால் ஏற்படுகிறது

உருளைக்கிழங்கு மோப்-டாப் வைரஸால் (PMTV) சேதம் ஏற்படுகிறது, இது மண்ணில் அதன் பூஞ்சை காரணியின் செயலற்ற நிலையில் ஓய்வெடுக்கும் வித்திகளுக்குள் வாழ்கிறது. சாம்பல் பொருக்கு பூஞ்சை (ஸ்பாங்கோஸ்போரா சப்டெர்ரானியே) ஆனது மண்ணில் பரவும் உயிரினம் ஆகும், மேலும் இது வைரஸின் ஒரே காரணி ஆகும். மண் மற்றும் கிழங்குகளை இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வது வைரஸ் பரவுவதற்கான இரண்டாம் காரணியாகும், கிழங்குகளும் அசுத்தமான விதையிலிருந்து உருவாகும் தூசியின் மூலம் சேமிக்கப்படும்போதும் தரம் பிரிக்கும்போதும் மாசுபடலாம். வைரஸ் மற்றும் அதன் காரணிகள் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் காணப்படுகின்றன. இந்த நோயினால் கிழங்கு உற்பத்தி மற்றும் தரம் குறைவதன் காரணமாக உணர்திறன் மிக்க சாகுபடிகளில் கணிசமான மகசூல் இழப்பு ஏற்படலாம்.


தடுப்பு முறைகள்

  • வைரஸ் இல்லாத மண்ணில் வைரஸ் இல்லாத கிழங்குகளை நடவு செய்யவும்.
  • வைரஸ்கள் உள்ளதா என தொடர்ந்து வயல்களைக் கண்காணிக்கவும்.
  • வயல்களில் சுகாதார நடைமுறைகளை பராமரிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க