AMV
நோய்க்கிருமி
இலைகளில் பிரகாசமான மஞ்சள் நிற தேமல்கள் மற்றும் நிறத்திட்டுகள் உருவாகி, அது வெண்கல நிறமாற்றத்துக்கு வழிவகுக்கும். பழத்தில் சிதைந்த வளையங்கள் மற்றும் புள்ளிகள் உருவாகும். வேர்களில் உள்ள உணவுக்கடத்தி உள்ளிட்ட சாற்றுக்குழல் திசு, சிதைய ஆரம்பித்து தாவரம் பட்டுப்போகும்.
அசுவினி மூலம் பரவும் இந்த வைரஸ் தொற்றுநோயைத் தாமதப்படுத்த வெள்ளி பிரதிபலிப்பு தழைக்கூளத்தைப் பயன்படுத்தவும் மற்றும் இந்த நோய்களை பரப்பும் அசுவினிகளை விரட்டுவதன் மூலம் இந்த நோய் ஏற்படுவதையும், நோயின் தீவிரத்தையும் குறைத்திடலாம். அசுவினி வருவதையும் வைரஸ் பரவுவதையும் குறைத்திட, விதைப்பதற்கு முன் அல்லது நடவு செய்வதற்கு முன் நடவுப் படுக்கைகளில் பிரதிபலிப்பு பாலிஎத்திலீன் தழைக்கூளங்களைப் பயன்படுத்தவும்.
தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கிடைக்கக்கூடிய உயிரியல் சிகிச்சைகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். பயனுள்ள இரசாயன கட்டுப்பாட்டு உத்திகள் எதுவும் தற்போது இல்லை. இந்நோயின் காரணியான அசுவினியைக் கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் பயனற்றதாக உள்ளன.
இந்த நோயின் சேதம் விதை மூலம் பரவும் வைரஸால் ஏற்படுகிறது, இது பாதிக்கப்பட்ட விதை அல்லது தாவர புரவலன்களில் உயிர்வாழும். பாதிக்கப்பட்ட தாவரங்களின் விதைகளிலிருந்து ஆரோக்கியமான தாவரங்களுக்கு அசுவினிகள் இந்த வைரஸை பரப்பும் போது இரண்டாம் நிலை பரவல் ஏற்படலாம். அசுவினியில் வைரஸ் தொற்றிக்கொள்ளும்போது, அது ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே வைரஸைப் பரப்பும் திறனைத் தக்க வைத்துக் கொள்கிறது, மேலும் இதன் பரவல் விரைவாகவும் சுற்றுப்பகுதியை பாதிக்கக்கூடியதாகவும் இருக்கும்.