உருளைக் கிழங்கு

உருளைக்கிழங்கு எஸ் வைரஸ்

PVS

நோய்க்கிருமி

சுருக்கமாக

  • இலைகள் உருக்குலைந்து போகுதல் மற்றும் வெண்கல நிறமாகுதல்.
  • இலைகளில் சிறிய புள்ளிகள் காணப்படுதல்.

இதிலும் கூடக் காணப்படும்


உருளைக் கிழங்கு

அறிகுறிகள்

வைரஸின் அறிகுறிகள் புரவலன், சுற்றுச்சூழல் நிலைமைகள் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்து மிகவும் வேறுபடுகின்றன. பெரும்பாலான சாகுபடிகளில், வைரஸ் தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லாமலேயே இருக்கிறது. சில வகைகளில் வளர்ச்சி நிலையின் ஆரம்பத்திலேயே நோய்த்தொற்று ஏற்படும்போது நரம்புகள் லேசாக ஆழமாகுதல், கரடுமுரடான இலைகள், அதிக திறந்த வளர்ச்சி, இலைகளில் லேசான பன்னிறப் புள்ளியமைவு, வெண்கல நிறமாகுதல் அல்லது இலைகளில் சிறிய சிதைந்த (கருப்பு) புள்ளிகள் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

அசுவினிகளின் இரைப்பிடித்துண்ணிகள் ஏராளமானவைகள் மற்றும் நல்ல வயல் நடைமுறைகள் மூலம் அவற்றை ஊக்குவிக்க வேண்டும். தண்ணீர் மற்றும் சில சொட்டு சோப்பு கலந்த இலேசான கரைசலை தாவரத்தின் இலைகள் மீது தெளிப்பதன் மூலமும் அசுவினிகளை அழிக்க முடியும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வைரஸ்களுக்கு இரசாயனங்களால் நேரடியாக சிகிச்சையளிக்க முடியாது என்றாலும், பரப்பும் காரணி, முக்கியமாக அசுவினிகளை, ஒரு குறிப்பிட்ட அளவு வரை கட்டுப்படுத்தலாம். அசுவினிகளுக்கான தரவுத்தளத்தையும் அவற்றின் சாத்தியமான இரசாயன கட்டுப்பாட்டையும் பார்க்கவும். அசுவினிகளுக்கான பூச்சிக்கொல்லிகளை கூறும் லேபிள் எங்கள் தயாரிப்பு தாளில் கொடுக்கப்பட்டுள்ளன.

இது எதனால் ஏற்படுகிறது

கார்லாவைரஸான உருளைக்கிழங்கு எஸ் வைரஸால் சேதம் ஏற்படுகிறது. இது முக்கியமாக அசுவினிகளால் இடை விடாத முறையில் பரவுகிறது. இயந்திரங்கள், கருவிகள் மற்றும் வயல்களில் செல்லும்போது தாவரங்கள் சேதமடைதல் என இது இயந்திரம் மூலமாகவும் பரவுகிறது. இதுவரை அசுவினிகள் மூலம் தான் இது முதன்மையாக பரவுகிறது. பருவத்தின் பிற்பகுதியில் தாவரங்கள் பி.வி.எஸ்-க்கு எதிர்ப்பு திறனை பெறுகின்றன.


தடுப்பு முறைகள்

  • கிடைக்கப்பெற்றால், சான்றளிக்கப்பட்ட எதிர்ப்புத்திறன் கொண்ட வகையிலிருந்து பெறப்பட்ட தாவர பொருட்கள் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
  • நாற்றுப்பண்ணைகளில் பூச்சி காரணிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • வயலுக்குள் இயந்திரங்கள் மூலம் நோய்கள் பரவுவதைத் தடுக்க நல்ல சுகாதாரத்தை பயிற்சி செய்யுங்கள்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களையும், மாற்று புரவலன் தாவரங்களையும் (களைகள்) அகற்றி அழிக்கவும்.
  • சந்தேகத்திற்கிடமான உருளைக்கிழங்கு பொருட்களை மற்ற பண்ணைகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க