CLCV
நோய்க்கிருமி
மிளகாய் இலை சுருள் வைரஸின் அறிகுறிகள் இலை ஓரங்கள் மேல்நோக்கி சுருண்டு கொள்ளுதல், நரம்புகள் மஞ்சள் நிறமாகுதல் மற்றும் இலைகளின் அளவு குறைந்துவிடுதல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன. கூடுதலாக, கணுவிடைப்பகுதிகள் மற்றும் இலைக்காம்புகள் கட்டையாவதன் மூலம் இலை நரம்புகள் வீங்கிக்கொள்ளும். முதிர்ந்த இலைகள் தோல் போன்றதாகி, உடையக்கூடியதாக மாறும். பருவத்தின் ஆரம்பக்கட்டத்திலேயே தாவரங்கள் பாதிக்கப்பட்டால், தாவரங்களின் வளர்ச்சி குன்றி, அதன் விளைவாக விளைச்சல் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துவிடும். எளிதாக பாதிப்புக்கு உள்ளாகுகிற சாகுபடியில் பழ உருவாக்கத்தை குன்றச்செய்கிறது மற்றும் சிதைய செய்கிறது. இந்த வைரஸானது இலைப்பேன்கள் மற்றும் சிற்றுண்ணிகள் ஏற்படுத்துவதை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
வைரஸ் பரவுவதைக் குறைக்க வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும். வேப்ப எண்ணெய் அல்லது தோட்டத்தில் பயன்படுத்தக்கூடிய எண்ணெய்களை (பெட்ரோலிய அடிப்படையிலான எண்ணெய்கள்) பயன்படுத்தலாம். எண்ணெய்கள் வெள்ளை ஈக்கள் அதிகம் காணப்படுகின்ற இலைகளின் கீழ் பகுதி முழுவதும் நன்கு பரவியிருப்பதை உறுதி செய்துக் கொள்ளவும். கண்ணாடி இறக்கை பூச்சிகள், பெரிய கண்களை உடைய வண்டுகள் மற்றும் சிறிய கொள்ளை வண்டுகள் போன்ற சில இயற்கை எதிரிகளின் மூலம் வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையை பொதுவாக கட்டுப்படுத்தலாம்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மிளகாய் இலை சுருள் வைரஸ் நோயை தடுக்க அல்லது குறைக்க அறியப்பட்ட பயனுள்ள முறைகள் எதுவும் இல்லை. இமிடாக்ளோப்ரிட் அல்லது டைனோடெஃபுரான் போன்ற இரசாயன கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றவும். நோய்க்காரணியை கட்டுப்படுத்த நடவு செய்வதற்கு முன் இமிடாக்ளோப்ரிட் அல்லது லாம்ப்டா-சைஹலோத்ரின் ஆகியவற்றை நாற்றுகள் மீது தெளிக்கவும். பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாடு நன்மை பயக்கும் பூச்சிகளுக்கு தீங்கு விளைவிக்கும், மேலும் பல வெள்ளை ஈக்களின் வகைகளிலும் எதிர்ப்பு திறனை உண்டாக்கும். இதைத் தடுக்க, பூச்சிக்கொல்லிகளை மாறிமாறி பயன்படுத்துவதை உறுதிசெய்து, குறிப்பிட்ட பூச்சிகளை அழிப்பவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும்.
அறிகுறிகளானது பிகோமோவைரஸால் ஏற்படுகின்றன, இது முதன்மையாக வெள்ளை ஈக்கள் வழியாக இடைவிடாமல் பரப்ப படுகிறது. இவை பொதுவாக 1.5 மிமீ நீளம், வெளிர் மஞ்சள் நிற உடலுடன் மெழுகு போன்ற வெள்ளை இறக்கைகள் மூலம் வகைப்படுத்தப்படுகின்றன, மேலும் இவை இலைகளின் கீழ் பக்கத்தில் பெரும்பாலும் காணப்படுகின்றன. நோயின் பரவல் காற்றின் நிலையைப் பொறுத்தது, இது வெள்ளை ஈக்களால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்பதை நிர்ணயிக்கும். பருவத்தின் நடுப்பகுதியில் இருந்து பிற்பகுதி வரை வெள்ளை ஈக்கள் மிகவும் சிக்கலானவை. இந்த நோய் விதை மூலம் பரவாது என்பதால், வைரஸ் மாற்று புரவலன்கள் (புகையிலை மற்றும் தக்காளி போன்றவை) மற்றும் களைகள் வழியாக நிலப்பரப்பில் தொடர்ந்து வாழ்கிறது. சமீபத்திய மழை, பாதிக்கப்பட்ட நடவு பொருட்கள் மற்றும் களைகளின் இருப்பு ஆகியவை நோயின் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும் சில கூடுதல் காரணிகள். நாற்றுப்பண்ணைகளில், நாற்று மற்றும் வளர்ச்சி நிலையில் இருக்கும்போது மிளகாய் தாவரங்கள் இந்த தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.