மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு பழுப்பு கீற்று நோய்

CBSV

நோய்க்கிருமி

சுருக்கமாக

  • சிறப்பியல்பு கொண்ட மஞ்சள் அல்லது சிதைந்த நரம்பு பட்டை, இது பின்னர் ஒன்றிணைந்து பெரிய திட்டுகளை உருவாக்கும்.
  • கிழங்குகளுக்குள் அடர்-பழுப்பு நிற பகுதிகள் உருவாகும்.
  • ஆரம்பகால நோய் நிலையில் இளம் தண்டுகளில் சில நேரங்களில் பழுப்பு நிற காயங்கள் தென்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு

அறிகுறிகள்

நோயின் அறிகுறிகள் மரவள்ளிக்கிழங்கின் வகைகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு இடையில் பெரிதும் வேறுபடுகின்றன, இது நோயைக் கண்டுபிடிப்பதை கடினமாக்குகிறது. ஆரம்ப அறிகுறிகள் பழுப்பு நிற காயங்கள் அல்லது கோடுகளாக தென்படும், இது சில நேரங்களில் இளம் பச்சை தண்டுகளில் தோன்றும். இருப்பினும், அடிக்கடியான முறையில், வெளிப்படையாக, இலை மேற்பரப்பில் மஞ்சள் அல்லது சிதைந்த நரம்பு பட்டைகள் காணப்படும். பச்சைய சோகை ஒப்பீட்டளவில், பெரிய, மஞ்சள் நிற கொப்புளங்களை உருவாக்க விரிவடையலாம். பிந்தைய கட்டத்தில், முழு இலையும் வெளிறிய நிறமாகி, சிதைவு ஏற்படலாம். பொதுவாக, முதிர்ந்த அல்லது கிட்டத்தட்ட முதிர்ந்த இலைகள் பாதிக்கப்படும் ஆனால் வளராத, முதிர்ச்சி அடையாத இலைகள் பாதிப்படைவதில்லை. வேரின் அளவு பொதுவாக குறைந்து, கிழங்குகளுக்குள் அடர்-பழுப்பு நிற சிதைந்த பகுதிகள் உருவாகின்றன. வேர்களில் உள்ள காயங்கள் அறுவடைக்கு பின் பயிரின் சீரழிவுக்கு வழிவகுக்கும். கிழங்குகளில் அறிகுறிகள் எதுவும் தென்படாமல் இலை மற்றும்/அல்லது தண்டு பகுதியில் அறிகுறிகள் ஏற்படலாம்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வைரஸ்கள் தாவரங்களைப் பாதித்துவிட்டால் அதனை நேரடியாகக் கட்டுப்படுத்துவதற்கான உயிரியல் கட்டுப்பாடு முறை எதுவும் இல்லை. நோய் பரவலைக் குறைப்பதற்கான ஒரு வழி, பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாட்டைத் தவிர்ப்பதே, ஏனெனில் இது மரவள்ளிக்கிழங்கு பழுப்பு கீற்று நோயின் அறியப்பட்ட காரணிகளான அசுவினிகள், சிலந்திப்பேன்கள் மற்றும் வெள்ளை ஈக்களின் இயற்கையான எதிரிகளுக்குத் தீங்கு விளைவிக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். இரசாயன பயன்பாட்டைக் கொண்டு வைரஸ் நோய்களுக்கு சிகிச்சையளிக்க முடியாது. இருப்பினும், வெள்ளை ஈக்கள், சிலந்திப்பேன்கள் மற்றும் அசுவினிகள் போன்ற நோய் காரணிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், நோய் ஏற்படுவதைக் குறைக்கவும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

மரவள்ளிக்கிழங்கு பழுப்பு கீற்று வைரஸால் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன, இது மரவள்ளிக்கிழங்கு மற்றும் ரப்பர் உற்பத்தி செய்யப்படும் பிற தொடர்புடைய தாவரத்தை மட்டுமே பாதிக்கிறது (சீரா ரப்பர் மரம்). மரவள்ளிக்கிழங்கு பழுப்பு கீற்று வைரஸ் நோயானது சிலந்திப்பேன்கள், அசுவினிகள் மற்றும் வெள்ளை ஈக்களான பெமிசியா தபசி மூலம் பரவுகிறது. இருப்பினும், நோய் பரவுவதற்கான முக்கிய வழி என்னவென்றால், மனிதர்களால் கொண்டு செல்லப்படும் பாதிக்கப்பட்ட துண்டுகள் மற்றும் வயலில் சுகாதாரம் இல்லாதது ஆகியவைதான், எடுத்துக்காட்டாக விவசாயக் கருவிகளைக் கிருமி நீக்கம் செய்யாமல் பயன்படுத்துவது. மரவள்ளிக்கிழங்கின் வகைகளைப் பொறுத்து அவற்றின் உணர்திறன் மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்படும் அளவு பெரிதும் வேறுபடுகின்றன, இது நோய்த்தொற்று ஏற்படும் பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து 18-70% வரை விளைச்சல் இழப்புகளை ஏற்படுத்துகின்றன. மரவள்ளிக்கிழங்கு பழுப்பு கீற்று வைரஸ் நோய் இதுவரை அறிவிக்கப்படாத, இத்தகைய நோயால் பாதிக்கப்படாத நாடுகளுக்குப் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து பாதிக்கப்பட்ட துண்டுகளை அனுப்புவதைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தேவை.


தடுப்பு முறைகள்

  • சான்றிதழ் பெற்ற ஆதாரங்களிலிருந்து வைரஸ் இல்லாத நடவுப் பொருளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்க.
  • மரவள்ளிக்கிழங்கு பழுப்பு கீற்று நோய்க்கு எதிர்ப்புத்திறன் அல்லது சகிப்புத்தன்மை கொண்டதாக நிரூபிக்கப்பட்ட வகைகளை வளர்க்கவும்.
  • மரவள்ளிக்கிழங்கை வளர்க்கும் முதல் 3 மாதங்களுக்கு வாரந்தோறும் வயலைக் கண்காணித்து, நோயுற்ற அல்லது சிதைந்த தாவரங்களை நீக்கி விடவும்.
  • சந்தேகமிக்க தாவரங்களை உடனடியாக எரித்து விடுவதன் மூலம் அல்லது ஆழமாக புதைத்து விடுவதன் மூலம் அழித்து விடவும்.
  • மரவள்ளிக்கிழங்கு பழுப்பு கீற்று நோயை பரப்பும் பூச்சிகளின் மாற்று புரவலன்களைத் தவிர்ப்பதற்காக வயல்களில் களை முளைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • பல்வேறு வயல்களுக்கு இடையே வேலை செய்யும் போது விவசாய கருவிகளை கிருமி நீக்கம் செய்யுங்கள்.
  • துண்டுகளை புதிய வயல்கள் அல்லது பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க