மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு தேமல் அல்லது நிறத்திட்டு நோய்

CMD

நோய்க்கிருமி

சுருக்கமாக

  • ஆரம்ப நிலையில் வெளிர் மஞ்சள் முதல் வெள்ளை நிறம் வரையான பச்சைய சோகை உருவாவதுடன், இலைகளில் தேமல் போன்ற அமைப்புகள் காணப்படும்.
  • தீவிரத்தைப் பொறுத்து, இலைகள் சிதைந்து போகும், சிற்றிலைகளின் அளவு குன்றிவிடும்.
  • தாவரத்தின் வளர்ச்சி குன்றி, கிழங்குகளின் அளவு வியத்தகு முறையில் குறைந்துவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு

அறிகுறிகள்

இலை வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் சிறப்பியல்பு கொண்ட தேமல் போன்ற அமைப்புகள் அல்லது பல்வண்ண புள்ளியமைப்பு ஆகியன உருவாகிறது. பச்சை திசுக்களின் மீதமுள்ள பகுதிகளில் பச்சைய சோகை வெளிர் மஞ்சள் அல்லது கிட்டத்தட்ட வெள்ளை பகுதிகளாக வெளிப்படுகிறது. தேமல் அமைப்பானது முழு இலையிலும் ஒரே மாதிரியாகப் பரவியிருக்கலாம் அல்லது சில பகுதிகளில் மட்டும் பரவியிருக்கலாம், இவை பெரும்பாலும் இலையின் அடிப்பகுதியில் இருக்கும். கடுமையான நோய்த்தொற்றுகளில் சிற்றிலைகளில் குறைபாடு, சிதைவு, அளவு சிறிதாகிப்போவது ஆகியவற்றைக் காணலாம். சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் தாவரத்தின் எதிர்ப்புத் திறனைப் பொறுத்து, சில சிற்றிலைகள் சாதாரணமாகத் தோன்றலாம் அல்லது மீண்டு வரும் தோற்றத்தைக் கொண்டிருக்கலாம். இருப்பினும், வைரஸுக்கு சாதகமான சுற்றுச்சூழல் நிலவும்போது, அறிகுறிகள் மீண்டும் தோன்றக்கூடும். இலைகளின் குறைந்துவிட்ட உற்பத்தித்திறன் தாவரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் கிழங்குகளின் உற்பத்தியையும் பாதிக்கிறது. கிழங்கின் அளவு உண்மையில் நேரடியாக நோய்த்தொற்றின் தீவிரத்தையே சார்ந்துள்ளது, கடுமையாகப் பாதிக்கப்பட்ட தாவரங்களில் கிழங்குகளே இருக்காது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வைரஸைக் கட்டுப்படுத்த உயிரியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எதுவும் இல்லை. இருப்பினும், வெள்ளை ஈக்களுக்கு பல எதிரி பூச்சிகள் உள்ளன, இரைப்பிடித்துண்ணிகளை நீங்கள் பயன்படுத்தலாம். சாத்தியமான உயிரியல் கட்டுப்பாட்டில் இஸாரியா ஃபாரினோசா மற்றும் இஸாரியா ஃப்யூமோசோரோசியா ஆகிய இரண்டு இனங்களுடன் இசாரியா (முறையாக பெசிலோமைசஸ்) இனத்தின் இரண்டு இனங்கள் அடங்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப் பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். உலகெங்கிலும் உள்ள வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் விளைவுடைய செயலில் உள்ள பொருட்களில் பிஃபென்ந்திரின், புப்ரோஃபெசின், ஃபெனோக்ஸிகார்ப், டெல்டாமெத்ரின், அசிடிராச்டின் மற்றும் பைமெட்ரோசைன் ஆகியவை அடங்கும். இருப்பினும், இந்தத் தயாரிப்புகளை விவேகமாகப் பயன்படுத்துங்கள், ஏனென்றால் நியாயமற்ற காரணங்களுக்காக இதனை அடிக்கடி பயன்படுத்துவது பூச்சிகள் மத்தியில் எதிர்ப்புத்திறன் அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது.

இது எதனால் ஏற்படுகிறது

மரவள்ளிக்கிழங்கு தேமல் நோய்க்கான அறிகுறிகளானது பெரும்பாலும் மரவள்ளிக்கிழங்கு செடிகளை இணைந்து தாக்கும் பல வைரஸ்களால் ஏற்படுகிறது. இந்த வைரஸ்கள் வெள்ளை ஈக்களான பெமிசியா தபசி என்பதன் மூலமும், பாதிக்கப்பட்ட தாவரப் பொருட்களிலிருந்து பெறப்பட்ட துண்டுகள் மூலமும் தொடர்ந்து பரவுகிறது. வெள்ளை ஈக்கள் நிலவும் காற்று மூலம் கொண்டு செல்லப்பட்டு, பல கிலோமீட்டர் தூரத்திற்கு வைரஸை பரப்பலாம். மரவள்ளிக்கிழங்கு வகைகள் வைரஸ் மூலம் எளிதில் பாதிக்கப்படுகின்றன, ஆனால் பொதுவாக இளம் இலைகள் முதலில் அறிகுறிகளைக் காட்டுகின்றன, ஏனெனில் வெள்ளை ஈக்கள் இளமையான, மென் திசுக்களையே உண்ண விரும்புகிறது. வைரஸின் பரவல் இந்தப் பூச்சியின் எண்ணிக்கையை பெரிதும் சார்ந்துள்ளது, இது நிலவும் வானிலை சூழல்களுக்கு ஏற்ப இருக்கிறது. பெருமளவிலான வெள்ளை ஈக்கள் மரவள்ளிக்கிழங்கின் உகந்த வளர்ச்சியுடன் ஒத்திருந்தால், வைரஸ்கள் வேகமாக பரவும். 20° செல்சியஸ் முதல் 32° செல்சியஸ் வரையான வெப்பநிலை இந்தப் பூச்சிக்கு விருப்பமான வெப்பநிலையாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்து பெற்ற சான்றளிக்கப்பட்ட விதைகளை மட்டுமே பயன்படுத்தவும்.
  • சந்தையில் கிடைத்தால், எதிர்ப்புத்திறன் உடைய மரவள்ளிக்கிழங்கு வகையைப் பயிரிடவும்.
  • மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் பயன்படுத்தும் அனைத்து கருவிகளையும் சுத்தமாகப் பராமரித்து, சாத்தியமானால் அவற்றைக் கிருமி நீக்கம் செய்யவும்.
  • ஒழுங்கற்ற பரந்த இடைவெளியில் செடிகளை நடவு செய்வதற்குப் பதிலாக, சீரான மற்றும் அடர்த்தியான முறையில் மரவள்ளிக்கிழங்கு செடிகளை நடவு செய்யவும்.
  • வாழைப்பழம், சர்க்கரை வள்ளி கிழங்கு, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றைக் கொண்டு ஊடுபயிர் செய்வது வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையைக் குறைகிறது.
  • நன்கு செழிப்பான மண்ணில் மரவள்ளிக்கிழங்கை நடவு செய்து அதற்கேற்ப உரமிடுங்கள்.
  • வயலில் உள்ள பாதிக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு செடிகள் அனைத்தையும் அகற்றி, தூரத்தில் கொண்டு சென்று அழித்து விடவும் (எரித்து விடவும் அல்லது புதைத்து விடவும்).

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க