மற்றவை

சோயா பீன்ஸ் மஞ்சள் தேமல் வைரஸ்

BYMV

நோய்க்கிருமி

சுருக்கமாக

  • அறிகுறிகளானது இலைகளின் நுனியில் நிறமாற்றம், நிறத்திட்டு, மற்றும் மஞ்சள் நிறத்தில் பச்சைய சோகைத் திட்டுக்கள் உருவாகும்.
  • இலைத் திரள்கள் சிதைந்து மற்றும் அவற்றின் ஓரங்கள் உட்புறம் சுருண்டுகொள்ளும்.
  • காய்கள் பெரும்பாலும் வளர்ச்சி குன்றி அல்லது சிதைந்து மற்றும் குறைந்த அளவிலான விதைகளைக் கொண்டிருக்கும்.
  • மொத்தத்தில், தாவரங்களின் வளர்ச்சி குன்றி காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

4 பயிர்கள்
விதையவரை
பருப்பு வகை
பட்டாணி
நிலக்கடலை

மற்றவை

அறிகுறிகள்

வைரஸ் வகை, விதைக்கப்படும் பயிர் மற்றும் அவற்றின் வகைகள், தொற்று ஏற்படும் நேரத்தில் அவற்றின் வளர்ச்சி நிலை மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து நோய்க்கான அறிகுறிகள் பெரிதும் மாறுபடும். அறிகுறிகளானது இலைகளின் நுனியில் நிறமாற்றம், கோடுகள், மேலும் மஞ்சள் நிறத்தில் பச்சைய சோகைத் திட்டுக்கள் உருவாகும். எல்லாவற்றிற்கும் மிகவும் வெளிப்படையாகத் தெரியும் அறிகுறிகளானது இலைதிரள்களில் காணப்படும் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் காணப்படும் பன்னிறப் புள்ளியமைப்பு ஆகும். சில சந்தர்ப்பங்களில், கரும் பச்சை நிறத் திசுப்பகுதிகளில், மஞ்சள் திசுக்களைச் சுற்றிலும் உப்பிக் காணப்படும். சில பயிர்களில் உள்ள நரம்புகளில் அசாதாரணமான தெளிவு காணப்படும். சீரற்ற வளர்ச்சியின் விளைவாக இலைகள் சீர்குலைந்து, அதன் ஓரங்கள் கீழ்நோக்கி சுருண்டு கொள்ளும். காய்கள் நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றாலும், இவை பெரும்பாலும் குன்றிய வளர்ச்சியுடன் அல்லது உருக்குலைந்து மற்றும் குறைவான விதைகளைக் கொண்டிருக்கும். மொத்தத்தில், தாவரங்களின் வளர்ச்சி குன்றி காணப்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சோயா பீன்ஸ் தேமல் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு இலைப்பேன்களின் எண்ணிக்கை கட்டுப்பாடு மிகவும் அவசியம். இலைகளுக்கு அடியில் இலைப்பேன்கள் தென்படுகிறதா எனச் சோதியுங்கள், அவ்வாறு தென்பட்டால், பூச்சிக்கொல்லி சோப்பு, வேப்ப எண்ணெய் அல்லது பைரித்ராய்ட்ஸ் அடிப்படையிலான கரிம தயாரிப்புகள் ஆகியவற்றைக் கொண்டு உடனடியாக சிகிச்சை அளியுங்கள். இலைப்பேன்களை உண்ணும் இரைப்பிடித்துண்ணிகளையும் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வைரஸுக்கு எதிரான சிகிச்சைகள் எதுவும் இல்லை மற்றும் இலைப்பேன்களின் எண்ணிக்கையை முழுமையாகக் கட்டுப்படுத்துவதும் கடினம். இன்னும் சொல்லப் போனால், வைரஸ் பரவுவதைத் தடுக்க , இலைப்பேன்கள் போதுமான அளவு விரைவாக அழிக்கப்படுவதும் இல்லை. கனிம எண்ணெய்யை (1%), தனியாகவோ அல்லது பூச்சிக்கொல்லிகளுடன் கலந்தோ பயன்படுத்துதல், வைரஸ் பரவுவதை கணிசமாகக் குறைக்கிறது. இருப்பினும், இவை விலையுயர்ந்தவை மற்றும் புதிதாக வளரும் தளிர்களைப் பாதுகாப்பதற்கு சிகிச்சைகள் அடிக்கடி மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டும். தாவரங்களின் விளைச்சலும் குறையக்கூடும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது சோயாபீன்ஸ் மஞ்சள் தேமல் வைரஸ் (BYMV) என்பவற்றால் ஏற்படுகிறது. பெரும்பாலும், இது பிற வைரஸ்களால் ஏற்படும் தொற்றுநோய்களுடன் இணைந்து, பல்வேறு அறிகுறிகளை விளக்குகிறது, உதாரணமாக வெள்ளரிக்காய் தேமல் வைரஸ் (CMV). அவரையுடன் சேர்த்து இது வேர்க்கடலை, சோயாபீன்ஸ், மொச்சை பருப்பு போன்ற பிற முக்கியமான பயறு வகைகளையும் பாதிக்கலாம். க்ளோவர், மணல் புல் வகை மற்றும் லூப்பைன் போன்ற பல இனங்களும் குளிர் காலத்தில் மாற்றுப் புரவலனாக செயல்படுகின்றன. கிளாடியோலஸ் போன்ற சில மலர்களும் பருப்பு இனவகை அல்லாத பிற மாற்றுப் புரவலன் தாவரங்களில் அடங்கும். இவை முக்கியமாக ஏந்துயிரி மூலம் தாவரங்களுக்கு இடையே பரவுகிறது, இருந்தாலும் இந்த நோய் விதைகள் மூலம் பரவுகிறது என்ற சந்தேகம் இருக்கிறது. இருபதுக்கும் அதிகமான இலைப்பேன்களின் உயிரினங்கள் தொடர்ச்சியான முறை இல்லாமல் இந்த நோயைப் பரப்புகிறது. அசுத்தமான தாவர பாகங்கள் அல்லது இயந்திர தூண்டுதலுடனான பதியன் முறை மூலமும் இந்த நோய் பரவுகிறது.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட மூலங்களில் இருந்து பெறப்பட்ட ஆரோக்கியமான விதைகள் அல்லது தாவரங்களை நடவு செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றைப் பயன்படுத்தவும்.
  • கவிகைகளை மிகவும் அடர்த்தியாக்க, தாவரங்களின் அடர்த்தியை அதிகரிக்கவும்.
  • அல்ஃப்பால்ஃபா, க்ளோவர் அல்லது பிற பருப்பு வகைகள் அல்லது வாள் போன்ற இலைகள் கொண்ட மலர் செடிகள் போன்றவற்றை பீன்ஸ் தாவரத்திற்கு அருகில் நடப்படாததை உறுதிப்படுத்தவும்.
  • தடைப்பயிர்களாக வயல்களைச் சுற்றி நீண்ட குறுகிய பயிர்த் துண்டுகளைப் பயன்படுத்தவும்.
  • இலைப்பேன்களின் வாழ்க்கைச் சுழற்சியை சீர்குலைக்க பிளாஸ்டிக் அல்லது கரிமத் தழைக்கூளங்களை பயன்படுத்தவும்.
  • வயல்களில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள களைகளை அப்புறப்படுத்தவும்.
  • நன்மை பயக்கும் பூச்சிகளை ஊக்குவிக்க பூச்சிக்கொல்லிகளைக் குறைவாகப் பயன்படுத்தவும்.
  • வயலில் பயிர் சுழற்சியை திட்டமிடவும், குறிப்பாக கடந்த காலத்தில் வயலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் பயிர் சுழற்சியைக் கண்டிப்பாகத் திட்டமிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க