CMV
நோய்க்கிருமி
மரங்களின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் இந்த நோய்த்தொற்று ஏற்படும். மேலும் இவை முக்கியமாக இலைகளில் காணப்படும். ஆரம்ப அறிகுறிகளானது, நரம்புகளுக்கு இணையாக தேமல் போன்ற தோற்றத்தோடு தொடர்ச்சியான அல்லது குறுக்கீடான வரிகள் காணப்படும். இலைகள் உரிக்கப்பட்ட தோற்றத்தைக் கொண்டிருக்கும். காலப்போக்கில், இலைபரப்பு முற்றிலும் வளராமல், அவற்றின் விளிம்புகள் ஒழுங்கற்ற முறையில் வளைந்து, சிதைந்த புள்ளிகள் காணப்படும். இளம் இலைகளின் அளவும் குன்றிப்போகும். இலை உறைகளில் அழுகிய பகுதிகள் தோன்றி, அவை மேலும் போலிதண்டுகள் மற்றும் குமிழ்களுக்கும் பரவக்கூடும். முதிர்ந்த இலைகள் கருப்பு அல்லது ஊதா நிற வரிகளுடன் சிதைவுக்கான அறிகுறிகளை ஏற்படுத்தி, இறுதியில் கீழே விழுந்துவிடும். பாதிக்கப்பட்ட தாவரங்களால் முதிர்ச்சியடையவோ, வாழை குலைகளையோ உற்பத்தி செய்ய முடியாது. பழங்களில் எப்போதும் அறிகுறிகள் வெளியே தென்படுவதில்லை, ஆனால் அவை அளவில் சிறியதாகவும், அவற்றில் வெளிறிய கோடுகள் அல்லது சிதைவுகளுடனும் காணப்படும்.
வைரஸ் நோய்களுக்கான நேரடி சிகிச்சை சாத்தியமில்லை, ஆனால் இலைப்பேன்கள் மூலம் தொற்றுநோயின் அபாயத்தை குறைக்க சாத்தியம் உள்ளது. ஒட்டுண்ணிகள், கொள்ளை பூச்சிகள் மற்றும் பூஞ்சை இனங்கள் போன்ற பல்வேறு இயற்கை எதிரிகளை இலைப்பேன் இனங்களுக்கு எதிராக திறம்பட செயல்படுத்த முடியும். வேர்வழிச் சந்ததிகளை 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒரு நாளைக்கு உலர் வெப்ப சிகிச்சை அளிப்பதன் மூலம் தொற்று நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வைரஸ் நோய்களுக்கான நேரடி சிகிச்சை சாத்தியமில்லை, ஆனால் மாற்று புரவலன்கள் மற்றும் நோய்க்காரணிகளை குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்தலாம். பூச்சிக்கொல்லிகள் தேவைப்பட்டால், டிமேட்டோன்-மெத்தில், டைமீதோயேட் மற்றும் மாலத்தியான் போன்ற தயாரிப்புகளை இலைத்தொகுதி தெளிப்பான்களாக பயன்படுத்தலாம். பட்டியலிடப்பட்ட இரசாயனங்கள் மனித ஆரோக்கியத்திற்கும், விலங்குகளுக்கும் மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நச்சுத்தன்மை கொண்டவை என்பதை நினைவில் கொள்க.
இந்த நோய்க்கான அறிகுறிகள் வைரஸால் ஏற்படுகிறது. இதன் முதன்மை நோய்த்தாக்கம் பொதுவாக வேர் வழிச்சந்ததிகள் போன்ற பாதிக்கப்பட்ட தாவர பொருட்களை நாற்றுகளாக பயன்படுத்துவதன் மூலம் ஏற்படுகிறது. இலைப்பேன்கள் இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகளுக்கு காரணிகளாக உள்ளன, வைரஸ்களை பிற தாவரங்கள் அல்லது வயல்களுக்கு பரப்புகின்றன. வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி ஆகியவை வைரஸிற்கு செயலற்ற புரவலன் தாவரங்களாக உள்ளன, அதாவது எத்தகைய அறிகுறிகளையும் ஏற்படுத்தாமல் வைரஸ் துகள்களை இவை பரப்புகின்றன. அடிக்கடி ஏற்படும் மழைப்பொழிவு, உதாரணமாக பிற்பகுதியில் மற்றும் பிந்தைய பருவ காலங்களில் ஏற்படும் மழைப்பொழிவு போன்ற குறிப்பிட்ட காலநிலை இந்த நோய்த்தொற்றுக்கு சாதகமாக உள்ளது. இந்த நோய் வாழை மரங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது, மேலும் இவை பெரும் விளைச்சல் இழப்பிற்கு வழிவகுக்கிறது.