கோதுமை

கோதுமை குட்டை வைரஸ் நோய்

WDV

நோய்க்கிருமி

சுருக்கமாக

  • பயிரின் வளர்ச்சிக் குன்றும், புதர் போன்ற தோற்றம் காணப்படும் மற்றும் பக்கக் கன்றுகள் குறையும்.
  • இலையின் நரம்புகளுக்கு இணையாக கோடுகள் போன்ற வெளிறியத் தோற்றம் ஏற்படும், பின்னர் இது முழு இலைக்கும் பரவும்.
  • குறைவான கதிர்கள் காணப்படும், அவ்வாறிருக்கும் கதிர்களில் தானியங்கள் சிறியதாக இருக்கும், சில சமயங்களில் மலட்டுத்தன்மை உடையதாகவும் மாறிவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

கோதுமை

அறிகுறிகள்

கோதுமை குட்டை வைரஸ் நோய் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தவல்லது. அவற்றுள் பயிரின் வளர்ச்சிக் குன்றுதல், புதர் போன்ற தோற்றம் காணப்படுதல், இலைகள் மற்றும் பக்கக் கன்றுகள் குறைதல் போன்றவை அடங்கும். இலையின் நரம்புகளுக்கு இணையாக கோடுகள் போன்ற வெளிறியத் தோற்றம் ஏற்படும், பின்னர் இது முழு இலைக்கும் பரவும். குறைவான கதிர்கள் காணப்படும், அவ்வாறிருக்கும் கதிர்களில் தானியங்கள் சிறியதாக இருக்கும், சில சமயங்களில் மலட்டுத்தன்மை உடையதாகவும் மாறிவிடும் அல்லது வளர்ச்சிக் குன்றும். இந்த வைரஸ் ப்ஸாம்மோடெட்டிஃக்ஸ் அலியனஸ் என்னும் இலைதத்துப்பூச்சி நோய்க்காரணியால் பரவுகிறது, கோதுமையின் வளரும் பாகத்தின் சாற்றுக்குழாய் திசு சாறுகளை தனது வாய்ப்பகுதியினால் உண்டு, வைரஸை பரப்புகின்றன.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், இந்த வைரஸ்க்கு எதிராக தற்போது எங்களிடம் எவ்வித கட்டுப்பாட்டு முறைகளும் இல்லை. எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலம் இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொண்டு பிறருக்கும் உதவவும். உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். அதிகளவிலான பூச்சிகளால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மட்டும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தவும். இமிடாகுளோப்ரிட் உடன் விதைகளைச் சிகிச்சை செய்வதால் சிறந்த முறையில் நோயினைக் கட்டுப்படுத்தலாம். பைரெத்ராய்டு அல்லது பிற பூச்சிக்கொல்லிகள் கொண்டு, கோதுமை பயிர்களுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம் வைரஸ் பரவலைத் தவிர்க்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் வைரஸ் மூலம் ஏற்படுகின்றன, மேலும் இவை இலைதத்துப்பூச்சி நோய்க்காரணி, ப்ஸாம்மோடெட்டிஃக்ஸ் அலியனஸ் என்பவற்றால் விட்டுவிட்டு பரப்பப்படுகின்றன. இருப்பினும், வைரஸ் இல்லாத பூச்சிகள் உண்ணுவதால் எவ்வித நோய்தொற்றுக்களும் பரவுவதில்லை. வைரஸ் இருக்கும் பூச்சிகள் வைரஸ் பரவும் வரை பல நிமிடங்களுக்கு தாவரங்களை உறிஞ்ச வேண்டும். ப்ஸாம்மோடெட்டிஃக்ஸ் அலியனஸ் பூச்சிகள் ஆண்டிற்கு 2-3 தலைமுறைகள் காண்கின்றன, இலைவேனிற் காலத்தில் குளிர்கால கோதுமையினையும், வசந்த காலத்தில் கோடைக்கால கோதுமையினையும் இவை பாதிக்கின்றன. இந்தப் பூச்சிகள் முட்டைகளாக குளிர்காலம் முழுவதிலும் காத்திருந்து, தனது முதல் தலைமுறை உயிரிகளை மே மாதத்தில் வெளியேற்றுகின்றன. இந்த வைரஸ் முட்டைகள் அல்லது பிறந்த உயிரிகளிடத்தில் பரவுவதில்லை. தானியப் பயிர்களான பார்லி, ஓட்ஸ் மற்றும் கம்பு ஆகியவற்றினையும் இந்த கோதுமை குட்டை வைரஸ் நோய் பாதிக்கிறது.


தடுப்பு முறைகள்

  • தடுப்பு வகைக் கொண்ட பயிர்கள் கிடைத்தால் அவற்றை பயிரிடவும்.
  • இலைகள், தண்டுகள் மற்றும் தளிர்களில் பூச்சிகள் இருக்கிறதா என தினமும் கண்காணித்து அவற்றினை நீக்கவும்.
  • பாதிக்கப்பட்ட பயிர்களை முடிந்தவரை வேகமாக நிலத்தினைவிட்டு அகற்றிவிடவும், இதன் மூலம் பிற பயிர்களுக்கு நோய் பரவுவது குறையும்.
  • அறுவடைக்குப் பின்னர் பயிரின் எஞ்சிய பாகங்களை களத்தில் இருந்து நீக்கவும்.
  • குறித்த காலத்திற்கு முன்னதாகவே பயிரிட்டு பூச்சிகளின் உச்சக்கட்ட எண்ணிக்கையை தவிர்க்கவும்.
  • வழக்கமான முறைகளுக்கு மாறாக முன்னதாகவே உரமளித்து பயிர்களுக்கு புத்துயிர் அளிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க