TMV
நோய்க்கிருமி
அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் மற்றும் அனைத்துத் தாவர பாகங்களையும் இந்த நோய் பாதிக்கக்கூடும். இந்த அறிகுறிகள் சுற்றுச்சூழல் நிலைகளைச் சார்ந்தது (வெளிச்சம், பகல் பொழுதின் நீளம், வெப்பநிலை). பாதிக்கப்பட்ட இலைகளில் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் பல்வண்ண புள்ளி அமைப்பு அல்லது தேமல் போன்று காணப்படும். இளம் இலைகள் சிறிது சிதைவுற்றிருக்கும். முதிர்ந்த இலைகள் வளர்ந்த அடர் பச்சை பகுதிகளைக் கொண்டிருக்கும். சிலவேளைகளில், அடர் சிதைவுற்ற கோடுகள் தண்டுகள் மற்றும் காம்புகளில் காணப்படும். பயிர்களின் வளர்ச்சி குறையும் மற்றும் அவற்றின் கனிகள் உருவாகும் தன்மை குறையும். ஒழுங்கற்ற முறையில் பழங்கள் பழுத்து, பழுப்பு வண்ணப் புள்ளிகள் தோன்றும் மற்றும் உட்புற சதைகள் மற்றும் சுவர்களில் காயங்கள் ஏற்படும். இதனால் பயிரின் மகசூல் குறிப்பிடும் அளவிற்கு குறைந்துவிடக்கூடும்.
விதைகளை 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 4 நாட்களுக்கு அல்லது 82-85 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 24 மணி நேரத்திற்கு உலர் வெப்பமாக்குதல் மூலம் வைரஸ்களை அழிக்கலாம். மாறாக, 100 கி/லி டிரைசோடியம் பாஸ்பேட் கரைசலில் விதைகளை 15 நிமிடங்கள் மூழ்க வைத்துப் பின்னர் தண்ணீர் மூலம் கழுவி மற்றும் உலர வைத்துப் பயன்படுத்தலாம்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். தக்காளித் தேமல் நோய்க்கு எதிராகச் சிறப்பான வேதியியல் சிகிச்சை முறைகள் எதுவுமில்லை.
பயிரின் எஞ்சிய பகுதிகள் அல்லது வேரின் எஞ்சிய பகுதிகளில் நோயினை ஏற்படுத்தும் வைரஸ் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்வாழக்கூடும் (பெரும்பாலாக மண்ணில் ஒரு மாதம்). வேர்களில் சிறிய காயங்கள் ஏற்படுவதன் மூலமாகப் பயிர்கள் பாதிக்கப்படும். பாதிக்கப்பட்ட விதைகள், நாற்றுக்கள், களைகள் மற்றும் சுகாதாரமற்ற தாவர பகுதிகள் மூலம் வைரஸ் பரவும். காற்று, மழை, வெட்டுக்கிளி, சிறிய பாலூட்டிகள் மற்றும் பறவைகள் மூலம் வயல்களுக்கு இடையே வைரஸ்கள் பரவும். பயிரினைக் கையாள்வதில் மேற்கொள்ளப்படும் மோசமான விவசாய முறைகளினால் வைரஸ் பரிமாற்றம் விரைவாக நடைபெறும். பகல் பொழுதின் நீளம், வெப்பநிலை மற்றும் ஒளியின் செறிவு, பயிரின் வகை, வயது போன்ற பல காரணிகள் நோய்த் தாக்கத்தின் அளவினைத் தீர்மானிக்கின்றன.