தக்காளி

தக்காளியில் வாடல் புள்ளி வைரஸ் நோய்

TSWV

நோய்க்கிருமி

சுருக்கமாக

  • அடர் பழுப்பு நிற புள்ளிகள், பின்னர் இலைகளில் விரிவடைந்த திட்டுகள்.
  • குன்றிய வளர்ச்சி.
  • வெளிர் பச்சை நிற வளையங்கள் முதிராத கனிகளில் காணப்படும்.
  • பழுத்த பழங்களில் பழுப்பு நிற வட்டங்கள் மற்றும் வெளிறிய புள்ளிகள் காணப்படும்.
  • எப்போதாவது கனிகள் உருக்குலையும்.


தக்காளி

அறிகுறிகள்

இலைகளில் ஊதா அல்லது பழுப்பு புள்ளிகளாக கருகுவது இதன் ஆரம்ப அறிகுறிகள் ஆகும். இது வழக்கமாக தாவரத்தின் மேற்பகுதியில் காணப்படும். தண்டுகள் மற்றும் சிறிய இளம் இலைகளில் சிறிய, படிப்படியாக வளரக்கூடிய ஊதா பட்டைகள் மற்றும் அடர் பழுப்பு புள்ளிகள், சில சமயங்களில் ஒரு மைய வட்டங்களாகத் தோன்றலாம். இவை அனைத்தும் ஒன்றாக சேரும்போது இலைகளின் பெரும்பகுதியினை ஆக்கிரமித்து, பெரிய சிதைவுகளை பயிர்களின் திசுக்களில் ஏற்படுத்தும். தண்டுகள் மற்றும் காம்புகளில் அடர் பழுப்பு கோடுகள் காணப்படலாம். முறையாகச் சிதைவுகள் பரவுமெனில், வளரும் நுனிப்பகுதிகள் வழக்கமாக மோசமாகப் பாதிக்கப்படும். பயிர்களில் வளர்ச்சி குன்றும் அல்லது ஒருபுறம் மட்டும் வளர்ச்சிபெறும். மோசமாக பாதிக்கப்பட்ட பயிர்களில், சலித்த தோற்றம், வெளிர் பச்சை நிற வட்டங்கள் அல்லது வளர்ந்த மையப்பகுதி போன்றவை முதிராத கனிகளில் காணப்படும். தோல் உரித்துப் பார்க்கும்போது, சிவப்பு கனிகள், பழுப்பு நிற வளையக் கோடுகள் போன்றவை சிதைந்த புள்ளிகள் மற்றும் அடையாளங்களுடன் இணைந்து காணப்படும் மற்றும் இதனால் கனிகளைச் சந்தைப்படுத்துதல் முடியாது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சில இயற்கையாகவே அமைந்த இவற்றின் எதிரி பூச்சிகள், இலைப்பேனின் இளம் உயிரி அல்லது கூட்டுப்புழுவை அழித்துவிடுகின்றன மற்றும் இவை வணிக அடிப்படையில் கிடைக்கிறது. பூக்களைத் தாக்காமல் இலைகளை மட்டும் தாக்கும் பூச்சிகளை (உதாரணம்: சூறையாடும் பூச்சிகள், சிர்பிட் பறக்கும் பூச்சிகள், தேனீக்கள்) அழிக்க ஸ்பைனோசாட் அல்லது வேப்ப எண்ணெயினைப் பயன்படுத்தவும், இதனை முக்கியமாக இலைகளுக்கு அடிப்புறத்தில் பயன்படுத்தவும். ஸ்பைனோசாட் பூச்சிகளுக்கு எதிராக சிறந்த எதிரியாக அமையும் ஆனால் சிலசமயங்களில் இயற்கையாக நோய்க்கு அமைந்த எதிரி பூச்சிகளுக்கு இவை நச்சுத்தன்மையினை ஏற்படுத்திவிடும், மற்றும் பூக்கள் பூக்கும் பருவத்தில் இதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். பூக்களில் பேன்கள் பாதிப்பு இருந்தால், சில எதிரி பூச்சிகள் அல்லது பச்சை வண்டுகளின் இளம் உயிரிகளைப் பயன்படுத்தலாம். பூண்டு சாற்றின் கலவையை சில பூச்சிக்கொல்லிகளுடன் இணைத்துப் பயன்படுத்தி சிறந்த பலனைப் பெறலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். இவற்றின் மறு உருவாக்கத் திறன் மற்றும் வாழ்க்கைச் சுழற்சி அதிகமிருப்பதால், பூச்சிகள் வெவ்வேறு நிலையிலுள்ள பூச்சிக்கொல்லிகளுக்குத் தகுந்தாற்போல் தனது எதிர்ப்புச் சக்தியினை வளர்த்துக்கொண்டுள்ளன. அஸாடிராஸ்டின் அல்லது பைரெத்ராய்ட்ஸ் போன்ற பைப்ரோனைல் பூடாக்ஸைடுடன் இணைந்த பூச்சிக்கொல்லிகளை நோய்க்கு எதிராக பயன்படுத்தி சிறந்த பலனைப் பெறலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

வெஸ்டர் பூ பேன்கள் (ஃப்ராங்க்லினிஎல்லா ஆக்சிடென்டலிஸ்), வெங்காய பேன்கள் (த்ரைப்ஸ் டபசி) மற்றும் மிளகாய் பேன்கள் (ஸ்கிர்டோத்ரைப்ஸ் டோர்சலிஸ்) பூச்சிகள் உட்பட பல்வேறு வகையான பேன்கள் இந்த வாடல் புள்ளி வைரஸ் நோய் பரப்புவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. பூச்சிகளில் செயல்படும் நிலையில் வாடல் புள்ளி வைரஸ் இருப்பதால், இவை தொடர்ந்து பரப்புகின்றன. பாதிக்கப்பட்ட பயிர்களில் ஊட்டம் பெற்றதனால் வைரஸைப் பெற்ற இளம் உயிரிகள் , தான் உயிர் வாழும் வரை அந்த வைரஸைப் பரப்பிக்கொண்டே இருக்கின்றன. இருப்பினும், வாடல் புள்ளி வைரஸ் நோய் பாதிக்கப்பட்ட பெண் பூச்சிகளிடம் இருந்து முட்டைகளுக்குப் பரவுவதில்லை. இந்த வைரஸ் அதிகளவிலான புரவலன் பயிர்களில் தங்குகின்றன, இவற்றுள் தக்காளி, மிளகு, உருளைக் கிழங்கு, புகையிலை மற்றும் கீரை போன்ற பயிர்கள் அடங்கும்.


தடுப்பு முறைகள்

  • சரியான மேலாண்மை செய்யப்பட்டு, பேன்கள் மற்றும் வாடல் புள்ளி வைரஸ் நோயிலிருந்து விலக்கம் பெற்ற நாற்றங்கால் பயிர்களை, மாற்றுப் பயிர்களாகப் பயன்படுத்தவும்.
  • அருகே வைரஸால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அல்லது பிறவகைப் புரவலன் பயிர்களை பயிரிடலைத் தவிர்க்கவும்.
  • தடுப்புவகை கொண்ட தக்காளி வகைப் பயிர்களைப் பயிரிடவும், ஏனெனில் அவற்றிற்கு, தனியாக உரமளித்து பேன்களை அழிக்க வேண்டுமென அவசியம் இருக்காது, தானாகவே அவை எதிர்ப்புத் திறனுடன் இருக்கும்.பேன்கள் இருக்கிறதா என மாற்றுப் பயிர்களை முழுவதுமாகச் சோதனை செய்யவும்.
  • ஒட்டும் தன்மை கொண்ட பொறிகளை அதிகளவிலான பகுதிகளுக்குப் பயன்படுத்தி பூச்சிகளை அழிக்கவும்.
  • நிலத்திற்குள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் களைகள் இருப்பின் அவற்றினை நீக்கவும்.
  • பயிர்களைக் காக்க புற ஊதாக் கதிர்களை அதிகளவில் எதிரொளிப்புச் செய்துவிடும் தழைக்கூளத்தினைப் பயன்படுத்தி (உலோக தழைக்கூளம்) பேன்களை விரட்டவும்.
  • பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் பயிரின் எஞ்சிய பாகங்கள் இருப்பின் அவற்றினை நீக்கவும் மற்றும் அழிக்கவும்.
  • பயிர்களுக்கு சரியான முறையில் நீர்ப்பாசனம் அளிக்கவும், அதிகளவில் நைட்ரஜன் உரமளித்தலைத் தவிர்க்கவும்.
  • பசுமை வீடுகளில் நீராவி மூலம் பயிர்களுக்கு இடையே நோய்க்காரணிகளை ஒழித்தலைச் செய்ய வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க