அரிசி

துங்குரோ வைரஸ் நோய்

RTBV

நோய்க்கிருமி

சுருக்கமாக

  • குன்றிய வளர்ச்சி.
  • குறைவான பக்கக்கன்றுகள்.
  • சிறிய, அடர்-பழுப்பு நிற கொப்புளங்களுடன் இலைகள் மஞ்சள் நிறமாகுதல்.
  • பொட்டாசியம் பற்றாக்குறையுடன் குழப்பம் ஏற்படுதல்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

RTBV மற்றும் RTSV அல்லது இரு வைரஸ்களினாலும் தனித்தனியே கூட பயிர்கள் பாதிக்கப்படலாம். பச்சை நிற நெல் தத்துப்பூச்சி இவற்றின் நோய் பரப்பியாகும். இரண்டு மடங்கு பாதிக்கப்பட்ட தாவரங்கள் வேறுபட்டு "துங்குரோ" என்று அழைக்கப்படும் அறிகுறிகளுடன் காணப்படும். பாதிக்கப்பட்ட பயிர்களில் பக்கக் கன்றுகள் குறைந்து காணப்படுதல் மற்றும் வளர்ச்சி குன்றுதல் போன்றவை இவற்றின் அறிகுறிகளில் அடங்கும். இலைகளின் விளிம்புகளில் இருந்து அவற்றின் அடிப்புற பாகம் வரையில், மஞ்சள் அல்லது ஆரஞ்சு – மஞ்சள் நிறமாக மாற்றம் பெறும். வண்ணமிழந்த இலைகள் ஒழுங்கற்ற, சிறிய, அடர் பழுப்பு நிற கொப்புளங்களைக் கொண்டிருக்கும். இளம் பயிர்களின், நரம்புகள் வெளிரிய தோற்றத்தினைக் கொண்டிருக்கும். மிதமான அறிகுறிகள் RTBV அல்லது RTSV உடன் மட்டும் காணப்படலாம் (உதாரணமாக, மிதமாக பயிரின் வளர்ச்சி குன்றும் மற்றும் இலைகளில் மஞ்சள் நிறமாற்றம் இருக்காது). இந்த அறிகுறிகள் பொட்டாசியம் பற்றாக்குறையாக இருப்பது போல் குழப்பத்தினை ஏற்படுத்தலாம், ஆனால் பொட்டாசியம் பற்றாக்குறையானது வயலின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் ஆனால் துங்குரோ பாதிப்பு வயலில் திட்டுக்களாக காணப்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நோய்பரப்பி பச்சை நிற தத்துப்பூச்சிகளை ஈர்க்க மற்றும் கட்டுப்படுத்த ஒளி பொறிகள் வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் அவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். அதிகாலையில் வெளிச்சமான பொறிகளுக்கு அருகே பறக்கும் தத்துப்பூச்சிகளை பிடித்து, அவற்றை அழித்து விடவும். மாறாக பூச்சிக்கொல்லிகளை தெளித்து அல்லது தூவி அவற்றை அழிக்கலாம். இதனை தினமும் செய்ய வேண்டும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். நடவு செய்த 15 மற்றும் 30 நாட்களில் புப்ரோஃபெசின் அல்லது பைமெட்ரோசின் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பூச்சிக்கொல்லிகளை சரியான நேரத்தில் தெளித்தால் நல்ல பலனளிக்கும். இருப்பினும், பூச்சிகள் சுற்றியுள்ள வயல்களுக்குச் சென்று துங்குரோவை மிகக் குறுகிய காலத்தில் வேகமாகப் பரப்பக்கூடும். எனவே, வயலைச் சுற்றியுள்ள தாவரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டும். குளோர்பைரிஃபோஸ், லாம்ப்டா சைஹலோத்ரின் அல்லது பிற செயற்கை பைரெத்ராய்டு சேர்க்கைகளை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளைத் தவிர்க்கவும், இலைத்தத்துப்பூச்சிகள் இவற்றுக்கு எதிராக ஓரளவுக்கு எதிர்ப்புத்திறனை ஏற்படுத்தும்.

இது எதனால் ஏற்படுகிறது

நெபோடெட்டிக்ஸ் வைரசென்ஸ் எனும் வைரஸின் மூலம் இந்நோய் பரவுகிறது. அதிகப்படியான மகசூலைக் கொடுக்கும், குறைந்த வளர்ச்சி நாட்கள் கொண்ட, ஆண்டிற்கு இரு முறை பயிர் வளர்க்கக்கூடிய நிலங்களில் சர்வ சாதாரணமாக பரவும் நோய் துங்குரோ ஆகும். ஒரு முறை பயிர் துங்குரோ நோயினால் பாதிக்கப்பட்டால், பின்னர் அதனை குணப்படுத்த முடியாது. நேரடியாக நோயை கட்டுப்படுத்துவதைக் காட்டிலும் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரு பயிர்களை வளர்க்கும் முறை மற்றும் மரபணு ஒற்றுமை போன்றவை துங்குரோ வைரஸ் பரவ முக்கியக் காரணமாகும். உயரமான நிலங்கள் அல்லது மழையினால் வளம் பெறும் நிலங்களை விட பாசனம் மூலம் நீர் பெறும் நிலங்கள் இந்த வைரஸினால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவை. பயிர்களின் எஞ்சிய பகுதிகள் கூட நோய் பரவுவதற்கான மூலங்களாக அமையலாம்.


தடுப்பு முறைகள்

  • நோய் காரணிகளுக்கு வெவ்வேறு எதிர்ப்பு திறன் கொண்ட பயிர் வகைகளை உபயோகிக்கவும்.
  • நோய் எதிர்ப்பு குறைவாக இருக்கும் மாதங்களில் இரு பயிர்களை பயிரிடவும்.
  • புரவலன் அல்லாத பயிர்வகைகளை கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.
  • சரியான சமயத்தில் இரு பயிர்களும் வளர்ந்துவரும்படி பயிரிடலை செய்யவும்.
  • இனப்பெருக்க தளங்கள் மற்றும் முட்டைகளை உழுதல் மூலம் அழித்துவிடவும்.
  • பயன்படக்கூடிய பூச்சிகளைப் பாதுகாக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க