துவரஞ்செடி மற்றும் துவரம் பருப்பு

மலட்டுத் தேமல் நோய்

PPSMV

நோய்க்கிருமி

சுருக்கமாக

  • இலைகளில் வெளிறிய மற்றும் அடர் பச்சை வண்ண தேமல் போன்ற அமைப்பு காணப்படும்.
  • தாவரங்கள் பூ மற்றும் காய்கள் இல்லாமல் வெறும் புதர் போன்று மட்டும் வளரும்.

இதிலும் கூடக் காணப்படும்


துவரஞ்செடி மற்றும் துவரம் பருப்பு

அறிகுறிகள்

நோயின் ஆரம்பகாலத்தில் இளம் இலைகளின் நரம்புகள் வெளிறிய பச்சை நிறத்தில் மாறத் தொடங்கும். அதைத் தொடர்ந்து நோயின் முன்னேற்றத்தினைப் பொறுத்து வெளிறிய மற்றும் அடர் பச்சை வண்ண தேமல் போன்ற அமைப்பு உருவாகும். தாவரங்கள் பூ மற்றும் காய்கள் இல்லாமல் வெறும் புதர் போன்று மட்டும் வளரும். இலைகளின் அளவுகள் குறைந்துவிடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

அறுவடைக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட தாவரங்களின் அனைத்து கழிவுகளையும் அழிக்கவும். நோயின் ஆரம்பகாலத்திலேயே பாதிக்கப்பட்ட செடிகளை வேருடன் வெளியே எடுத்து, அவற்றை அழிக்க வேண்டும். இதன் மூலம் பிற தாவரங்களுக்கு வைரஸ் பரவுவதை குறைக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

கெல்தேன், டெடியான் போன்றவற்றை ஒரு லிட்டருக்கு ஒரு மிலி என்ற வீதத்தில் கலந்து பயன்படுத்தி பேன்களை அழிக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

எரியோபைட் பூச்சி இனங்களால் வைரஸ் பரவுகிறது. துவரையினை திணை அல்லது சோளத்துடன் ஊடுபயிரிடல் செய்யும்போது இந்நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. சூடான மற்றும் வறண்ட சூழல்களில் இந்த நோய் அறிகுறிகள் அடக்கப்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • பேன்களை கட்டுப்படுத்துதல்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க