பப்பாளி

பப்பாளி இலைச்சுருள் வைரஸ் நோய்

PaLCV

நோய்க்கிருமி

சுருக்கமாக

  • மேல்புற இலைகள் கீழ்நோக்கி மற்றும் உள்நோக்கி சுருண்டு கொள்ளும்.
  • நரம்புகள் தடித்து அழிந்துப்போகும்.
  • இலைகள் தோல் போன்று உடையக்கூடியதாய் மாறும்.
  • இலை உதிர்வு குன்றிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
  • சில, சிறிய சிதைந்த பழங்கள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பப்பாளி

அறிகுறிகள்

இந்த நோயின் மிகவும் வெளிப்படையான அறிகுறிகள் கீழ்நோக்கி அல்லது உள்நோக்கி சுருண்டு கொள்ளும் இலைகள் ஆகும். இந்த நோயின் பிற அறிகுறிகள் இலை நரம்புகள் தடித்து போதல், சில நேரங்களில் புறவளர்ச்சியும் உருவாகக்கூடும். இலைகள் தோல் போன்று உடையக்கூடியதாய் மாறும். இலைக்காம்புகள் சிதைந்து சுருண்ட தோற்றத்தினைக் கொண்டிருக்கும். மேல் பக்க இலைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. நோய் தாக்கத்தின் பிந்தைய நிலைகளில் இலை உதிர்வு ஏற்படும். தாவர வளர்ச்சி குன்றி, மலர்கள் அல்லது பழங்களின் உற்பத்தி குறையக்கூடும். இந்த நோய்தாக்கம் ஏற்பட்டால், பழங்கள் சிறியதாகவும், வடிவங்கள் சிதைந்தும், முதிர்ச்சியடைவதற்கு முன்னரே கீழே விழக்கூடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

அசுவினி மூலம் வைரஸ் அதிகரிப்பதை மற்றும் பரவுவதை தடுக்க வெள்ளை எண்ணெய் பால்மம் (1 %) தெளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இந்த வைரஸ் தொற்றுகளுக்கு இரசாயன சிகிச்சைகள் எதுவும் இல்லை. இருப்பினும், வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் நோய்த்தாக்கத்தின் தீவிரத்தைக் குறைக்கலாம். விதைக்கும் நேரத்தில் கார்போபூரன் என்பவற்றை மண்ணில் பயன்படுத்துதல், 10 நாட்கள் இடைவெளியில் டைமீதோயேட் அல்லது மெட்டாசிஸ்டாக்ஸ் இலைவழி தெளிப்பான்களை 4 -5 முறை தெளித்தல் போன்றவற்றின் மூலம் வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையை திறம்பட கட்டுப்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

பெமிசியா டபாக்கி என்னும் ஈ இந்த வைரஸ் பரவுவதற்கான முக்கிய நோய்பரப்பி ஆகும். இந்த ஈக்கள் தாவரங்களுக்கிடையே வைரஸ்களை பரப்புகிறது. வைரஸ் நோய்பரப்பியாக செயல்பட்டுக் கொண்டிருப்பதனால், சில வினாடிகளுக்குள் நோய் பிற தாவரங்களுக்கு பரவிவிடுகிறது. பாதிக்கப்பட்ட நாற்றுகள் அல்லது விதைகள், அதேபோல் பதியன் பொருட்கள் போன்றவையும் இந்த நோய் பரவுவதற்கான பிற வழிகள் ஆகும். பப்பாளி இலைச்சுருள் வைரஸ் வயலில் மேற்கொள்ளப்படும் இயந்திர பணிகள் மூலம் பரவுவதில்லை. தக்காளி மற்றும் புகையிலை மரங்கள் இந்த நோயின் மாற்று புரவலன்கள் ஆகும். இந்த வைரஸ் பரவலாக உள்ளது, ஆனால் தற்போது இது குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. எனினும், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், இந்த நோய் கடுமையான பொருளாதார இழப்புக்களை ஏற்படுத்தக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட தாவரங்கள் இருக்கிறதா என சோதிக்கவும்.
  • பப்பாளி மரங்களுக்கு அருகே மாற்று புரவலன்களை வளர்க்க வேண்டாம்.
  • பயன்மிக்க பூச்சிகளுக்கு அழிவு ஏற்படாமல் இருக்க பூச்சிக்கொல்லிகளை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றி, அவற்றை அழித்துவிடவும்.
  • அறுவடைக்குப்பின் தாவரக் கழிவுகளை கவனமாக அகற்றி விடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க