வெங்காயம்

வெங்காய மஞ்சள் குட்டை வைரல் நோய்

OYDV

நோய்க்கிருமி

சுருக்கமாக

  • முதிர்ந்த இலைகளில் மஞ்சள் கோடுகள் - தேமல் அமைப்பு போல் காட்சியளிக்கும்.
  • இலைகள் சுருங்கி, மென்மையாகி, சுருண்டு, வாடிப்போகும்.
  • குன்றிய வளர்ச்சி.
  • முழு தாவரமும் மஞ்சள் நிறமாகுதல்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
வெள்ளைப் பூண்டு
வெங்காயம்

வெங்காயம்

அறிகுறிகள்

அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் நோய் தொற்று ஏற்படலாம் மற்றும் முதன்முதலில் முதலாம் ஆண்டு தாவரங்களின் முதிர்ந்த இலைகளில் இந்த நோய்த்தொற்று காணப்படுகிறது. இவற்றின் ஆரம்ப அறிகுறிகள் ஒழுங்கற்ற, மஞ்சள் கோடுகளாக தோன்றி, பின்னர் அது படிப்படியாக தேமல் போன்ற வடிவமைப்பை உருவாக்குகிறது. நோய்த்தொற்று அதிகரிக்கும் போது, இந்த இலைகள் சுருங்கி, மென்மையாக்கப்பட்டு, கீழ்நோக்கி சுருட்டப்பட்டு இறுதியில் வாடி விடுகிறது. தொற்று மிகக் கடுமையானதாக இருக்கும் போது, இலைகள் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி, தாவரங்கள் குன்றிய வளர்ச்சியைக் கொண்டிருக்கும். குமிழ்கள் சரியாக வளராது, அவ்வாறு வளர்ந்தாலும், அதன் அளவு சிறியதாகவும், முன்கூட்டியே விழுந்துவிடக் கூடியதாகும் இருக்கும். உதாரணமாக, சேமித்துவைக்கும் போது விதை உற்பத்திக்கு பயன்படும் வெங்காய தாவரங்களின் மலர் தண்டுகள் நிலைகுலையலாம், மலர்கள் மற்றும் விதைகள் குறைந்து, விதையின் தரத்தில் குறைபாடு ஏற்படலாம். முளைக்கும் விகிதங்கள் கணிசமாக பாதிக்கப்படக்கூடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க எந்தவொரு உயிரியல் சிகிச்சையும் தற்போது இல்லை. 2% அளவில் வேப்ப எண்ணெய் மற்றும் 5% அளவில் வேப்ப விதை கெர்னல் சாறு கொண்ட கரைசல்கள் செடி பேன்களுக்கு எதிரான சிகிச்சைகளுள் அடங்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வைரஸ் கிருமிகளை பொறுத்த வரையில் இரசாயன சிகிச்சைக்கு சாத்தியமில்லை. செடி பேன்களுக்கு எதிரான சிகிச்சைகளுள் எமாமெக்டின் பென்ஜோயேட், இன்டொக்சாகார்ப் அல்லது என்எஸ்கேஇ முதலியன அடங்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் வெங்காய மஞ்சள் குட்டை வைரஸ் (OYDV) எனப்படும் வைரஸால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் நீண்ட காலத்திற்கு வயல்களில் உள்ள தாவர சிதைவுகளில் உயிர் வாழும். இந்த வைரஸ் மிகவும் பொதுவாக வயல்களில் உள்ள பாதிக்கப்பட்ட தாவரங்களின் பாகங்களான குமிழ்கள், செட்டுக்கள் மற்றும் தானே வளரும் தாவரங்கள் ஆகியவற்றின் மூலம் பரவுகிறது. இந்த நோய் வரையறுக்கப்பட்ட புரவலன் வரம்பினை கொண்டுள்ளது. இது வெங்காய பூண்டு செடி வகை தாவர இனங்களை (வெங்காயம், பூண்டு, உள்ளி மணமுள்ள வெங்காயப் பூண்டு வகை மற்றும் சில அலங்கார வெங்காய பூண்டு செடி வகை) பெரும்பாலும் தாக்குகிறது. இந்த நோய் பல செடிப்பேன் இனங்களின் (உதாரணமாக மைசஸ் பெர்சிகே) வழியாகவும் பரவும். அவைகள் தங்கள் வாயில் வைரஸ் நோய்கிருமிகளை எடுத்துச்சென்று, ஆரோக்கியமான தாவரங்களை உறிஞ்சும் போது, நோய்க் கிருமியை அந்த தாவரங்களினுள் பரப்பிவிடுகிறது. பெரும்பாலும், இந்த வைரஸ்நோய் அதே தாவரத்தில் உள்ள மற்ற வைரஸ்களுடன் இணைந்து ஏற்படுகிறது. இந்த நோய்தொற்று அதன் தீவிரத்தை பொறுத்து குறைந்த அல்லது பெரிய அளவில் விளைச்சல் இழப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, தாவரங்கள் வெங்காய இன செடி வகையை தாக்கும் மஞ்சள் பட்டை வைரஸ் என்பவற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் போதும், விளைச்சல் இழப்பு அதிகமாக இருக்கும்.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட மூலத்திலிருந்து ஆரோக்கியமான நடவு பொருள் அல்லது விதைகளைப் பயன்படுத்துவதில் கவனமாக இருங்கள்.
  • உங்கள் பகுதியில் கிடைக்கக்கூடிய சகிப்புத்தன்மை அல்லது எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகளைப் பயன்படுத்தவும்.
  • நடவுப் பொருள் ஆரோக்கியமானதா இல்லையா என்று உங்களுக்கு உறுதியாக தெரியவில்லையென்றால், குமிழ்த்தண்டுகள் அல்லது செட்டுகளுக்கு பதிலாக தாவர விதைகளை பயன்படுத்துங்கள்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்று உங்கள் தாவரங்கள் அல்லது வயல்களை சோதிக்கவும்.
  • நோய் பரவுவதைத் தவிர்க்க செடிபேன்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துங்கள்.
  • மாற்றுப்புரவலன்களான களைகளை அகற்றவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்கள் மற்றும் தாவர பாகங்களை அகற்றி, அதனை அழித்து விடவும், உதாரணமாக எரித்து அழித்து விடவும்.
  • பயிர்சுழற்சிக்கு புரவலன் அல்லாத பயிர்களை நடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க