உருளைக் கிழங்கு

உருளைக்கிழங்கு X வைரஸ் நோய்

PVX

நோய்க்கிருமி

சுருக்கமாக

  • வெளிர் பச்சைநிற தேமல் அமைப்புகள் இலைகளின் மீது காணப்படும்.
  • பல் வண்ண பகுதிகள் சிறிய மற்றும் பழுப்பு நிற புள்ளிகளைக் கொண்டிருக்கும்.
  • பிற வைரஸ்களுடன் சேர்ந்து நோய் தொற்றை ஏற்படுத்தி அறிகுறிகளை இன்னும் மோசமடைய செய்யும்.

இதிலும் கூடக் காணப்படும்


உருளைக் கிழங்கு

அறிகுறிகள்

பயிர் வகை, நோயின் வளர்ச்சி நிலை, நோயின் பலம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைகளைப் பொறுத்து நோயின் தன்மை மற்றும் அறிகுறிகள் அமையும். அறிகுறிகளானது தெளிவில்லாத நரம்புகளுக்கு இடையேயான பச்சைய சோகை முதல் கடுமையான வெளிர் பச்சை நிற தேமல் அமைப்பு வரை ஏற்படும். இந்த சூழ்நிலைகளில் இலைகள் சுருளுதல், இலை விளிம்புகளில் சிதைவுகள், வளர்ச்சி குன்றுதல், மற்றும் தாவரங்கள் அழிதல் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில், பல வண்ண பகுதிகள் சிறிய மற்றும் பழுப்பு நிற புள்ளிகளைக் கொண்டிருக்கும். பிற வைரஸ்களுடன் சேர்ந்து நோய் தொற்றை ஏற்படுத்தி அறிகுறிகளை இன்னும் மோசமடைய செய்யும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்நோய் வைரஸ்க்கு எதிரான உயிரியல் சிகிச்சை முறைகள் எதுவும் இப்போதைக்கு எங்களிடம் இல்லை. தயவுசெய்து எங்களுடன் இணைப்பில் இருக்கவும், ஒருவேளை உங்களுக்கு ஏதேனும் சிறந்த வழிமுறைகள் தெரிந்தால் எங்களுடன் பகிர்ந்துகொண்டு மற்றவர்களுக்கும் உதவலாமே. உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். வைரஸ் நோய்களுக்கு இரசாயன சிகிச்சை சாத்தியம் இல்லை.

இது எதனால் ஏற்படுகிறது

கிழங்குவகை தாவரங்களை இந்த வைரஸ் வெகுவாக பாதிக்கும், இதில் உருளைக் கிழங்கு, புகையிலை, மிளகு மற்றும் கத்தரிக்காய், அவற்றுடன் தொடர்புகொண்ட பிறவகை களைகளும் அடங்கும். பாதிக்கப்பட்ட தாவரங்களுடனான நேரடித் தொடர்பு அல்லது வெட்டுக்கிளிகள் மூலம், மாசுபட்ட கருவிகள் அல்லது தவறான வயல் நடைமுறைகளினால் நோய் பரவுகிறது. 16 முதல் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைகளில் நோய் அறிகுறிகள் அதிகரிக்கின்றன. அதிக சுற்றுச்சூழல் வெப்பநிலைகளில், அறிகுறிகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை.


தடுப்பு முறைகள்

  • சான்றிதழ் அளிக்கப்பட்ட வைரஸ் தொற்று இல்லாத விதைகளைப் பயன்படுத்தவும்.
  • இந்நோய் வைரஸிலிருந்து ஏற்படும் பாதிப்பினை தடுக்கும் வகையிலான உருளைக் கிழங்கு வகைகளை பயிரிடவும்.
  • தக்காளி மற்றும் உருளைக் கிழங்கு பயிர்களை அருகருகே பயிரிட வேண்டாம்.
  • களத்தில் உள்ள பயிர்களைக் கண்காணித்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தோன்றும் பயிர்களை நீக்கிவிடவும்.
  • கருவிகள் மூலம் பயிர்கள் சேதப்படுவதைத் தவிர்க்கவும்.
  • பயிர்களுக்கு இடையே போதிய இடைவெளிவிட்டு பயிரிடவும்.
  • ஒரு பாதிக்கப்பட்ட பயிர் குறித்த வேலையில் இருந்தால், அடுத்த முறை பாதிக்கப்படாத பயிர்களை நெருங்கும்போது, துணிகளை மாற்றிவிட்டு அதை நன்றாக சோப்பு மற்றும் நீரினால் அலசிவிட்டு பயன்படுத்தவும்.
  • உபகரணங்கள் மற்றும் கருவிகளை தொற்று நீக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க