விதையவரை

அவரையின் பொன்னிற தேமல் வைரஸ்

BGMV

நோய்க்கிருமி

சுருக்கமாக

  • அடர் பச்சை நிற நரம்புகளுக்கு இடையேயான பகுதிகளுடன் மாறுபட்ட பிரகாசமான மஞ்சள் நரம்புகளுடன் வலை போன்ற தோற்றத்துடன் கூடிய வெளிறிய சோகை.
  • இலைகள் கீழ்நோக்கி சுருண்டு, சரியாக விரியத் தவறிவிடுகின்றன.
  • மேற்பரப்புகள் கடினமாகவும், தோல் போன்றதாகவும் மாறும்.

இதிலும் கூடக் காணப்படும்


விதையவரை

அறிகுறிகள்

முதல் அறிகுறிகள் பொதுவாக மூவிலைகளாக தோன்றும். புதிதாக முளைத்த இலைகளில் பிரகாசமான மஞ்சள் நிறத்தில், வெளிறிய நரம்புகள் தோன்றும். இந்த வெளிறிய நரம்புகள் மேலும் பரவி, இலைக்கு வலை போன்ற சிறப்பியல்பு கொண்ட தோற்றதைக் கொடுக்கும், இவை மஞ்சள் நிற நரம்புகளுடன் நன்கு மாறுபட்ட கரும் பச்சை நிற திசுக்களை கொண்டிருக்கும். பின்னர் இந்த வெளிறிய தோற்றம் விரிவடையத்தொடங்கி, மஞ்சள் நிறத்தின் வெவ்வேறு நிழல்களில் புள்ளிகள் உடைய தோற்றமைப்புடன் எஞ்சியிருக்கும் இலைகளையும் மூடிவிடும். அறிகுறிகளின் தோற்றத்திற்குப் பிறகு முளைக்கும் இலைகள் சிதைந்து, சுருண்டு, கடினமாகி மற்றும் தோல் போன்றதாகலாம். காய்கள் விரிவடைய தவறி, சுருண்டுகொள்ளலாம். ஆரம்ப கட்டத்தில் பாதிக்கப்பட்ட தாவரங்கள் குறைவான காய்களையும், விதை உற்பத்தியையும், குறைவான விதை தரத்தையும் கொண்டிருக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஐரெசின் ஹெர்ப்ஸ்டி (ஹெர்ப்ஸ்டின் இரத்த இலை) மற்றும் பைட்டோலாக்கா தைர்சிஃப்ளோரா ஆகியவற்றின் இலைச் சாறுகளைப் பயன்படுத்துவது வைரஸ் தொற்றுநோயை ஓரளவு தடுக்கும் மற்றும் இதன் விளைவாக வயலில் குறைவான அளவில் இந்த நோய்த்தொற்று ஏற்படும். பெளவேரியா பாசியானா என்ற நன்மை பயக்கும் பூஞ்சையின் சாறுகள் பெமிசியா தபாசியின் முதிர்ந்த பூச்சிகள், முட்டைகள் மற்றும் இளம் பூச்சிகளுக்கு எதிராக பூச்சிக்கொல்லி பண்புகளைக் கொண்டுள்ளன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வைரஸ் தொற்றுநோய்களின் வேதியியல் கட்டுப்பாடு சாத்தியமில்லை. வெள்ளை ஈக்களின் கட்டுப்பாட்டைப் பொறுத்தவரை, மிகக் குறைவான சிகிச்சைகள் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

பெமிசியா டபாசி என்னும் வெள்ளை ஈயின் மூலம் இந்த வைரஸ் தொடர்ந்து பரவுகிறது. வயல் பணியின் போது இயந்திர காயம் மூலமாகவும் தாவரங்கள் பாதிக்கப்படலாம். வைரஸ் தாவரங்களுக்கு இடையே முறையாக பரவுவதில்லை, மேலும் இது மண் மூலமாகவோ அலல்து மகரந்தம் மூலமாகவோ பரவுவதும் இல்லை. வயலில் தானே வளரும் தாவரங்கள் அல்லது புரவலன் களைகள் இருக்கும்போது அவரைகள் பொதுவாக நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகிறது. தாவரங்களின் போக்குவரத்து திசுக்களில் உள்ள வைரஸ் பல்கிப்பெருகுகிறது, இதுதான் நரம்புகள் ஏன் முதலில் பாதிக்கப்படுகின்றன என்பதை விளக்குகிறது. காணக்கூடிய அறிகுறிகளின் தோற்றம் மற்றும் அவற்றின் தீவிரத்தன்மை ஆகியவை சுமார் 28 °செல்சியஸ் உயர்ந்த வெப்பநிலையில் அதிகம் நிலவுகிறது. குளிர்ச்சியான சூழ்நிலைகள் (சுமார் 22 ° செல்சியஸ்) வைரஸின் பெருக்கத்தையும் அறிகுறிகளின் வளர்ச்சியையும் தாமதப்படுத்தக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் சந்தையில் எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகள் கிடைக்கிறதா என விசாரிக்கவும்.
  • வயல்களிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள களைகளையும் மாற்று புரவலன்களையும் அகற்றவும்.
  • விதானத்திற்குள் ஈ நுழையாமல் தடுக்க வயலில் உள்ள தாவரங்களின் அடர்த்தியை அதிகரிக்கவும்.
  • வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையை குறைக்க தழைக்கூளம் பயன்படுத்தப்படலாம்.
  • புரவலன் அல்லாத பயிர்களை கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க