பருத்தி

பருத்திக்காயின் பூஞ்சை அழுகல் கலப்பு நோய்

Fusarium/Aspergillus/Phytophthora/Rhizopus/Diplodia

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • பருத்திக்காய்களில் நிறமாற்றம் காணப்படும், மென்மையாகும்.
  • பருத்திக்காய்கள் முன்கூட்டியே வெடித்து உதிர்ந்துவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பருத்தி

அறிகுறிகள்

பருத்தியில் பூஞ்சை அழுகல் அறிகுறிகளின் அதிகரிப்பால் குறிக்கப்படுகிறது. ஆரம்பத்தில், இளம் பச்சைப் பருத்திக்காய்களில் சிறிய பழுப்பு அல்லது கருப்பு புள்ளிகள் தோன்றும், பின்னர் இவை முழு காய்களிலும் பரவிடும். பாதிக்கப்பட்ட பருத்திக்காய்கள் அடர் பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக மாறி, மென்மையாகி, நீரில் தோய்த்ததாக தோன்றும். நோய் அதிகரிக்கையில், ​​​​இது உட்புற திசுக்களில் ஊடுருவி, விதைகள் மற்றும் பஞ்சுகளைச் சிதைத்துவிடும். கடுமையான சந்தர்ப்பங்களில், பூஞ்சை பருத்திக்காய்களை முன்கூட்டியே வெடித்துவிடச் செய்யும், இதன் விளைவாக கறை படிந்த மற்றும் சிதைந்த பருத்தி இழைகள் ஏற்படலாம். ஈரப்பதமான சூழ்நிலையில், பூஞ்சையின் வளர்ச்சியைப் பருத்திக்காய்களில் காணலாம்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கரிம மற்றும் உயிரியல் முறைகளைப் பயன்படுத்தி பருத்திக்காய் அழுகலை முழுமையாகக் கட்டுப்படுத்துவது சவாலானது. ஆராய்ச்சியாளர்கள் டிரைக்கோடெர்மா விரிடே போன்ற விருப்பத்தேர்வுகளை ஆராய்ந்து வருகின்றனர், ஆனால் இது வணிக ரீதியாக இன்னும் பயன்பாட்டிற்குக் கிடைக்கவில்லை.

இரசாயன கட்டுப்பாடு

முதலில், நோய்ப் பரவுவதைத் தடுக்க காப்பர் ஆக்ஸிகுளோரைடு மற்றும் மான்கோசெப் ஆகியவற்றை இலைகள் மற்றும் விதைகளில் தெளிக்கவும். மேலும், பல்வேறு நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட நுண்துகள் கரைசல் செறிவூட்டலில் ஃப்ளக்ஸபைரோஸாட் மற்றும் பைராக்ளோஸ்ட்ரோபின் ஆகியவற்றைக் கலக்கவும். நீங்கள் முதன் முதலில் நோயைக் கவனிக்கும்போது இந்தக் கலவையைப் பயன்படுத்துங்கள் மற்றும் முழுமையான கட்டுப்பாட்டிற்காக 15 நாட்களுக்குப் பிறகு இந்தச் சிகிச்சையை மீண்டும் செய்யவும். பூச்சிக்கொல்லிகள் அல்லது ஏதேனும் இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது, ​​பாதுகாப்பு ஆடைகளை அணிவது மற்றும் லேபிளின் வழிமுறைகளை கவனமாகப் படிக்க வேண்டியது அவசியம். நாட்டிற்கு ஏற்ப விதிமுறைகள் மாறுபடும், எனவே உங்கள் பகுதிக்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதிசெய்யவும். இது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் மற்றும் வெற்றிகரமாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

மண் மற்றும் விதைகளில் உள்ள பல்வேறு பூஞ்சைகளால் பருத்திக்காய் அழுகல் நோய் ஏற்படுகிறது. அதிகப்படியான நைட்ரஜன், அதிக நீர், மழை மற்றும் அதிக ஈரப்பதம் போன்ற காரணிகள் ஆபத்தை அதிகரிக்கும். செடியின் அடிப்பகுதியில் வெடிக்காத காய்களில் இந்நோய் அதிகமாக இருக்கும் மற்றும் இந்நோய் பொதுவாக விதைத்த 100 நாட்களுக்குப் பிறகு தோன்றும். பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் பருத்திக்காய்களில் வெடிப்புகள் அல்லது காயங்கள் மூலம் நுழைகின்றன, இந்த வெடிப்புகளும் காயங்களும் பெரும்பாலும் காய்ப்புழுக்கள் மற்றும் சிவப்புப் பருத்தி பூச்சிகள் போன்ற பூச்சிகளால் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட காய்களில் பூஞ்சைகளால் உற்பத்தி செய்யப்படும் காற்றில் பரவும் பூஞ்சை வித்துகள் மூலமாகவும் இந்த நோய் பரவுகிறது.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான விதைகளைப் பயன்படுத்தவும்.
  • அதிகப்படியான நைட்ரஜனைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, முறையாக நீர்ப்பாசனம் செய்யவும்.
  • தாமதமாக விதைப்பதைத் தவிர்க்கவும்.
  • பரந்த இடைவெளியை கடைபிடிக்கவும்.
  • மழைக்காலத்தில் தாவரங்களின் கீழ்பகுதியில் உள்ள முதிர்ந்த பருத்திக்காய்களில், அறிகுறிகள் உள்ளதா எனத் தவறாமல் சரிபார்க்கவும்.
  • காய்ப்புழு மற்றும் சிவப்புப் பருத்திப் பூச்சி போன்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது அவற்றின் சொந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, ஆனால் இது இந்த விஷயத்திலும் முக்கியமானது.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க