பட்டாணி

வயல் பட்டாணியின் கரும்புள்ளி நோய்

Mycosphaerella pinodes and Phoma medicaginis var. pinodella

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இலைகள் மற்றும் காய்களில் புள்ளிகளைக் காணலாம்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் காய்களில் ஒழுங்கற்ற வடிவில் அடர் பழுப்பு முதல் கருப்பு நிறம் வரையான காயங்கள் அல்லது புள்ளிகள் ஏற்படும்.
  • நீர் தோய்த்த பழுப்பு அல்லது ஊதா-கருப்பு நிறமாற்றத்தையும் காணலாம்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
பட்டாணி

பட்டாணி

அறிகுறிகள்

கரும்புள்ளி நோயானது தண்டுகள், இலைகள், காய்கள் மற்றும் விதைகளில் காயங்களை ஏற்படுத்தும். ஈரப்பதமான சூழ்நிலையில், ஆரம்ப அறிகுறிகளானது பொதுவாக தாவர விதானத்தின் கீழ், இலைகளின் கீழ் பக்கத்தில் மற்றும் தண்டுகளில் காணப்படுகின்றன. ஒழுங்கற்ற வடிவில் சிறிய, கரும்பழுப்பு நிற புள்ளிகள் இலை மேற்பரப்பில் சிதறிக் காணப்படும். ஈரப்பதமான சூழ்நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், புள்ளிகள் பெரிதாகி ஒன்றிணைந்துவிடும், இதன் விளைவாக கீழ் இலைகள் முற்றிலும் கருகிவிடும். கீழ் தண்டில் உள்ள காயங்கள் ஊதா கலந்த கருப்பு கோடுகளாக தோன்றும், இது தாவரத்தின் அடிப்பகுதியில் அழுகலை ஏற்படுத்தும், இது பயிர் சாய்ந்து விடுவதற்கு வழிவகுக்கும். காய்களில் உள்ள புள்ளிகள் ஊதா கலந்த கருப்பு நிறத்தில் இருக்கும், இவை நீர் தோய்த்த பகுதிகளை உருவாக்க ஒன்றிணைந்து விடும். பாதிக்கப்பட்ட விதைகள் நிறமாற்றம் அடைந்து, ஊதா கலந்த பழுப்பு நிறமாக காட்சியளிக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இரகங்களை பயிர் செய்யவும்.

இரசாயன கட்டுப்பாடு

தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கிடைக்கக்கூடிய உயிரியல் சிகிச்சைகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். அனைத்து பட்டாணி விதைகளையும் மான்கோசெப் போன்ற பூஞ்சைக் கொல்லியைக் கொண்டு சிகிச்சையளிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

மைக்கோஸ்பேரெல்லா பினோட்ஸ், ஃபோமா மெடிகாஜினிஸ் வேரியன்ட். பினோடெல்லா என்ற பூஞ்சையால் இந்தச் சேதம் ஏற்படுகிறது. இவை விதை மூலம் பரவலாம், மண் மூலம் பரவலாம் அல்லது பட்டாணி குப்பையில் வாழலாம். முதிர்ந்த பட்டாணி பயிர்த்தாள்களில் பூஞ்சை வித்துக்கள் உற்பத்தியாகி, அங்கு தேங்கி இருக்கும்போது, நோய் பொதுவாக காலூன்றும், மேலும் இது புதிய பயிருக்கு காற்று மூலம் பரவும். தாவர வளர்ச்சியின் எந்தக் கட்டத்திலும் தொற்று ஏற்படலாம். பாதிக்கப்பட்ட தாவரங்களில் உற்பத்தி செய்யப்படும் வித்துகள் காற்று மற்றும் மழை சாரல் மூலம் அருகிலுள்ள ஆரோக்கியமான தாவரங்களுக்கு பரவுகின்றன. பாதிக்கப்பட்ட விதைகளை விதைப்பதன் மூலமும் இந்நோய் வேரூன்றலாம். ஈரமான காலநிலையில், நோய் இன்னமும் வேகமாக பரவக்கூடும். ஒரு வறண்ட ஆண்டில், பாதிக்கப்பட்ட விதைகளை நடவு செய்வது நோயுற்ற பயிரை உற்பத்தி செய்யாமல் போனாலும், ஈரப்பதமான சூழல் நிலவும்போது கடுமையான நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்நோய்க்கு காரணமான பூஞ்சைகள் மண்ணில் பல ஆண்டுகள் உயிர் வாழக்கூடியவை.


தடுப்பு முறைகள்

  • சுத்தமான சாகுபடியை மேற்கொள்ளுங்கள்.
  • நடவு செய்யும் போது, கடந்த ஆண்டு பயிர் செய்த பட்டாணி தோட்டத்தில் இருந்து குறைந்தது 500 மீ தள்ளி நடவு செய்ய முயற்சிக்க வேண்டும்.
  • முதிர்ந்த அல்லது சேதமடைந்த விதைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், இவை நாற்றுகளின் வீரியத்தைக் குறைக்கும் மற்றும் தொற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
  • அதிக விதைப்பு விகிதத்தில் முன்கூட்டியே விதைப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது நோய்கிருமிகளால் பட்டாணி நாற்றுகள் பாதிக்கப்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது, மேலும் இது பெரிய விதானம், அதிகம் சாயக்கூடியத் தன்மை மற்றும் அதிக ஈரப்பதம் கொண்ட பயிர்களை உற்பத்தி செய்கிறது; இவை அனைத்தும் நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கின்றன.
  • முடிந்தவரை பயிர் சுழற்சியை மேற்கொள்ளுங்கள்.
  • பட்டாணியை 3 ஆண்டுகளில் ஒரு முறைக்கு மேல் ஒரே தோட்டத்தில் பயிர் செய்யக் கூடாது.
  • நோய் ஏற்பட்டால், பயிர் சுழற்சியை 4 அல்லது 5 ஆண்டுகளில் 1 முறை என நீட்டிக்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட பட்டாணி குப்பைகள் மற்றும் சுயமாக விதைக்கப்பட்ட செடிகளை மேய்ச்சல் மற்றும் எரிப்பதன் மூலம் அழித்து விடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க