நிலக்கடலை

மிளகுப் புள்ளி மற்றும் வெப்பக் கருகல் நோய்

Leptosphaerulina arachidicola

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இலைகளின் நுனியில் பெரிய வி- வடிவில் வெப்பத்தால் கருகிய பகுதிகள் ஏற்படும்.
  • மிளகுப் புள்ளி இலைகளின் மேல் பக்கங்களில் சிறிய கருமையான புண்களாக (1 மிமீக்கும் குறைவாக) உருவாகும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

நிலக்கடலை

அறிகுறிகள்

மிளகுப் புள்ளி கட்டமானது மண்ணின் மேற்பரப்பிற்கு அருகில் உள்ள கீழ்புற இலைகளில் சிறிய சிதைந்த புள்ளிகளால் வகைப்படுத்தப்படுகிறது. புள்ளிகள் ஏராளமாக இருக்கும், மேலும் அவை குண்டூசி அளவில் இருக்கும். இலையின் வி- வடிவ பகுதி இறந்து (பொதுவாக ஓரத்தில்), அதற்குப் பக்கத்தில் ஒரு மஞ்சள் நிற பகுதி உருவாகும்போது வெப்பத்தினால் கருகல் ஏற்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளை நடவு செய்யவும்.

இரசாயன கட்டுப்பாடு

தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கிடைக்கக்கூடிய உயிரியல் சிகிச்சையுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். குளோரோதலோனில் போன்ற பிற இலை நோய்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்துங்கள். வேறு எந்த நோயும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றால், பாதுகாப்பு பூஞ்சைக் கொல்லியைப் பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

லெப்டோஸ்பேருலினா அராசிடிகோலா என்ற பூஞ்சையால் இந்நோயின் சேதம் ஏற்படும், இது வேர்க்கடலை கழிவுகளில் உயிர்வாழ்ந்து, காற்று மூலம் பரவும். சிதைந்த இலை திசுக்களில் சூடோதெசியா ஏராளமாக உருவாகும். வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட அஸ்கோஸ்போர்களின் உச்சக்கட்ட பரவல் காலங்கள் பனிக்காலத்தின் முடிவிலும் மழைக் காலத்தின் ஆரம்பத்திலும் ஏற்படும்.


தடுப்பு முறைகள்

  • சீக்கிரமே விதைத்து, மற்றும் பயிர் சுழற்சி செய்வதை கடைப்பிடியுங்கள்.
  • நோய்க்கிருமி அதிகரிப்பதையும் பரவுவதையும் குறைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க