கொய்யா

கொய்யாவின் சொறிநோய்

Pestalotiopsis psidii

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • பழங்களில் பழுப்பு நிறத்தில், துருப்பிடித்த சிதைந்த பகுதிகள் சிறிய அளவில் தென்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
கொய்யா

கொய்யா

அறிகுறிகள்

இந்த நோய் பொதுவாக காய்களிலும், அரிதாக இலைகளிலும் ஏற்படுகிறது. பழங்களில் நோய்த்தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் பழுப்பு நிறத்தில், துருப்பிடித்த சிதைந்த பகுதிகளாக சிறிய அளவில் தோன்றும். நோய்த்தொற்று தீவிரமடைந்த கட்டங்களில், சிதைந்த பகுதிகள் இலைகளின் மேற்பரப்பைக் கிழிக்கின்றன. பாதிக்கப்பட்ட பழங்கள் வளர்ச்சியடையாமல், கடினமாக, உருக்குலைந்து விழுந்து விடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பழங்களில் ஏற்படும் காயத்தைத் தடுக்க, பழங்களை நுரைப்பஞ்சு வலைகளைப் பயன்படுத்தி கட்டி வைக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

கிடைக்கக்கூடிய உயிரியல் சிகிச்சைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். போர்டியாக்ஸ் கலவை அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு ஆகியவற்றின் பாதுகாப்புக்கான தெளிப்புகள் நோய் பரவுவதை போதுமான அளவு கட்டுப்படுத்தக்கூடும். மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு இளம் பழங்களுக்கு டைமெத்தோயேட் போன்ற முறை ரீதியான பூச்சிக்கொல்லிகளைப் பாதுகாப்புக்காக பயன்படுத்துவது சாதகமான முடிவுகளைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய் பூஞ்சையினால் ஏற்படுகிறது, உட்செலுத்தும் பொருளின் முதன்மை ஆதாரம் செயலற்ற நிலையில் இருக்கும் மைசீலியம் ஆகும். பூஞ்சையின் விரைவான தாக்குதல் பழங்களில் சேதத்தை ஏற்படுத்தும். காற்றினால் பரவும் பூஞ்சைச்சிதல், நீர் சாரல், பாதிக்கப்பட்ட தாவரங்களுக்கு அருகாமையில் இருத்தல், காயம் மற்றும் பாதிக்கப்பட்ட இலைகளைக் கொண்டு செல்லுதல் ஆகியவை நோய்த்தொற்று பரவலுக்கான இரண்டாம் நிலை காரணியாகும். பூஞ்சையானது ஈரப்பதமான சூழலில் 20 முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அடர்த்தியான விதானம் மற்றும் போதுமான காற்றோட்டம் இல்லாத நிலையில் வளரும்.


தடுப்பு முறைகள்

  • நோயைக் குறைக்க கோடைகால நீர்ப்பாசனம் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை ஆகியவற்றைப் பயிற்சி செய்யுங்கள்.
  • பழங்களில் காயம் ஏற்படாமல் இருக்க நுரைப்பஞ்சு வலைகளைப் பயன்படுத்தி பேரிக்காய் அளவுள்ள பழங்களை கட்டி வைக்கவும்.
  • நோய்க்கிருமியானது முதன்மையாக காயத்தில் பரவும் ஒட்டுண்ணி ஆகும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க