திராட்சை

அடி அழுகல் நோய்

Cylindrocarpon

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • கணுவிடைப்பகுதிகள் குட்டையாக இருக்கும்.
  • இலையின் அளவும் இலைத்திரள்களின் அளவும் குறையும்.
  • இலைகள் மஞ்சள் நிறமாகி, வாடிப்போகும்.
  • தரைக்கு சற்று மேலே உள்ள வேர்கள் மற்றும் பட்டைகளில் கருமையான சிதைவுகள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

திராட்சை

அறிகுறிகள்

இளம் கொடிகள் பாதிக்கப்பட்டு, குட்டையான கணுவிடைப்பகுதிகளின் அறிகுறிகளைக் காட்டும், இலையின் அளவு மற்றும் இலைத்திரளின் அளவும் குறையும். 3 முதல் 5 ஆண்டுகள் ஆன கொடியின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, வாடி, காலப்போக்கில் உதிர்ந்துவிடும். வேர்கள் குறைந்து, சுருங்கி, கருமையான புண்கள் அல்லது சிதைவுகள் அவற்றில் காணப்படும், இதனால் முழு தாவரமும் வாடி நுனியிலிருந்து கருகி இறந்துவிடும். வேர் திசுக்களில் ஊதா நிறமாற்றம் பொதுவானது. பாதிக்கப்பட்ட கொடிகள் சிறிய அளவிலான மரப்பட்டைகள், குட்டையான கணுவிடைப்பகுதிகள், பிற மரத்துடன் ஒப்பிடுகையில் சீரற்ற முதிர்ச்சி ஆகியவற்றுடன் குறைந்த வீரியத்தைக் கொண்டிருக்கும். பாதிக்கப்பட்ட கொடிகளின் அகணி திசு இறுக்கமாகி, நிறமாற்றத்தையும் காட்டும். இளம் கொடிகள் மிக விரைவாக பாதிக்கப்படுகின்றன, அதே சமயம் முதிர்ந்த கொடிகள் படிப்படியாக வீழ்ச்சியைக் காட்டுகின்றன. இளம் கொடிகள் தாக்கப்பட்டால், அவை மிக விரைவாக இறந்துவிடுகின்றன, ஆனால் கொடிகள் முதிர்ச்சி அடையும்போது, அது படிப்படியாக வீழ்ச்சியைச் சந்திக்கிறது, மேலும் அது பட்டுப்போவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் கூட ஆகலாம்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சீர்திருத்தம் செய்வதினால் ஏற்படும் காயங்கள், தாவரத்தின் பதியன்கள், ஒட்டு முறைக்கு பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றின் மீது டிரைக்கோடெர்மா இனங்களைப் பயன்படுத்தவும். செயலற்ற நாற்றங்கால் கொடிகளை 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ள சுடுநீர் கலந்த டிரைக்கோடெர்மா கொண்டு சிகிச்சை அளிக்கவும். டிரைக்கோடெர்மா இனங்கள், மைக்கோர்ரிசே மற்றும் உரம் ஆகியவற்றைக் கொண்ட மண் திருத்தங்கள், தாவரங்கள் பற்றாக்குறை சூழ்நிலைகளுக்கு உட்பட்டால் தாவர எதிர்ப்பை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். இன்றுவரை, இந்த பூஞ்சைக்கு எதிராக எந்த இரசாயன முறைகளும் உருவாக்கப்படவில்லை.

இது எதனால் ஏற்படுகிறது

திராட்சைக் கொடிகளில் கருப்பு நிற அடி அழுகல் நோயின் அறிகுறிகள் சிலிண்ட்ரோகபோனின் மண் மூலம் பரவும் பூஞ்சையால் ஏற்படுகின்றன. முக்கியமாக 2 முதல் 8 வயதுடைய இளம் திராட்சைப்பழங்கள் இந்தப் பூஞ்சைகளால் பாதிக்கப்படுகின்றன. பூஞ்சைகள் வேர்களில் உள்ள காயங்கள் அல்லது வேர்களில் இயற்கையாக இருக்கும் ஓட்டைகள் மூலம் கொடிக்குள் நுழைகின்றன. திராட்சைப்பழங்கள் தண்ணீர் அல்லது ஊட்டச்சத்து பற்றாக்குறையில் இருக்கும் போது நோய்க்கு ஆளாகின்றன. இளம் செடிகளில் அதிக பயிர்ச் சுமை, மோசமான வடிகால் மற்றும் மண் இறுக்கம் ஆகியவையும் நோய் பெருக்கத்திற்கு சாதகமாக இருக்கும்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் திராட்சைக் கொடிகளை நன்கு வடிகால் உடைய மண் அல்லது உயரமான பாத்திகளில் நடவும்.
  • ஆரோக்கியமான மற்றும் தரமான கொடிகளை மட்டுமே நடவு செய்யவும்.
  • சொட்டு நீர் பாசனம் செய்வதன் மூலமும் முறையாக உரமிடுவதன் மூலமும் தாவரத்திற்கு ஏற்படும் பற்றாக்குறையைத் தவிர்க்கவும்.
  • கொடிகளுக்கு நோய் வராமல் பாதுகாக்க காயங்களை கத்தரித்து சீர்த்திருத்தம் செய்யும்போதும் அல்லது பதியனிடும்போதும் கடுமையான சுகாதார மேலாண்மையை கடைப்பிடிக்கவும்.
  • பதியனிட்ட பிறகு உங்கள் கொடிகளை உடனடியாக தாவர வளர்ச்சி சீராக்கிகள் கொண்ட மெழுகுகளில் அல்லது பூஞ்சைக் கொல்லிகளில் நனைக்கவும்.
  • சாத்தியமானால், மீண்டும் நடவு செய்வதற்கு முன் நிலத்தை சிறிது காலம் தரிசாக விடுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க