திராட்சை

திராட்சையின் கருப்பு அழுகல் நோய்

Phyllosticta ampelicida

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • அடர் நிற ஓரங்களுடன் இலையில் புள்ளிகள் காணப்படும்.
  • தளிர்கள், தண்டுகள் மற்றும் இலை தண்டுகளும் பாதிக்கப்படுகின்றன.
  • பழங்களில் கருப்பு நிற அழுகலை காணலாம்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

திராட்சை

அறிகுறிகள்

இலைகளில் ஒழுங்கற்ற புள்ளிகள் காணப்படும், இவை அடர் நிற கோட்டினால் கட்டமைக்கப்பட்டிருக்கும். தளிர்கள், தண்டுகள் மற்றும் இலை தண்டுகள் ஆகியவற்றில் இந்தப் புள்ளிகளின் அறிகுறிகளைக் காட்டலாம். இலை தண்டுகள் பாதிக்கப்பட்டால் முழு இலைகளும் காய்ந்துவிடும். திராட்சைகள் முதன் முதலில் சாம்பல் நிறமாற்றங்களைக் காண்பிக்கும், பின்னர் அவை சிவப்பு கலந்த பழுப்பு அல்லது ஊதா நிற புள்ளிகளாக மாறும். பழம் சிதைந்து, இறுதியில் சுருங்கி, காய்ந்து கருப்பு நிறமாக மாறும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பூக்கும் நிலை முடிந்த உடனேயே பேசிலஸ் துரிஞ்சியென்சிஸ் மருந்தை தெளிக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

இரசாயன பயன்பாடுகள் தடுப்பு முறையாக மேற்கொள்ளப்படுகின்றன. பூப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கேப்டான் + மைக்கோபுடானில் அல்லது மான்கோசெப் + மைக்கோபுடானில் ஆகியவற்றைத் தெளிக்கத் தொடங்குங்கள். பூக்களின் இதழ் மலர்வதற்கு முன்பு நீங்கள் கார்பரில் அல்லது இமிடாக்ளோபிரிட் பயன்படுத்தலாம். பூக்கும் காலத்திற்குப் பின் மான்கோசெப் + மைக்கோபுட்டானில், இமிடாக்ளோபிரிட் அல்லது அசாடிராக்டின் ஆகியவற்றைத் தெளிக்கவும். பூப்பூத்த பத்து நாட்களுக்குப் பிறகு நீங்கள் உங்கள் கொடியின் மீது கேப்டான் மற்றும் கந்தக கலவையைப் பயன்படுத்தலாம். பெரும்பாலான திராட்சை வகைகள் பூக்கும் காலத்தின் மூன்று முதல் நான்கு வாரங்களுக்குப் பிறகு நோய்த்தொற்றுக்கு எதிர்ப்பைக் காட்டும் என்பதால், அந்த நேரத்தில் இரசாயன தெளிப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

பைலோஸ்டிக்டா ஆம்பெலிசிடா என்ற பூஞ்சையால் இந்நோயின் பாதிப்பு ஏற்படுகிறது. நோய்க்கிருமியானது திராட்சைக் கொடிகள் அல்லது மண்ணில் பாதிக்கப்பட்ட தளிர்கள் அல்லது காய்ந்த பழங்களில் குளிர்காலத்தை கழிக்கும். வித்துக்கள் இலேசான மழையால் வெளியேற்றப்பட்டு, பின்னர் காற்றின் மூலம் பரவும். உகந்த வளர்ச்சி நிலைமைகள் 25° செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 6 மணிநேர நிலையான இலை ஈரப்பதத்தின்போது அடையப்படுகின்றன. பூஞ்சையானது சூடான மற்றும் ஈரப்பதமான காலநிலையை விரும்புகிறது. பழங்களின் விளைச்சல் குறையும்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பகுதியில் கிடைத்தால் அதிக எதிர்ப்புத் திறன் கொண்ட வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
  • கொடியிலிருந்து காய்ந்த பழங்களை அகற்றிவிடவும்.
  • பாதிக்கப்பட்ட மரம் மற்றும் கொடிகளை அறுவடை செய்த பின் அகற்றி அழிக்க வேண்டும்.
  • மேலும் திராட்சைத் தோட்டத்திலிருந்து பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றவும்.
  • உங்கள் திராட்சைத் தோட்டத்தில் களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • பழத்தோட்டங்களில் முறையான காற்றோட்டத்தையும் சூரிய வெளிச்சத்தையும் வழங்கவும்.
  • கொடிகள் வளரும் கட்டத்தை அடைவதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் உங்கள் கொடிகளை கத்தரித்து, சீர்திருத்தம் செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க