மாங்கனி

மாம்பழத் தண்டின் அடி அழுகல் நோய்

Lasiodiplodia theobromae

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • பழம், பட்டை மற்றும் இலைகளின் நிறமாற்றம்.
  • கிளைகள் நுனியிலிருந்து கருகி இறந்துபோகும்.
  • இலையுதிர்வு ஏற்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மாங்கனி

அறிகுறிகள்

சிறு கிளைகள் மற்றும் கிளைகள் காய்ந்து, நுனியிலிருந்து கருகி இறந்துபோகும் இலையுதிர்வு ஏற்படும். இலைகள் கருமை நிறமாகி, ஓரங்கள் சுருண்டுகொள்ளும். மரத்திலிருந்து சிறுகிளைகள் இறந்து விழும். தொற்று ஏற்பட்ட பகுதியைச் சுற்றிலும் சொறிநோய்கள் தோன்றும், இது பின்னர் திசு இறப்பு (பாதிக்கப்பட்ட தாவரப் பகுதியை கருமையாக்குதல்), மரம் கருகி இறந்துபோவதற்கு வழிவகுக்கும். கிளைகளில் இருந்து பசைத் துளிகள் வடியலாம், அவை பின்னர் கிளையின் பெரும்பகுதியை மறைக்கக்கூடும். பழ அழுகல் பெரும்பாலும் அறுவடைக்குப் பின் காணப்படும், தண்டு அடியில் இருந்து இது தொடங்கும். பாதிக்கப்பட்ட பகுதி முதலில் சாம்பல் நிறமாக மாறி பின்னர் கருப்பு நிறமாக மாறும். கடுமையான தொற்றுநோய்களின் கீழ், பழங்கள் முற்றிலும் அழுகி, காய்ந்து சுருங்கிவிடும். பழத்தின் சதையும் நிறம் மாறிப்போகும். பழங்களில், காம்பின் அடிப்பகுதிக்கு அருகில் விதையுறை கருமையாகும். பாதிக்கப்பட்ட பகுதி வட்ட வடிவில் கருந்திட்டை உருவாக்கிட பெரிதாகி, ஈரப்பதமான வெப்பநிலையில் விரைவாக விரிவடைந்து, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் முழு பழமும் கருப்பாக மாறிவிடும். கூழ் பழுப்பு நிறமாகவும் மென்மையாகவும் மாறும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பேசில்லஸ் சப்டிலிஸ் மற்றும் சாந்தோமோனாஸ் ஓரிசே பிவி. ஓரிசே ஆகியவற்றை இந்நோயைக் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். டிரைக்கோடெர்மா ஹார்ஸியானம் மருந்தையும் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். நோய் பரவுவதைத் தடுக்க, தாவரத்தை சீர்திருத்தம் செய்தபிறகு, பெரிய வெட்டுக்களில் பூஞ்சைக் கொல்லிகளை (வண்ணப்பூச்சுகள், பேஸ்ட்கள்) பயன்படுத்தலாம். நோயின் தீவிரத்தைக் குறைக்க கார்பென்டாசிம் (50 WP) அல்லது தியோபனேட்-மெத்தில் (70 WP) 1 பிபிஎம் ஏ. ஐ அல்லது அதிகளவு தெளிக்கவும். அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன் கார்பென்டாசிம் (0.05%) மற்றும் ப்ரோபிகோனாசோல் (0.05%) தெளிப்பது தண்டின் அடி அழுகல் நோயைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அறுவடைக்குப் பின் வெந்நீர் மற்றும் கார்பென்டாசிம் உடனான சிகிச்சையானது தண்டின் அடி அழுகல் நோய்க்கு எதிராக ஓரளவு பயனுள்ளதாக இருக்கும். சேமித்து வைத்திருக்கும் கட்டுப்பாடான சூழலில் தண்டின் அடி அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, சூடான கார்பென்டாசிம், அதனைத் தொடர்ந்து ப்ரோக்ளோராஸைப் பயன்படுத்தி இருமுறை சிகிச்சை செய்வது அவசியம்.

இது எதனால் ஏற்படுகிறது

மண்ணில் பரவும் பூஞ்சையான லாசியோடிப்ளிடியா தியோப்ரோமா மூலம் இந்நோயின் சேதம் ஏற்படுகிறது, இது பல்வேறு வகையான புரவலன்களைக் கொண்டுள்ளது, மேலும் இது வெப்பமண்டலங்கள் மற்றும் துணை வெப்பமண்டலங்கள் முழுவதும் காணப்படுகிறது. இது வயலில் உள்ள பயிர்களையும் சேமித்து வைக்கும் பழங்களையும் சேதப்படுத்தும். இது பயிர் எச்சங்களில் கருஇல்லா விதைக்குடுவையாக (பைக்னிடியாவாக) உயிர்வாழ்கிறது. வித்துக்கள் காற்று மற்றும் மழைச் சாரல் மூலம் சிதறி, புதிதாக வெட்டப்பட்ட அல்லது சேதமடைந்த தாவர பாகங்கள் வழியாக புரவலனுக்குள் இப்பூஞ்சை நுழையலாம். நீர் அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட தாவரங்களில் மிகவும் கடுமையான அறிகுறிகள் தென்படும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவு நோய் பரவலுக்குச் சாதகமாக இருக்கும்.


தடுப்பு முறைகள்

  • நல்ல சுகாதாரமான நடைமுறைகளைப் பயிற்சி செய்யுங்கள்.
  • ஈரமான காலநிலையில் தாவரங்களைச் சீர்திருத்தம் செய்வதைத் தவிர்த்து, அதனால் ஏற்படும் காயங்களைக் குறைக்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவர பாகங்களை அகற்றவும்.
  • நீங்கள் அறுவடை செய்த பழங்களை 48 டிகிரி செல்சியஸ் சூடான நீரில் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
  • உங்கள் பழங்களை 10 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலையில் சேமித்து வைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க