முட்டைக்கோசு

வளைய புள்ளி நோய்

Mycosphaerella brassicicola

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • மஞ்சள் ஒளிவட்டத்தால் அடர் நிற புள்ளிகள் சூழப்பட்டிருக்கும்.
  • புள்ளிகளுக்குள் செறிவுடைய அடர் நிற வளையங்கள் காணப்படும்.
  • இலைகள் மஞ்சள் நிறமாகும்.
  • இலைகள் முன்கூட்டியே உதிரும்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
முட்டைக்கோசு
பூக்கோசு.

முட்டைக்கோசு

அறிகுறிகள்

அறிகுறிகள் பொதுவாக முதிர்ந்த இலைகளில் அதிகம் காணப்படும், ஆனால் இளம் இலைகள் பாதிக்கப்பட்டால் அறிகுறிகள் தீவிரமடையும். ஆரம்பத்தில் இலை மேற்பரப்புகளில் 3-5 மிமீ அளவு சிறிய அடர் நிற புள்ளிகள் மஞ்சள் நிற ஒளிவட்டத்தால் சூழப்பட்டிருப்பதைக் காணலாம். இவை பச்சை கலந்த பழுப்பு அல்லது சாம்பல் கலந்த கருப்பு நிறத்தில் இருக்கும், இவை இலை நரம்புகளால் பிரிக்கப்பட்டு இறுதியில் 2-3 செ.மீ அளவு இருக்கும். புள்ளிகளுக்குள் இருக்கும் சிறிய அடர்நிற புள்ளிகள் செறிவுடைய வளையங்களை உருவாக்கும். புள்ளிகள் ஒன்றிணைந்து இலையை மஞ்சள் நிறமாக்கும். கடுமையான தொற்றுநோய்களின் கீழ், இது முன்கூட்டியே இலையுதிர்வுக்கு வழிவகுக்கும். வளைய புள்ளி பூஞ்சையால் ஏற்படும் புள்ளிகள் ஆல்டர்னேரியா இனங்களால் ஏற்படும் புள்ளிகளைப் போலவே இருக்கும். முக்கிய வித்தியாசம் என்னவென்றால், வளைய புள்ளியில் உள்ள சிதைவுகள் சாம்பல் நிறத்தில் இருக்கும், மேலும் அவை செறிவுடைய வளையங்களில் கருப்பு நிறத்தில், குண்டூசி தலை அளவு புள்ளிகளைக் கொண்டிருக்கும். நிலத்திற்கு மேலே உள்ள அனைத்து தாவர பகுதிகளும் அறிகுறிகளைக் காட்ட ஆரம்பிக்கலாம். வித்துக்களை உற்பத்தி செய்யும் பாகங்களில் உள்ள சிதைவுகள் ஒவ்வொன்றும் அடர் நிறத்தில் செறிவூட்டப்பட்ட வளையங்களைக் கொண்டிருக்கும், அது மஞ்சள் நிற பகுதிகளால் சூழப்பட்ட வரையறை உடைய ஓரங்களைக் கொண்டிருக்கும். கடுமையான நோய்த் தாக்குதல்களின் கீழ் புள்ளிகள் ஒன்றிணைந்து, முழுத் தாவரமும் பாதிக்கப்பட்டு கருமையாகலாம். விதைத் தண்டுகளில், பூஞ்சையானது 2,4-டி என்ற களைக்கொல்லியால் ஏற்படும் சிதைவைப் போன்றதை ஏற்படுத்துகிறது. சேமித்து வைக்கப்படும் முட்டைக்கோஸில் கருமையான சிதைவுகள் உருவாகி, ஆழமாக ஊடுருவலாம்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்நோய்க்கு எதிரான உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் எதுவும் இன்றுவரை நமக்குத் தெரியவில்லை. அறிகுறிகள் தென்படுவதை குறைக்கவோ அல்லது நோய்ப்பூச்சிகளைக் கவரும் தன்மையைக் குறைக்கவோ ஏதேனும் வெற்றிகரமான முறை உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். நடவு செய்வதற்கு முன் உங்கள் விதைகளை திரம் அல்லது மான்கோசெப் கொண்டு சிகிச்சை செய்யவும். குளிர்ந்த மற்றும் ஈரமான காலநிலையில் குளோரோதனோனில், மான்கோசெப் அல்லது தாமிரம் ஆகியவற்றைத் தெளிக்க வேண்டும். நோய்த்தொற்று ஏற்படுவதற்கும் பரவுவதற்கும் சாதகமாக இருக்கும் வகையில், சுற்றுச்சூழல் நிலைமைகள் குளிர்ச்சியாகவும் ஈரமாகவும் இருக்கும் நிலைமைகளில், அதிக எண்ணிக்கையிலான காற்றில் பரவும் வித்துக்களால் தீவிர தாவர வளர்ச்சி நிகழும் இடங்களில் இந்நோயைக் கட்டுப்படுத்துவது கடினமான விஷயமாக இருக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

காற்றில் பரவும் நோய்க்கிருமியான மைக்கோஸ்பேரெல்லா பிராஸ்சிகோலா என்பவற்றால் இந்தச் சேதம் ஏற்படுகிறது. நீர் தெளிப்பு, காற்று மற்றும் மழை மூலம் வித்துகள் பரவுகின்றன. பூஞ்சையின் இனப்பெருக்கத்திற்கு 100% ஈரப்பதம் குறைந்தது நான்கு நாட்கள் நீடிக்க வேண்டும். 16-20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் மோசமான மண் வடிகால் ஆகியவை நோய்க்கிருமியின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும். இந்த நோய் பெரும்பாலும் விதை உற்பத்தியில் பிரச்சனையாக இருக்கும், மேலும் விதைகள் நோய்க்கிருமியை பரப்பக்கூடும். பூஞ்சையானது பாதிக்கப்பட்ட களைகள் மற்றும் பயிர் புரவலன்கள் அல்லது எச்சங்களில் கூட குளிர்காலத்தை கழிக்கும். வித்துகள் காற்றினால் பரவுகின்றன. குளிர்ந்த ஈரமான வானிலை இந்த நோய் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது.


தடுப்பு முறைகள்

  • உங்களது பகுதியில் கிடைத்தால் எதிர்ப்புத் திறன் கொண்ட வகைகளைப் பயன்படுத்தவும்.
  • உங்கள் நாற்றுப்பண்ணையில் உள்ள தாவரங்களில் இலைப்புள்ளிகள் ஏதேனும் தென்படுகிறதா என கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றவும் அல்லது அதிக இலைகளில் புள்ளிகள் இருந்தால், நாற்றுகளை அழித்து விடவும்.
  • உங்கள் வயலில் ஆரோக்கியமாக இருக்கும் நாற்றுகளை மட்டும் நடவு செய்யவும்.
  • உங்கள் வயலில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள களைகளை அகற்றி அழித்து விடவும், ஏனெனில் இவை மாற்றுப் புரவலன்களாக இருக்கலாம்.
  • பயிரின் எச்சங்களை சேகரித்து அவற்றை எரித்தல் அல்லது புதைத்தல் மூலம் அழிக்கவும்.
  • மாற்றாக, பாதிக்கப்பட்ட எச்சகளை வயலிலேயே உழவும் செய்துவிடலாம்.
  • வயலில் மீண்டும் நடவு செய்வதற்கு முன் எச்சங்கள் முற்றிலும் அழுகும் வரை காத்திருக்கவும்.
  • 2-3 ஆண்டுகள் புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி செய்வது குறித்து கருத்தில் கொள்ளுங்கள்.
  • விதைகளை 122 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் உள்ள சூடான நீரில் 30 நிமிடங்களுக்கு கழுவவும்.
  • இது விதை மூலம் பரவும் பொருட்களை அகற்ற உதவுகிறது.
  • அனைத்து விதைகளுக்கும் சிகிச்சை அளிப்பதற்கு முன் ஒவ்வொரு விதை தொகுதியில் இருந்தும் சிறிய அளவு விதைகளை எடுத்து சிகிச்சை செய்து, அதன் முளைப்புத் திறனை சோதித்துப் பாருங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க