Fusarium mangiferae
பூஞ்சைக்காளான்
பியூசேரியம் மங்கிஃபெரே என்ற பூஞ்சை இனத்தால் இந்த நோய் ஏற்படுகிறது. வளரும் தாவரங்களின் உருக்குலைவு பொதுவாக இளம் நாற்றுகளில் காணப்படுகிறது. நாற்றுகளில் சிறிய செதில் இலைகளுடன் சிறிய தளிர்கள் முளைத்து, அந்த தளிரின் உச்சியில் கொத்து போன்ற தோற்றம் காணப்படுகிறது. நாற்றுகள் வளர்ச்சி குன்றியதாகவே இருந்து, இறுதியில் இறந்துவிடும். மஞ்சரிகளின் உருக்குலைவில் கதிர்களின் வேறுபாட்டினை காணலாம். பெரிய பூக்களின் காரணமாக பெரிதும் சிதைந்த கதிர்கள் நெருக்கமாகவும், கொத்தாகவும் இருக்கும். பாதிக்கப்பட்ட தாவரங்கள் அடர்த்தியான தளிர்கள் மற்றும் பூக்களுடன் அசாதாரணமாக உருவாகுகின்றன. இலை மற்றும் தண்டு மொட்டுகள் போன்ற வளர்ந்து வரும் பகுதிகள் குறுகிய கணுவிடைப்பகுதிகள் மற்றும் உடையக்கூடிய இலைகளுடன் உருக்குலைந்த தளிர்களை உருவாக்குகின்றன. ஆரோக்கியமான தாவரங்களை விட இலைகள் கணிசமாக சிறியதாக இருக்கும். ஒரு தாவரத்தில் ஒரே நேரத்தில் இயல்பான மற்றும் உருக்குலைந்த வளர்ச்சி இருக்கலாம்.
தொற்றுநோயைக் குறைக்க டடுரா ஸ்ட்ராமோனியம் (ஆல்கலாய்டுகள்), கலோட்ரோபிஸ் ஜிகாண்டி மற்றும் வேப்பமரம் (அசாதிராச்டின்) ஆகியவற்றின் இலைச் சாற்றைப் பயன்படுத்தவும். டிரைகோடெர்மா ஹார்சியானம் நோய்க்கிருமியின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். நோயுற்ற தாவரங்கள் அழிக்கப்பட வேண்டும். நோய் இல்லாத நடவுப் பொருளைப் பயன்படுத்துங்கள். பாதிக்கப்பட்ட மரங்களிலின் தண்டு குச்சிகளைப் பயன்படுத்தக்கூடாது.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். கேப்டன் 0.1% நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஃபோலிடோல் அல்லது மெட்டாசிஸ்டாக்ஸ் என்கிற பூச்சிக்கொல்லிகளை ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கையாக தெளிக்கவும். பூக்கும் கட்டத்தில் கார்பென்டாசிம் 0.1% என்பவற்றை 10, 15 அல்லது 30 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும். நாப்தலீன் அசிட்டிக் அமிலம் (என்ஏஏ) @ 100 அல்லது 200 பிபிஎம் அடுத்த பருவத்தில் நோய் ஏற்படுவதைக் குறைக்கிறது. துத்தநாகம், போரான் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் சிறிதளவு கூறுகளுடன் பூப்பதற்கு முன் மற்றும் பழ அறுவடைக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் தெளிப்பானது குழைவுரு நோய் ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது அல்லது குறைக்கிறது.
இந்த நோய் முக்கியமாக பாதிக்கப்பட்ட தாவரப் பொருட்கள் வழியாக பரவுகிறது. அதிகப்படியான மண் ஈரப்பதம், பூச்சி தொற்று, பூஞ்சை தொற்று, வைரஸ், களைக்கொல்லிகள் மற்றும் பிற நச்சு கலவைகள் பூஞ்சை உற்பத்திக்கு உதவுகின்றன. இரும்பு, துத்தநாகம் மற்றும் தாமிரத்தின் குறைபாடும் உருக்குலைவை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட பழத்தோட்டங்களுக்குள் இந்த நோய் மெதுவாக பரவுகிறது. 10 - 15 ° செல்சியஸ் வெப்பநிலை பூக்கும் போது வளர்ச்சியை ஆதரிக்கிறது.