சோயாமொச்சை

சோயா மொச்சையின் ஆல்டெர்னேரியா இலைப்புள்ளி நோய்

Alternaria spp.

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • பாதிக்கப்பட்ட விதைகளில் இருந்து புதிதாக முளைக்கும் நாற்றுகள் அழுகிப்போகும்.
  • இலைத்திரள்களில் பொதுமைய வளையங்களுடன் வட்டவடிவில் பழுப்பு நிறம் முதல் சாம்பல் நிறப் புள்ளிகள் காணப்படும்.
  • இந்த புள்ளிகளின் மையப்பகுதி உலர்ந்து, உதிர்ந்து, "குண்டடி பட்டத் துளை" போன்றத் தோற்றத்தை ஏற்படுத்தும், முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே இலைகள் உதிரக்கூடும்.
  • விதைகள் சிறியதாகி, சுருங்கி, அவற்றின் மேற்பரப்பு ஒழுங்கற்ற, நீர்த்தோய்த்த பகுதிகளாக அடர் நிறத்தில் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
கடுகு எண்ணெய்
சோயாமொச்சை

சோயாமொச்சை

அறிகுறிகள்

அறிகுறிகளானது பல்வேறு விதமான தாவரங்களைப் பொறுத்து சற்று மாறுபடும். பாதிக்கப்பட்ட விதைகளில் இருந்து முளைக்கும் நாற்றுகளில், நோய்க்காரணி பொதுவாக புதிதாக உருவாகும் தாவரங்களில் அழுகல் நோயை ஏற்படுத்தும். முதிர்ந்த செடிகளில், செறிவான வளர்ச்சியை உடைய வட்டவடிவப் புள்ளிகள் மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட ஓரங்கள் முதலில் முதிர்ந்த இலைகளில் உருவாகும். காலப்போக்கில், இந்த இலக்கு போன்ற புள்ளிகளின் மையப்பகுதி, மெல்லிசாகி, காகிதம் போன்று ஆகி, இறுதியாக உதிர்ந்து இலைகளுக்கு "குண்டடி பட்டத் துளை" போன்றத் தோற்றத்தை ஏற்படுத்தும். காயங்கள் ஒருங்கிணைந்து, இணைவதால், இறந்தத் திசுக்கள் முழு இலையையும் விழுங்கி, முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே அவை உதிர்வதற்கு வழிவகுக்கும். முதிர்ந்த காய்களிலும் புள்ளிகள் காணப்படும், இவை சிதையும் அறிகுறிகளுடன் சுருங்கிய, சிறிய, நிறமிழந்த விதைகளுடன் காணப்படும். இருப்பினும், இந்த நோய் பொதுவாக முதிர்ச்சியின் போது ஏற்படுவதால், இது குறைவான விளைச்சல் இழப்பை ஏற்படுத்துகிறது மற்றும் இவற்றுக்கு எந்தவித நிர்வாக பரிந்துரைகளும் தேவையில்லை.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சோயா மொச்சையின் ஆல்டெர்னேரியா இலைப்புள்ளி நோய்க்கு எதிரான உயிரியல் தயாரிப்புகள் எதுவும் இல்லை. செப்பு அடிப்படையிலான பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்துவது (வழக்கமாக சுமார் 2.5 கிராம் / லிட்டர்) கரிம/இயற்கை சிகிச்சைகளுள் அடங்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பருவத்தின் பிந்தைய பகுதியில் இந்த நோய் ஏற்பட்டால், குறிப்பிட்ட மேலாண்மை எதுவும் இந்த நோய்க்குத் தேவைப்படாது. பருவகாலத்தின் ஆரம்பத்தில் நோய் ஏற்பட்டாலோ, பூஞ்சை வளர்ச்சிக்கான உகந்த சூழல்கள் நிலவினாலோ, பூஞ்சைக் கொல்லிகள் பயன்படுத்துவது குறித்து கருத்தில் கொள்ளுங்கள். அந்த சமயத்தில், மான்கோஜெப், அஸோக்சிஸ்டிரோபின் அல்லது பைரக்ளோஸ்டிரோபின் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டத் தயாரிப்புகளை முதல் அறிகுறிகள் தென்பட்டவுடன் பயன்படுத்தலாம். அதிகப்படியாக பாதிப்புகள் ஏற்படும்வரை சிகிச்சைகளைத் தாமதப்படுத்த வேண்டாம், ஏனெனில் அதற்குப் பிறகு அவற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடியாமல் போகக்கூடும். இந்த நோய் ஏற்படுவதைத் தடுக்க, இந்த பூஞ்சைக் கொல்லிகளைக் கொண்டு விதைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

சோயாமொச்சையில், ஆல்டெர்னேரியா இலைப்புள்ளி நோய், ஆல்டெர்னேரியா எஸ்பிபி இனத்தைச் சார்ந்த பல்வேறு பூஞ்சையால் ஏற்படுகிறது. இந்த நோய்க்கிருமிகள் காய்களின் தோலினைத் தகர்த்து, விதைகளைப் பாதித்து, பருவங்களுக்கு இடையில் நோய்த்தொற்று பரவுவதற்கான முக்கிய வழியாக ஆக்குகிறது. இந்தப் பூஞ்சையானது எளிதில் பாதிக்கப்படக்கூடிய களைகள் அல்லது மக்காத பயிர்க் குப்பைகளின் மீது குளிர்காலத்தைச் செயலற்ற நிலையில் கழிக்கும். தாவரங்களுக்கு இடையேயான இரண்டாம்நிலைப் பரப்புகை முக்கியமாக காற்று மூலம் பரவுகிறது, மேலும் அதிக காற்றுடன் கூடிய மழை மற்றும் வெதுவெதுப்பான ஈரமான வானிலை இந்த நோய்த்தொற்றுப் பரவுவதற்கு உகந்ததாக இருக்கிறது. இலை ஈரப்பதம் உகந்ததாக இருக்கும்போது, பூஞ்சையானது மணி நேரங்களுக்குள் முளைத்து, இயற்கைத் துளைகள் மற்றும் பூச்சிகளின் காயங்கள் வழியாக திசுக்களினுள் நுழையும். நோய் வளர்ச்சிக்கு உகந்த வெப்பநிலை 20-27 ° செல்சியஸ் ஆகும். நாற்றுகளாக இருக்கும் போதும் மற்றும் இலைகள் முதிர்ச்சியடையும் பருவத்தின் பிந்தைய நிலையில் தாவரங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடும். மழைக்காலத்தின் பிந்தைய பகுதிகளில் நீர்ப்பாசனம் செய்யப்படும் சோயா பயிர்களில் இந்த நோய் முக்கியமாக ஏற்படக்கூடும் மற்றும் தாவரங்களுக்கு ஏற்படும் கூடுதல் உடலியல் அல்லது ஊட்டச்சத்து அழுத்தங்களும் இவற்றுக்கு இந்த நோய் ஏற்படுவதற்கு உகந்ததாக இருக்கும்.


தடுப்பு முறைகள்

  • சாத்தியமானால் சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து உயர் தரமான, ஆரோக்கியமான விதைகளைப் பயன்படுத்தவும்.
  • உங்கள் பகுதியில் எதிர்ப்புத் திறன் உடைய வகைகள் கிடைக்கிறதா என சோதிக்கவும்.
  • நல்ல காற்றோட்டத்திற்காக தாவரங்களுக்கு இடையே போதுமான இடைவெளி விட்டு நடவு செய்யவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும், பெரும்பாலும் நிலைமைகள் நோய்க்கு சாதகமானதாக இருக்கும்போது கண்காணிக்கவும்.
  • நோய் பாதித்தத் தாவரங்களையும், அருகிலிருக்கும் சுற்றுப்பகுதித் தாவரங்களையும் சேகரித்து, அகற்றி விடவும்.
  • வயல்கள் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள களைகளை அகற்றவும்.
  • இலைத்திரள்கள் ஈரமாக இருக்கும்போது வயலில் பணி செய்வதைத் தவிர்க்கவும்.
  • அறுவடைக்குப் பின் வயலில் இருக்கும் பயிர்க் கழிவுகளை அழித்துவிடவும்.
  • குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்கு நோயினால் எளிதில் பாதிக்காத பயிர்களைக் கொண்டு பயிர்ச் சுழற்சியைத் திட்டமிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க