தக்காளி

நாற்றழுகல் நோய்

Pythium spp.

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • முளைப்பதற்கு முந்தைய நிலையில், மண்ணில் விதைகள் அழுகி, முளைப்பதற்கு முன்னரே நாற்றுகள் இறந்துவிடுகின்றன.
  • முளைத்த பின்பான நிலையானது தண்டின் அடிப்பகுதியில் நீர் தோய்த்த, சாம்பல், பழுப்பு அல்லது கருப்பு நிறத் திசுக்கள் மூலம் வகைப்படுத்தப்படுகிறது.
  • இளம் தாவரங்கள் அல்லது மரங்கள் மண்ணில் சாய்ந்துவிடக்கூடும் மற்றும் வெள்ளை அல்லது சாம்பல் நிறப் பூஞ்சை போன்ற வளர்ச்சி அவற்றை மூடிக்கொள்ளும்.

இதிலும் கூடக் காணப்படும்

37 பயிர்கள்
பார்லிகோதுமை
விதையவரை
பாகற்காய்
முட்டைக்கோசு
மேலும்

தக்காளி

அறிகுறிகள்

நாற்றழுகல் நோய் நாற்று வளர்ச்சியின் போது, முளைப்பதற்கு முன்பு அல்லது முளைத்ததற்கு பின்பு என இரண்டு கட்டங்களில் ஏற்படும். முளைப்பதற்கு முந்தைய நிலையில், விதைத்தபின் பூஞ்சை விதைகளில் குடியேறி, விதையை அழுகச் செய்து, முளைப்பதைத் தடுக்கிறது. முளைத்த பின்பான நிலையில், நாற்றுகளின் வளர்ச்சி பாதித்து, தண்டுகளின் அடிப்பகுதி அழுகத் தொடங்கி, நீர் தோய்த்த, சாம்பல், பழுப்பு அல்லது கருப்பு நிறக் காயங்களுடன் மென்மையான, மெல்லிய தண்டுகளாகக் காட்சியளிக்கும். இளம் தாவரங்கள் அல்லது மரங்கள் வெளிறிய நிறமாகி, உதிரத் தொடங்கி, அடிப்பகுதியை வெட்டியதைப் போன்று, இறுதியாக சாய்ந்து விழக்கூடும். இறந்த தாவரங்கள் அல்லது மணல் பரப்பின் மீது, வெள்ளை அல்லது சாம்பல் நிறப் பூஞ்சை வளர்ச்சி காணப்படும். நாற்றுகளின் இழப்பு அதிகமாகும்போது, மீண்டும் நடவு செய்யவேண்டிய தேவை ஏற்படலாம்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

டிரைகோடெர்மா விரிடே, பௌவேரியா பாஸியானா அல்லது பாக்டீரியா சூடோமோனாஸ் ஃப்ளூரெசென்ஸ் மற்றும் பேசில்லஸ் சப்டிலிஸ் ஆகியவற்றைக் கொண்ட உயிரியல் பூஞ்சைக்கொல்லிகளை முளைப்பதற்கு முன்பான நாற்றழுகல் நோயைக் கட்டுப்படுத்த விதைச் சிகிச்சைகளாகப் பயன்படுத்தலாம் அல்லது நடவு செய்யும்போது வேர் மண்டலத்தைச் சுற்றிலும் பயன்படுத்தலாம். சில சந்தர்ப்பங்களில், நோய் ஏற்படுவதையும், அதன் தீவிரத்தன்மையையும் குறைக்க, செப்பு ஆக்ஸிகுளோரைடு அல்லது போர்டாக்ஸ் கலவை போன்ற செப்புப் பூஞ்சைக் கொல்லிகளுடன் தடுப்பு விதைச் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். இயுபடோரியம் கண்ணாபியம் தாவரச் சாறுகள் அடிப்படையிலான வீட்டில் தயாரிக்கும் கரைசல்கள் இந்தப் பூஞ்சையின் வளர்ச்சியை முற்றிலும் தடுக்கிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வயல் பணியின்போது கவனமாகக் கையாளுதல் போன்றவை இந்த நோயைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழியாகும். ஏற்கனவே நாற்றழுகல் நோய் ஏற்பட்ட வயல்களில் அல்லது வடிகால் பிரச்சினை உள்ள வயல்களில் பூஞ்சைக் கொல்லிகளைத் தடுப்பு நடவடிக்கைகளாகப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளுங்கள். நாற்றழுகல் நோய் முளைப்பதற்கு முன்பு ஏற்படும்போது திரம் கொண்டு விதைச் சிகிச்சைகள் அளித்து அவற்றைக் கட்டுப்படுத்தலாம். மெட்டலாக்ஸில்-எம் உடனான விதை சிகிச்சைகள் முளைப்பதற்கு முன்பான நாற்றழுகல் நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். மேகமூட்டமான வானிலையின் போது கேப்டன் 31.8% அல்லது மெட்டலாக்ஸில்-எம் 75% உடனான இலைத்திரள்களை பயன்படுத்துவதும் உதவக்கூடும். நடவு செய்ததில் இருந்து, தாமிரம் ஆக்ஸிகுளோரைடு அல்லது கேப்டன் கொண்டு இரண்டு வார காலத்திற்கு ஒரு முறை மண் அல்லது தாவரங்களின் அடிப்பாகத்தை நனைக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

நாற்றழுகல் நோய் பல்வேறு பயிர்களைப் பாதிக்கக்கூடும் மற்றும் இது பைத்தியம் என்னும் பூஞ்சை இனத்தால் ஏற்படுகிறது. இது மண் அல்லது தாவரக் கழிவுகளில் பல வருடங்களுக்கு வாழக்கூடியது. வானிலை சூடாக இருக்கும் போதும், மழை பெய்யும் போதும், மணல் அதிகமாக ஈரமாக இருக்கும் போதும், தாவரங்கள் அடர்த்தியாக நடவு செய்யப்பட்டிருக்கும் போதும், இவை வாழும். நீர் தேங்கி நிற்பது அல்லது அதிகமாக தழைச்சத்துக்களைப் பயன்படுத்துவது போன்ற அழுத்தமான சூழல்கள் தாவரங்களைப் பலவீனமாக்கி, நோய்களின் வளர்ச்சிக்கு வித்திடும். மாசுபட்டக் கருவிகள் அல்லது உபகரணங்கள் மற்றும் துணிகள் அல்லது காலணிகளில் உள்ள அழுக்குகள் வழியாக வித்துக்கள் பரவும். பயிர்களின் மொத்த வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் இந்தப் பூஞ்சையானது பயிர்களைத் தாக்கினாலும், முளைக்கும் விதைகள் அல்லது இளம் நாற்றுகள் மிகவும் பாதிக்கப்படக்கூடும். ஒரே இடத்தில், ஒரு பருவத்தில் இருந்து இன்னொரு பருவத்திற்கு இந்த நோய் கண்டிப்பாகப் பரவும் என்று கிடையாது, ஆனால் அவ்வப்போது சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும்போது இந்த நோய் ஏற்படும்.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமானத் தாவரங்கள் அல்லது சான்றிதழ் பெற்ற ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட விதைகளைப் பயன்படுத்தவும்.
  • எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்கள் கிடைக்கப் பெற்றால் அவற்றைப் பயன்படுத்தவும்.
  • மோசமான வடிகால் அல்லது ஈரமான மணல்கள் இருக்கும் பகுதிகளில் உயர்த்தப்பட்ட விதைப்படுகைகளைப் பயன்படுத்தவும்.
  • கவிகைகளை உலரச் செய்ய, நடவு செய்யும்போது விதைகள் அல்லது நாற்றுகளுக்கு இடையே அகண்ட இடைவெளி விடவும்.
  • நடவு செய்யும்போது நாற்றுகளை ஆழமாக நடவு செய்யக்கூடாது.
  • முதல் அறிகுறிகள் தென்பட்டவுடன் பாதிக்கப்பட்டத் தாவரங்களை அகற்றவும்.
  • தழைச்சத்து பிரிவுப் பயன்பாடுகள் மூலம் சமச்சீரான உரங்கள் இடுவதற்குத் திட்டமிடவும்.
  • தொடர்ந்து தினமும் நீர் பாய்ச்சவும் ஆனால் மேலோட்டமாகப் பாய்ச்சவும்.
  • காலையில் சீக்கிரம் நீர் பாய்ச்சவும், இதனால் மாலையில் மணல் பரப்பு உலர்ந்து விடும்.
  • நீர் பாய்ச்சும்போது வளைய முறையைப் பின்பற்றவும், இதனால் நீர் தண்டின் மீது நேரடியாக படாது.
  • கவனமின்றி ஒரு வயலில் இருந்து இன்னொரு வயலுக்கு சேற்றினை எடுத்துச் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
  • கருவிகள் மற்றும் உபகரணங்களை முழுவதுமாக தொற்று நீக்கவும், உதாரணமாக வீட்டில் உபயோகப்படுத்தும் ப்ளீச் கொண்டு தொற்று நீக்கவும்.
  • அறுவடைக்குப் பிறகு தாவரக் குப்பைகளை அகற்றி, அழித்துவிடவும்.
  • எளிதில் பாதிக்காதப் பயிர்களைக் கொண்டு பயிர்ச் சுழற்சியைத் திட்டமிடவும்.
  • சாத்தியம் என்றால், பிளாஸ்டிக் தழைக்கூளங்கள் கொண்டு சூரிய வெளிச்சத்தில் விதைப்படுகை மணலைக் காய வைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க