உருளைக் கிழங்கு

முன்கருகல் நோய்

Alternaria solani

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • செறிவான வளர்ச்சியுடன் கரும் புள்ளிகள் மற்றும் மஞ்சள் நிற ஒளிவட்டங்கள் போன்றவை இலைகளில் காணப்படும்.
  • தண்டுகள் மற்றும் பழங்களில் இத்தகைய அறிகுறிகள் குறைவாகக் காணப்படும்.
  • பழங்கள் அழுகத் தொடங்கி, இறுதியாக விழுந்துவிடும்.


உருளைக் கிழங்கு

அறிகுறிகள்

முதிர்ச்சியடைந்த இலைத்திரள்கள், தண்டுகள் மற்றும் பழங்களில் முன்கருகல் நோயின் அறிகுறிகள் தென்படும். இலைகளில் காணப்படும் சாம்பல் முதல் பழுப்பு நிறப் புள்ளிகள், தெளிவான மையப்பகுதியைச் சுற்றி படிப்படியாக செறிவான முறையில் வளர்ச்சியடைந்து - தனித்தன்மையுடைய வில்லாண்மையின் மையப்புள்ளியைப் போன்ற தோற்றத்தை உருவாக்கும். இந்தக் காயங்கள் பிராகாசமான மஞ்சள் நிற ஒளிவட்டங்களால் சூழப்பட்டிருக்கும். நோய் அதிகரிக்கையில், முழு இலைகளும் வெளிறிய நிறமாகி, விழத் தொடங்கி, இலை உதிர்வுக்கு வழிவகுக்கும். இலைகள் இறந்து, உதிர்ந்துவிடும் போது, பழங்களானது சூரிய வெப்பத்தினால் மிகவும் பாதிக்கப்படக்கூடும். தெளிவான மையத்தை உடைய அதே விதமான புள்ளிகள், தண்டுகள் மற்றும் பழங்களில் காணப்படும். பழங்கள் அழுகி, சில சமயங்களில் அதனைத் தொடர்ந்து கீழேயும் விழுந்துவிடக்கூடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இயற்கைச் சிகிச்சை என பதிவு செய்யப்பட்ட பேசில்லஸ் சப்டிலிஸ் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டத் தயாரிப்புகள் அல்லது செம்பு அடிப்படையிலான பூஞ்சைக் கொல்லிகள் ஆகியவற்றைக் கொண்டும் இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். முன்கருகல் நோயைக் கட்டுப்படுத்துவதற்குச் சந்தையில் ஏராளமான பூஞ்சைக் கொல்லிகள் கிடைக்கப் பெறுகின்றன. அஸோக்ஸிஸ்டுரோபின், பைராகுளோஸ்டுரோபின், டைபெனோகொனாஸோல், பாஸ்காலிட், குளோரோதலோனில், ஃபெனாமிடோன், மானெப், மான்கோசெப், டிரைஃப்ளோக்ஸிஸ்டுரோபின் மற்றும் ஜிரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அல்லது அதன் கலவைகளை அடிப்படையாகக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம். பல்வேறு இரசாயனக் கலவைகளைச் சுழற்சி முறையில் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. வானிலையைக் கருத்தில் கொண்டு, சரியான நேரத்தில் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தத் தயாரிப்புகளின் பயன்பாட்டிற்குப் பிறகு, நீங்கள் பாதுகாப்பாக அறுவடை செய்வதற்கு, முன் அறுவடை காலத்தை கவனமாகச் சரிபார்க்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது ஆல்டெர்னேரியா சொலானி என்னும் பூஞ்சையினால் ஏற்படுகிறது. இது மண்ணில் உள்ள பாதிக்கப்பட்டப் பயிர்க் குப்பைகளின் மீது அல்லது மாற்றுப் புரவலன்களின் மீது குளிர்காலத்தைச் செயலற்ற நிலையில் கழிக்கும். வாங்கப்பட்ட விதைகள் அல்லது நாற்றுகளும் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். கீழ்ப்புற இலைகள் மாசுப்பட்ட மண்ணில் படும்போது பெரும்பாலும் பாதிப்படையக் கூடும். வெது வெதுப்பான வெப்பநிலை (24-29 ° செல்சியஸ்) மற்றும் அதிக ஈரப்பதம் (90%) நோய் வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கின்றன. நீண்டகால ஈரப்பதம் (அல்லது மாறி மாறிவரும் ஈரமான / வறண்ட காலநிலை), வித்துக்கள் உற்பத்தியாவதை ஆதரிக்கிறது, இது காற்று, மழைச் சாரல் அல்லது மேல்நிலை நீர்ப்பாசனம் ஆகியவற்றின் மூலம் பரவுகிறது. பச்சையாக அறுவடை செய்யப்படும் கிழங்குகளும் அல்லது ஈரமான சூழலில் அறுவடை செய்யப்பட்டக் கிழங்குகளும் குறிப்பாக இந்த நோய்த் தொற்றினால் எளிதில் பாதிக்கப்படக்கூடும். கடும் மழைப் பொழிவிற்குப் பிறகு இந்த நோய் பெரும்பாலும் ஏற்படுகிறது, குறிப்பாக வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் இந்த நோய் அழிவை ஏற்படுத்துகிறது.


தடுப்பு முறைகள்

  • சான்றிதழ் பெற்ற நோய்க்குறி இல்லாத விதைகளை அல்லது நடவுப் பொருள்களைப் பயன்படுத்தவும்.
  • நோய்க்கு எதிர்ப்புத் திறன் உடைய வகைகள் கிடைக்கிறதா எனப் பார்க்கவும்.
  • வடிகாலினை மேம்படுத்த உயர்த்தப்பட்டப் படுகைகளில் விதைக்கவும் அல்லது நடவு செய்யவும்.
  • காற்று அதிகம் அடிக்கும் திசைப்பக்கம் வரிசைகளை அமைக்கவும் மற்றும் நிழலான பகுதிகளில் நடவு செய்வதைத் தவிர்க்கவும்.
  • மழை அல்லது பாசனத்திற்குப் பிறகு விதானம் சீக்கிரம் உலர்வதற்குத் தாவரங்களுக்கு இடையே இடைவெளி விடவும்.
  • தாவரங்கள் மண்ணில் படுவதைத் தவிர்ப்பதற்கு மண்ணில் தழைக்கூளங்களைப் பயன்படுத்தவும்.
  • குறிப்பாக ஈரப்பதமான வானிலையின் போது நோய்க்கான அறிகுறிகள் ஏதெனும் தென்படுகிறதா என கண்காணிக்கவும்.
  • மண்ணுக்கு மிக அருகே இருக்கும் கீழ்ப்புற இலைகளை அகற்றவும்.
  • அறிகுறிகள் தென்படும் இலைகளை அகற்றி, அவற்றை அழித்துவிடவும்.
  • போதுமான அளவு ஊட்டச்சத்துக்களை வழங்கி, தாவரங்களை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும்.
  • தாவரங்களைச் செங்குத்தாக வைத்திருக்க மூங்கில்களைப் பயன்படுத்தவும்.
  • இலை ஈரப்பதத்தைக் குறைக்கச் சொட்டு நீர்ப்பாசன முறையைப் பயன்படுத்துங்கள்.
  • காலை நேரங்களில் தாவரங்களுக்கு நீர்ப்பாய்ச்சவும், ஆதலால் பகல் நேரத்தில் அவை உலர்ந்துவிடும்.
  • வயலிலும் மற்றும் அதன் சுற்றுப் பகுதியிலும் உள்ள களைகளைக் கட்டுப்படுத்தவும்.
  • தாவரங்கள் ஈரமாக இருக்கும்போது வயல்களில் வேலை செய்வதைத் தவிர்க்கவும்.
  • அறுவடைக்குப் பின், தாவரக் குப்பைகளை அகற்றி, அவற்றை எரித்துவிடவும் (உரமாக்கக் கூடாது).
  • மாற்றாக, குப்பைகளை ஆழமாக மண்ணில் புதைக்கவும் (45 செ.மீட்டருக்கு மேலான ஆழத்தில்).
  • எளிதில் பாதிக்காத பயிர்களைக் கொண்டு 2- அல்லது 3 வருட பயிர்ச் சுழற்சிக்குத் திட்டமிடவும்.
  • குளிர்ந்த வெப்பநிலையிலும் நல்ல காற்றோட்டமான இடங்களிலும் கிழங்குகளைச் சேமித்து வைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க