சோளம்

சோளத்தின் துரு நோய்

Puccinia purpurea

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இலைகளில் காணப்படும் சிறிய புள்ளிகள், கீழ் புறத்தில் மெதுவாக ஊதா நிறமாகவும், சற்று உப்பிய கொப்புளங்களாகவும் உருவாகும்.
  • இவை வட்ட வடிவம் முதல் நீள்வட்ட வடிவம் வரை இருக்கும், மேலும் திட்டுக்களாக ஆங்காங்கே சிதறி காணப்படும்.
  • இலை உறை மற்றும் மஞ்சரிகளின் தண்டுகளிலும் அறிகுறிகள் காணப்படுகின்றன.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோளம்

அறிகுறிகள்

அறிகுறிகள் பொதுவாக 1-1.5 மாத வயதுடைய தாவரங்களில் காணப்படுகின்றன. வெவ்வேறு வண்ணங்களை உடைய (ஊதா, பழுப்பு அல்லது சிவப்பு) சிறிய புள்ளிகள் முதலில் கீழ்ப்புற இலைகளில் தோன்றும். எதிர்ப்பு சக்தி கொண்ட வகைகளில் அறிகுறிகள் உருவாகாது. எளிதில் பாதிக்கக்கூடிய வகைகளில், அவை வித்துக்களால் நிரப்பப்படுவதால், புள்ளிகளானது தூள் போன்று, ஊதா நிறத்தில், சற்று உப்பிய கொப்புளங்களாக மாறி, வட்டவடிவத்திலிருந்து நீளமான வடிவத்தில் மாறும். தாவரங்கள் வளருகையில், இவை இன்னும் தளர்வாக அல்லது திட்டுக்களாக சிதறிக்கிடக்கும், இன்னும் அடர் நிறமாக கூட ஆகும். அதிக பாதிப்புக்குள்ளான சாகுபடியில், கொப்புளங்கள் முழு தாவரத்தையும் மூடிக்கொள்ளும் மற்றும் பாதிக்கப்பட்ட வயல்கள் பழுப்பு நிறமாக தோன்றும். மஞ்சரியின் காம்புகள் அல்லது இலை உறைகள் ஆகியவற்றின் மீது கொப்புளங்களும் காணப்படுகின்றன.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

புசீனியா பர்புரியாவுக்கு எதிரான மாற்று சிகிச்சை இதுவரை கிடைக்கவில்லை. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் உங்களுக்கு எதுவும் தெரிந்தால் தயவுசெய்து எங்களை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும். உங்களிடமிருந்து தகவலை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். எளிதில் பாதிக்கப்படக்கூடிய வகைகளைப் பயன்படுத்தும்போது பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும். ஹெக்ஸகோனசோல் (0.1%), டிஃபென்கோனசோல் (0.1%) மற்றும் புரோபிகோனசோல் (0.1%) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளை நோயைக் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். அறிகுறிகள் தோன்றிய உடனேயே 15 நாட்கள் இடைவெளியில் இந்த பூசண கொல்லிகளின் இரண்டு தெளிப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

புசீனியா பர்புரியா என்ற பூஞ்சையால் இந்த நோய் ஏற்படுகிறது, இது மண் மற்றும் பாதிக்கப்பட்ட குப்பைகளில் குறுகிய காலத்திற்கு மட்டுமே உயிர்வாழும். ஆகையால், இது புற்கள் அல்லது சில களைகள் போன்ற மாற்று புரவலன்களில் குளிர்காலத்தை செயலற்ற நிலையில் கழிக்கும். உதாரணமாக, தொய்யும் உட்சாரல் (ஆக்ஸலிஸ் கார்னிகுலட்டா). காற்று மற்றும் மழையால் வித்துக்கள் நீண்ட தூரம் பயணிக்கும். அதிக ஒப்பு ஈரப்பதம் (கிட்டத்தட்ட 100%), பனி, மழை மற்றும் குளிர் வெப்பநிலை (10-12 ° செல்சியஸ்) ஆகியவை இந்த நோயின் வளர்ச்சிக்கு உகந்த சூழலாகும். வெப்பமான, வறண்ட வானிலை பூஞ்சை வளர்ச்சியையும், நோய் ஏற்படுவதையும் மெதுவாக்கும் அல்லது தடுக்கும். சில சந்தர்ப்பங்களில், கடுமையாக பாதிக்கப்பட்ட இலைகள் வாடிப்போவதும், அழிந்து போவதும் சாத்தியமாகும்.


தடுப்பு முறைகள்

  • உள்ளூரில் கிடைக்கக்கூடிய எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளை நடவு செய்யவும்.
  • சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்து ஆரோக்கியமான விதைகளை பயன்படுத்தவும்.
  • பாதிக்கப்பட்ட வயல்களில் இருந்து விதைகளைப் பயன்படுத்த வேண்டாம்.
  • நோய்த்தொற்றுக்கான உகந்த நிலைமைகளைத் தவிர்க்க பருவத்தின் ஆரம்பத்தில் நடவு செய்யவும்.
  • சீக்கிரம் முதிர்ச்சி அடையக்கூடிய குறுகிய பருவ வகைகளைப் பயன்படுத்தவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயலை கண்காணிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றி அவற்றை அழிக்கவும் (எடுத்துக்காட்டாக, அவற்றை எரிப்பதன் மூலம்).
  • பிற புரவலன் தாவரங்களுடன் குறுக்கு தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க ஒரு நல்ல களை நிர்வாகத்தைத் திட்டமிடவும்.
  • எளிதில் பாதிக்காத பயிர்களை கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க