மக்காச்சோளம்

தார்புள்ளி நோய்

Phyllachora maydis

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இலையின் இரு பக்கங்களிலும் சிறிய, கருமையான உப்பிய புள்ளிகள் இருக்கும்.
  • "மீன்-கண்" போன்ற அறிகுறி பழுப்பு நிற சிதைவு(காயங்)களால் சூழப்பட்டிருக்கும்.
  • முழு இலையும் புள்ளிகளால் மூடப்பட்டு, காய்ந்துவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மக்காச்சோளம்

அறிகுறிகள்

முதல் அறிகுறிகளானது சிறிய, உப்பிய மஞ்சள் கலந்த பழுப்பு நிற புள்ளிகளால் இரண்டு இலை பக்கங்களிலும் கருப்பு நிற மையப்பகுதியைக் கொண்டிருக்கும் என வகைப்படுத்தப்படுகின்றன. புள்ளிகள் கருமையான ஓரங்களுடன் வட்ட வடிவ, பழுப்பு நிற சிதைவுகள் மூலம் சூழப்பட்டிருக்கும், இந்த சிதைவுகள் பொதுவாக "மீன்-கண்" என்று அழைக்கப்படுகிறது. வட்ட வடிவிலும், முட்டை வடிவிலும், சில நேரங்களில் கோண வடிவில் அல்லது ஒழுங்கற்ற வடிவில் இருக்கும் புள்ளிகள் ஒன்றிணைந்து 10 மிமீ நீளம் வரையான கோடுகளை உருவாக்கலாம். முழு இலையும் புள்ளிகளால் மூடப்பட்டிருக்கும், மேலும் அதனைச் சுற்றியுள்ள இலைப் பொருட்கள் காய்ந்துவிடும். அறிகுறிகள் முதலில் கீழ்ப்புற இலைகளில் தோன்றும், அது பிறகு மேல் இலைகளுக்கு பரவும். கடுமையான தாக்குதலின்போது உமி மற்றும் இலை உறைகளிலும் புள்ளிகள் தோன்றும். இலைகள் 21 முதல் 30 நாட்களுக்குப் பிறகு முழுமையாக இறந்துவிடலாம். இது சந்தைப்படுத்தல் தன்மையை குறைக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கு எதிராக உயிரியல் கட்டுப்பாட்டு தீர்வு எதுவும் இல்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். இன்றைய நிலவரப்படி, இந்த நோய்க்கு எந்த இரசாயன சிகிச்சை குறித்தும் தெரியவில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.

இது எதனால் ஏற்படுகிறது

மூன்று பூஞ்சை இனங்களான ஃபில்லகோரா மேடிஸ், மோனோகிராபெல்லா மேடிஸ் மற்றும் ஹைபர்பாராசைட் கோனியோதைரியம் ஃபில்லகோரே ஆகியவற்றின் தொடர்பு காரணமாக அறிகுறிகள் ஏற்படுகின்றன. ஃபில்லகோரா மேடிஸ் மூலம் தொற்று ஏற்பட்ட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு, மோனோகிராபெல்லா மேடிஸ் மூலம் சிதைவுகள் படையெடுக்கப்படுகின்றன, பூஞ்சை தாவர குப்பைகளில் 3 மாதங்கள் அல்லது அதற்கு மேல் உயிர்வாழும். வித்துகள் காற்று மற்றும் மழையால் பரவுகின்றன. 16-20 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவை நோய் பரவுவதற்கு சாதகமாக இருக்கும். எனவே ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள வயல்களில் இந்நோய் தாக்கும் அபாயம் உள்ளது.


தடுப்பு முறைகள்

  • உங்கள் மக்காச்சோளச் செடிகளின் கீழ்ப்புற இலைகளில் சிறிய, பளபளப்பான, கருமையான புள்ளிகள் அல்லது பழுப்பு நிற சிதைவுகள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்காணிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவர குப்பைகளை உழுது, புதைத்து விடவும் அல்லது அகற்றி அழித்து விடவும்.
  • வெவ்வேறு பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி செய்வதற்கு திட்டமிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க