கோதுமை

ஆல்டெர்னேரியா இலை கருகல் நோய்

Alternaria triticina

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • கோதுமை தாவரங்களுக்கு 7-8 வாரங்கள் இருக்கும் போது இந்த நோய் ஏற்படும்.
  • பயிர் முதிர்ச்சியடையும் போது இந்த நிலை கடுமையாகிறது.
  • சிறிய, நீள்வட்ட வடிவில், நிறமாற்றம் அடைந்த காயங்கள் ஒழுங்கற்ற முறையில் இலைகளில் சிதறிக் கிடப்பதைக் காணலாம்.
  • காயங்கள் விரிவடையும் போது, அவை அடர் பழுப்பு நிறத்தில் இருந்து சாம்பல் நிறமாகவும் ஒழுங்கற்ற வடிவமாகவும் மாறும்.
  • இலைகள் இறுதியாக உலர்ந்துவிடுகின்றன.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

கோதுமை

அறிகுறிகள்

இளம் தாவரங்கள் நோய்க்கிருமிக்கு எதிர்ப்புத்திறன் கொண்டிருக்கின்றன. கீழ்ப்புற இலைகளில்தான் முதன்முதலில் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும், இவை படிப்படியாக மேற்புற இலைகளுக்கு பரவும். நோய்த்தொற்றானது சிறிய, நீள்வட்ட, வெளிறிய காயங்களாக ஆரம்பிக்கிறது, இவை கீழ்ப்புற இலைகளில் ஒழுங்கற்ற முறையில் சிதறி காணப்படும், இவை படிப்படியாக மேற்புற இலைகளுக்கும் பரவும். காலப்போக்கில், காயங்கள்கள் விரிவடைந்து, ஒழுங்கற்ற வடிவமாகி, அடர் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் மூழ்கிய காயங்களாக உருவாகின்றன. காயங்களின் ஓரங்கள் பிரகாசமான மஞ்சள் நிறத்தை கொண்டிருக்கும், மேலும் இவை 1 செ.மீ அல்லது அதற்கு மேற்பட்ட அகலம் வரை வளரக்கூடும். ஈரமான சூழ்நிலையில், காயங்கள் கருப்பு நிறத்தில் தூள் போன்ற பூஞ்சைச்சிதல்களால் மூடப்படலாம். நோயின் பிந்தைய கட்டங்களில், இந்த காயங்கள் இணைந்து, முழு இலையும் இறப்பதற்கு வழிவகுக்கும். கடுமையான சந்தர்ப்பங்களில், இலை உறைகள், தூரிகை முடிகள் மற்றும் உமியடிச்செதில்களும் பாதிக்கப்படும் மற்றும் அவை எரிந்த தோற்றத்தைக் கொண்டிருக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஒரு கிலோ விதைக்கு வீட்டாவாக்ஸ் @ 2.5 என்ற அளவில் விதைக்கு சிகிச்சையளிப்பதன் மூலம் விதைகளில் ஏற்படும் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தலாம். டிரைக்கோடெர்மா விரிடே மற்றும் வீட்டாவாக்ஸின் கலவையானது மேலும் தொற்றுநோய்களைத் தடுக்கிறது (98.4% அளவிற்கு). முதல் மற்றும் இரண்டாவது தெளிப்புகளில் யூரியா @ 2 - 3% என்ற அளவில் ஜினெப் உடன் கலக்கவும். நீர்ம வேம்பு இலை சாறுகளைப் பயன்படுத்துங்கள். விதைமூலம் நோய் பரவுவதை குறைக்க பூஞ்சைக் கொல்லி மற்றும் சூடான நீர் சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன. நோய்க்கிருமிகள் டிரைக்கோடெர்மா விரிடே (2%) மற்றும் டி.ஹார்ஜியானம் (2%), ஆஸ்பெர்ஜில்லஸ் ஹுமிகோலா மற்றும் பேசில்லஸ் சப்டிலிஸ் போன்றவை பெரும்பாலும் நோய் மேலும் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். ஏ. ட்ரிடிசினாவை பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்தலாம், இது நோயின் தீவிரத்தை 75% குறைத்து, தாவர விளைச்சலை அதிகரிக்கிறது. மான்கோசெப், ஜிரம், ஜினெப் (0.2%), திரம், ஃபைட்டோலன், புரோபினெப், குளோரோதலோனில் மற்றும் நபாம், புரோபிகோனசோல் (0.15%), டெபுகோனசோல் மற்றும் ஹெக்சாகோனசோல் (0.5%) போன்ற பூசண கொல்லிகளைப் பயன்படுத்துங்கள். மான்கோசெப்பிற்கு எதிரான சகிப்புத்தன்மை உருவாவதை தடுக்க, பூஞ்சைக் கொல்லிகளின் கலவையைப் பயன்படுத்துங்கள்.

இது எதனால் ஏற்படுகிறது

சேதங்களானது ஆல்டெர்னேரியா ட்ரிடிசினா என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது. நோய்த்தொற்றானது மண் மற்றும் விதைகளின் மூலம் பரவக்கூடியது மற்றும் காற்று மூலம் சிதறக்கூடியது. பாதிக்கப்பட்ட விதைகள் ஆரோக்கியமானவற்றை விட சிறியதாக இருக்கக்கூடும் மற்றும் அவை பெரும்பாலும் பழுப்பு நிறமாற்றத்துடன் சுருங்கிவிடக்கூடும். பாதிக்கப்பட்ட மண்ணில் நடப்படும் போது அல்லது பாதிக்கப்பட்ட பயிர் எச்சங்கள் மீது படும்போது தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன (எ.கா., மழை சாரல் மூலம் அல்லது நேரடி தொடர்பு மூலம்). கோடைகாலத்தில் மண்ணின் மேற்பரப்பில் பாதிக்கப்பட்ட குப்பைகளில் பூஞ்சை இரண்டு மாதங்கள் உயிர்வாழ்வதாக கூறப்படுகிறது, ஆனால் புதைக்கப்பட்ட குப்பைகளில் நான்கு மாதங்கள் வாழ்கின்றன. ஏ. ட்ரிடிசினா நான்கு வாரங்களுக்கும் குறைவான இளம் கோதுமை நாற்றுகளை தாக்க இயலாத காரணத்தினால் தாவரத்தின் வயது அதிகரிக்கையில், பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியமும் அதிகரிக்கிறது. தாவரங்கள் ஏழு வாரங்களை அடையும்வரை, அறிகுறிகள் பொதுவாகத் தெரிவதில்லை. 20 - 25 ° செல்சியஸ் வெப்பநிலை நோய்த்தொற்று மற்றும் நோய் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும். கடுமையான நிலைமைகளின் கீழ், விளைச்சல் இழப்புகள் 80% விட அதிகமாக இருக்கலாம்.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்து குறைவான பாதிப்புக்குள்ளாகிற வகைகளையும் ஆரோக்கியமான விதைகளையும் பயன்படுத்தவும்.
  • சிறந்த சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட பயிர்களை எரித்தும், மண்ணில் புதைத்தும் அழித்துவிட வேண்டும்.
  • இது பாதிக்கப்பட்ட பயிர் எச்சங்கள் நோய்க்கிருமிகள் காற்று வழியாக பரவுவதை தடுக்கும்.
  • பாதிக்கப்பட்ட பயிர்களை அழிக்க களைக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.
  • பாதிக்கப்பட்ட வயல்களில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் விதைக்கக்கூடாது.
  • அப்புறப்படுத்தக்கூடிய உபகரணங்கள், பாதிக்கப்பட்ட தாவரப் பொருட்கள் அல்லது மண்ணை நீராவியில் கிருமிநீக்கம், அதிக வெப்பநிலையில் எரித்தல் அல்லது ஆழமான புதைப்பு மூலம் அப்புறப்படுத்த வேண்டும்.
  • அப்புறப்படுத்துவதற்காக தளத்திலிருந்து அகற்றப்பட்ட எந்தவொரு கருவியும் இரட்டைப் பையில் போட வேண்டும்.
  • எதிர்கால தொற்றுநோய்களைத் தூண்டக்கூடிய நோய்க்கிருமிகளின் உயிர்வாழ்வையும் முதன்மை உட்செலுத்தும் பொருளையும் குறைக்க அறுவடைக்குப் பிறகு பயிர் குப்பைகளை ஆழமாக புதைத்துவிடவும்.
  • நிலவும் காற்றின் திசைக்கு இணையாக வரிசையாக நடவு செய்தல், தாவர எண்ணிக்கையை குறைத்தல் மற்றும் அகலமாக இடைவெளிவிட்டு வரிசையாக நடவு செய்வதன் மூலம் கவிகைகளில் காற்று இயக்கத்தை ஊக்குவிக்கவும்.
  • இலைகள் ஈரப்பதமாக இருக்கும் காலத்தை குறைக்க, சாத்தியமானால் அந்திப்பொழுதில் நீர்ப்பாசனம் செய்வதையும், மேல்நிலை நீர்ப்பாசனத்தை பின்பற்றுவதையும் தவிர்க்கவும்.
  • போதுமான அளவு உரங்களைப் பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க