நிலக்கடலை

பழ பூசணங்கள்

Aspergillus spp.

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • குறிப்பாக வெடிப்பின் போது, பழத் தோல்களில் நிறமாற்றம் மற்றும் பழங்கள் அழுகிப் போகுதல்.
  • மிகவும் பாதிக்கக்கூடிய பழங்கள் பிஸ்தா நோய்ப் பூச்சிகளால் தாக்கப்பட்டவையே.

இதிலும் கூடக் காணப்படும்

8 பயிர்கள்
வெள்ளைப் பூண்டு
மக்காச்சோளம்
மாங்கனி
வெங்காயம்
மேலும்

நிலக்கடலை

அறிகுறிகள்

பழங்கள் முதிர்ச்சி அடையும் காலத்தில் ஈரமான சூழல்கள் நிலவினால், பல வகையான பூஞ்சைகள் பிஸ்தா பழங்களில் குடியேறி, அழுகச் செய்யும். இது முக்கியமாக தோல்களில் நிறமாற்றம் சில சந்தர்ப்பங்களில், மணமற்ற மற்றும் நிறமற்ற கரும்பூசண நச்சு உற்பத்தி மூலம் குறிக்கப்படுகிறது.குடியேற்றத்தின் அளவு அல்லது பூஞ்சையின் வகையைப் பொறுத்து, நிறமாற்றம் மற்றும் சிதைவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ காணப்படும். வழக்கமாக, வெளி ஓடானது வெளிர் நிறம் முதல் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாக மாறும். ஓடுக்கு அடியில், தோலின் மீது பூஞ்சை வளர்ச்சியின் அறிகுறிகள் தென்படும், அது கறையாகவும் காணக்கூடும். ஓடுகள் அடிக்கடி தோலுடன் ஒட்டிக் கொள்ளும். வெடித்த பழங்கள் மற்றும் பூச்சியால் பாதிக்கப்பட்டவை குறிப்பாக பாதிக்கப்படக்கூடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கான மிகவும் பயனுள்ள உயிரியல் சிகிச்சைகள் இன்னும் எதுவும் இல்லை. எனினும், தாமிர அடிப்படையான உயிரியல் பூஞ்சைக் கொல்லிகள் சாதகமான கால சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும்போது ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல்திறனைக் காட்டுகிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப் பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பூச்சிக் கொல்லிகளைக் கொண்டு மெகாஸ்டிக்மஸ் பிஸ்தாசியே மற்றும் இயுரிடோமா புளோட்னிக்கோவி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவும். குளோரோதலோனில் (200 மிலி / 100 லி) அல்லது தாமிரத்தை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளைக் கொண்டு பாதிக்கப்பட்ட மரங்களைப் பாதுகாக்கவும். அறுவடையின் முடிவில் இவற்றைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஏனெனில் இதனால் குளிர்காலத்தில் செயலற்ற நிலையில் பழங்களின் மீது நோய்கள் குடியேறியிருப்பதை இது தடுக்கும். சிகிச்சையின் செயல்திறன் பயன்பாட்டின் நேரம், பரிந்துரைக்கப்பட்ட அளவுகள் மற்றும் நுண்திவலையாக்கி வேகத்தின் பயன்பாடு ஆகியவற்றைச் சார்ந்துள்ளது.

இது எதனால் ஏற்படுகிறது

பிஸ்தாவின் பழ அழுகல் நோய் ஆஸ்பர்ஜில்லஸ் என்பவற்றின் பல்வேறு இனங்களால் ஏற்படுகிறது, ஆனால் பெனிசிலியம், ஸ்டெம்பிபிலியம் அல்லது ஃபியூசரியம் போன்றவற்றின் சில இனங்களாலும் ஏற்படுகிறது. இந்த நோய் பெரும்பாலும் பூச்சித் தொற்றுகளுடன் தொடர்புடையது, குறிப்பாக பிஸ்தா விதை கால்ஷிட் (மெகாஸ்டிக்மஸ் பிஸ்தாசியே) மற்றும் பிஸ்தா விதை குளவிகள் (இயுரிடோமா பிளாட்னிக்கோவி) போன்றவற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. இந்தப் பூச்சிகள் உருவாக்கிய துளைகள் பூஞ்சைகள் உள்நுழைவதற்கு வழி வகுக்கிறது. ஆஸ்பெர்ஜில்லஸ் எஸ்பிபி மூலம் தொற்றுநோயானது சாதாரண நிலைமைகளைக் காட்டிலும் உலர் நிலைமைகளின் கீழ் ஏற்பட்டாலும், முதிர்ச்சியின் போது உயர் வெப்பநிலை, ஈரமான மற்றும் ஈரப்பதமான நிலைகள் நோயை ஆதரிக்கின்றன. இருள் மற்றும் காற்றோட்டக் குறைபாடு ஆகியவையும் நோய்களின் பரவலுக்குப் பங்களிப்பவை. வசந்த காலத்தின் பிற்பகுதியிலும், கோடை காலத்தின் முற்பகுதியிலும் ஏற்படக்கூடிய நீர்ப்பற்றாக்குறையால் வெடிக்கக்கூடிய பழங்களின் எண்ணிக்கையை அதிகரித்து , நோயின் சுழற்சிக்கு ஏதுவாக அமையும்.


தடுப்பு முறைகள்

  • பிஸ்தாசியா அட்லாண்டிக்கா மீது ஒட்டு முறைகளைப் பயன்படுத்தாதீர்கள், ஏனெனில் இது சீக்கிரம் வெடிக்கக்கூடிய பழங்களை அதிகரிக்கும்.
  • வசந்த காலத்தின் பிற்பகுதியிலும், கோடை காலத்தின் ஆரம்பத்திலும் முறையாக நீர்ப்பாய்ச்சவும், ஏனெனில் வறட்சியானது வெடிக்கக்கூடிய பழங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
  • நீண்ட காலத்திற்கு, இருட்டான, காற்றோட்ட வசதிகள் மோசமாக இருக்கும் இடங்களில் பிஸ்தாக்களை சேமித்து வைக்க வேண்டாம்.
  • மெகாஸ்டிக்மஸ் பிஸ்தாசியே (பிஸ்தா விதை கால்ஷிட்) மற்றும் இயுரிடோமா புளோட்னிக்கோவி (பிஸ்தா விதை குளவிகள்) போன்றவற்றின் தாக்குதலைத் தவிர்க்கவும்.
  • பருவத்தின் பிந்தைய பகுதியில் அறுவடை செய்வதைத் தவிர்க்கவும் மற்றும் வானிலை ஈரப்பதமாக இருக்கும்போதும் அறுவடை செய்வதைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க