தக்காளி

பியூசாரியம் தண்டு அழுகல் நோய்

Fusarium solani

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • கிளை நரம்புகள் அழிந்து போகுதல்.
  • இலைகள் வெளிறிய நிறமாகுதல்.
  • கடத்துதிசுக்கள் பழுப்பு நிறமாகுதல்.
  • குன்றிய வளர்ச்சி.

இதிலும் கூடக் காணப்படும்

4 பயிர்கள்

தக்காளி

அறிகுறிகள்

கிளை நரம்புகள் அழிந்து போகுதல் மற்றும் இலைகள் வெளிறிய நிறமாகுதல் ஆகியவை இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். இளம் தாவரங்களில், அறிகுறிகளானது கிளை நரம்புகள் அழிந்து போகுதல், அதனை தொடர்ந்து இலை காம்புகள் சாய்ந்து தொங்குதல் உள்ளிட்டவையாகும். மஞ்சள் நிறமானது முதலில் கீழ்ப்புற இலைகளில் காணப்படுகிறது. இந்த கிளை நரம்புகள் வாடி, இறுதியாக இறந்து, அறிகுறிகளை அடுத்தடுத்த இலைகளுக்கு பரப்புகின்றன. பிந்தைய கட்டத்தில், கடத்துதிசுக்கள் பழுப்பு நிறமாகவும் மாறும். கீழ்ப்புற இலைகள், பிறகு தாவரத்தின் மொத்த இலைகளும் உதிர்ந்துவிடும். தாவரங்களின் வளர்ச்சி குன்றி, இறந்துபோகும். மென்மையான, அடர் பழுப்பு அல்லது கருப்பு நிற சொறி நோய்கள் தண்டுகளில் தோன்றும், இவை பொதுவாக கணுக்கள் மற்றும் காயமடைந்த இடங்களில் ஏற்பட்டு, தண்டு குடையப்படுவதற்கு காரணமாகிறது. காயங்கள் வெளிர் ஆரஞ்சு நிறத்தில், மிகச் சிறியதாக, பிளாஸ்க் வடிவில், பூஞ்சையின் கனி கட்டமைப்புகளை கொண்டிருக்கும் (குடுவைக்கனியுறுப்பு). வெள்ளை பஞ்சு போன்ற பூஞ்சை வளர்ச்சி தாவரத்தில் உருவாகலாம். வேர்கள், பாதிக்கப்படும்போது, அடர் பழுப்பு நிறமாகவும், மென்மையாகவும் மற்றும் நீர் தோய்த்ததாகவும் மாறும். மிளகு பழங்களில் புள்ளி வட்டங்களில் கருப்பு நிறத்தில், நீர் தோய்த்த காயங்கள் உருவாகலாம்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சில பயிர்களில் பியூசாரியம் வாடல் நோயை கட்டுப்படுத்த பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகளுடன் போட்டியிடக்கூடிய நோய்கிருமி அல்லாத எஃப். ஆக்சிஸ்போரமின் திரிபுகள் உட்பட பல உயிரியல் கட்டுப்பாட்டு முகவர்கள் பயன்படுத்தப்படுகின்றன. டிரைக்கோடெர்மா விரிடே @ 1% டபிள்யூபி அல்லது @ 5% எஸ்சி என்பவற்றை விதைகளுக்கு (10 கிராம் / கிலோ விதை) சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம். பேசிலஸ் சப்டிலிஸ், சூடோமோனாஸ் ஃப்ளூரெசென்ஸ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பிற தயாரிப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். ட்ரைக்கோடெர்மா ஹார்சியானத்தையும் மண்ணில் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வேறு எந்த நடவடிக்கைகளும் பயனுள்ளதாக இல்லாவிட்டால் பாதிக்கப்பட்ட இடங்களில் மண் சார்ந்த பூசண கொல்லிகளைப் பயன்படுத்துங்கள். விதைப்பதற்கு / நடவு செய்வதற்கு முன் காப்பர் ஆக்ஸிகுளோரைடு @ 3 கிராம் / லிட்டர் தண்ணீர் என்ற அளவில் அதனை கொண்டு மண்ணை நனைப்பதும் பயனுள்ளதாக இருக்கும். கார்பென்டாசிம், பிப்ரோனில், ஃப்ளூக்ளோரலின் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பிற தயாரிப்புகளையும் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

பியூசாரியம் சொலானி என்பது ஒரு பூஞ்சையாகும், இது தாவரங்களின் போக்குவரத்து திசுக்களில் வளர்ந்து, நீர் மற்றும் ஊட்டச்சத்து விநியோகத்தை பாதிக்கிறது. தாவரங்கள் அவற்றின் வேர் நுனிகள் வழியாகவோ அல்லது வேர்களில் உள்ள காயங்கள் மூலமாகவோ நேரடியாக பாதிக்கப்படலாம். ஒருமுறை ஒரு பகுதியில் நோய்க்கிருமி நிறுவப்பட்டவுடன், அது குளிர்காலத்தில் செயலற்ற நிலையில் இருக்கக்கூடிய வித்துக்களை உருவாக்குவதால், இது பல ஆண்டு காலங்களுக்கு அதே பகுதியில் செயல்பாட்டில் இருக்கும். மண்ணால் பரவும் நோய்கள் மண்ணில் வாழ்கின்றன, மேலும் இது விதை, மண், நீர், நாற்று, தொழிலாளர்கள், நீர்ப்பாசன நீர் மற்றும் காற்று (பாதிக்கப்பட்ட தாவர குப்பைகளை சுமப்பதன் மூலம்) மூலம் பரவுகின்றன. பூஞ்சையானது பல்வேறு புரவலன் தாவரங்களை பாதிக்கும் ஒரு தீவிர நோயை உருவாக்கும் உயிரினமாகும். பூக்கும் கட்டத்தில் தொற்று ஏற்பட்டால், கடுமையான விளைச்சல் இழப்பை எதிர்பார்க்கலாம். தண்டில் ஏற்படக்கூடிய சொறி நோய்கள் நீரின் மேல்நோக்கிய ஓட்டத்தை கட்டுப்படுத்தி, தாவரங்கள் வாடிப்போவதற்கும், இறுதியாக தாவரங்கள் இறந்து போவதற்கும் காரணமாகிறது. பியூசாரியம் சொலானி இறந்த அல்லது இறக்கும் தாவர திசுக்களில் குடியேறலாம் மற்றும் இரவு நேரங்களில் வித்துக்களை தீவிரமாக உற்பத்தி செய்யலாம். பூஞ்சைகளின் சாதகமான நிலைமைகள் ஒப்பீட்டளவில் அதிக மண் ஈரப்பதம் மற்றும் மண் வெப்பநிலை. மோசமான நீர் வடிகால் அல்லது அதிகப்படியான நீர் நோய் பரவுவதை ஆதரிக்கிறது.


தடுப்பு முறைகள்

  • புலே ஜோதி மற்றும் புலே முக்தா போன்ற கிடைக்கக்கூடிய எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளான ஆரோக்கியமான தாவரங்களை மட்டுமே நடவு செய்யுங்கள்.
  • வாடுதல் அல்லது தண்டில் காயங்கள் போன்ற அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என தாவரங்களை கண்காணிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை கவனமாக கைமுறையால் பிடுங்கி, அகற்றவும்.
  • அவற்றை ஒரு நிலநிரப்பலில் வைப்பதன் மூலமோ அல்லது தொலைவில் எரிப்பதன் மூலமோ அவற்றை அப்புறப்படுத்தவும்.
  • உங்கள் உபகரணங்கள் மற்றும் கருவிகளை சுத்தமாக வைத்திருக்கவும், குறிப்பாக வெவ்வேறு வயல்களுக்கு இடையில் பணிபுரியும் போது சுத்தமாக வைத்திருக்கவும்.
  • வயலில் வேலை செய்யும்போது தாவரங்களுக்கு சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்கவும்.
  • நல்ல பயிர் சுகாதாரம் மற்றும் சுத்தமாக வெட்டுவதன் மூலம் சீர்திருத்தம் செய்தல் ஆகியவை நோயைக் கட்டுப்படுத்த உதவும்.
  • மண்ணின் ஹைட்ரஜன் அயனிச்செறிவை 6.5-7.0 ஆக சரிசெய்தல், தழைச்சத்துக்களின் மூலங்களாக அம்மோனியத்தை விட நைட்ரேட்டைப் பயன்படுத்துவது நோயின் தீவிரத்தை குறைக்கும்.
  • கண்ணாடிகூடிகளில், துல்லியமாக சரிசெய்யப்பட்ட சொட்டு நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்தவும்.
  • அதிகப்படியான உர செறிவை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • அறுவடைக்குப் பிறகு, தாவர குப்பைகளை அகற்றி அவற்றை எரிக்கவும்.
  • அழுகலானது சேமிப்பின்போதும் தொடரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • ஒரு மாதத்திற்கு நேரடி வெயிலின் கீழ் கருப்பு பிளாஸ்டிக் படலத்தால் அந்த பகுதியை மூடி விதை படுக்கைகளை கிருமி நீக்கம் செய்யுங்கள்.
  • மண்ணில் பூஞ்சைகளின் அளவைக் குறைக்க பயிர் சுழற்சியைப் பின்பற்றவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க