பருத்தி

மைரோதிசியம் இலைப்புள்ளி நோய்

Myrothecium roridum

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • தண்டு மற்றும் உச்சி அழுகல் நோய்.
  • ஓரங்களுக்கு அருகே, இலைகளில் வெளிர் பழுப்பு முதல் கருப்பு நிற புள்ளிகள்.
  • காயங்களின் மையப்பகுதி உதிர்ந்து விழுந்து குண்டடி பட்டது போன்ற துளைகள்.

இதிலும் கூடக் காணப்படும்


பருத்தி

அறிகுறிகள்

தண்டு மற்றும் உச்சிப்பகுதி அழுகுதல், இலைகளில் ஒரே மையத்தை கொண்டு காணப்படும் பழுப்பு நிற புள்ளிகள் மூலம் இந்த நோயின் அறிகுறிகள் வகைப்படுத்தப்படுகிறது. அதிகப்படியான ஈரப்பதத்தில், உப்பிய, கருப்பு நிற கட்டமைப்புகள் மற்றும் வெள்ளை நிற குடுமிகள் சிதைவுகளில் உருவாகி, தனித்துவமான தோற்றத்தை கொடுக்கின்றன. தோட்டக்கலை பயிர்களில், அறிகுறிகளானது பொதுவாக உச்சிகளிலும், அருகிலுள்ள இலைக்காம்புகளிலும் மென்மையான பழுப்பு நிற அழுகலாக தொடங்குகின்றன. தண்டு நெடுகிலும் சிதைவுகள் படிப்படியாக அதிகரிக்கையில், பாதிக்கப்பட்ட திசுக்களில் சிறிய வெள்ளை நிற குடுமிகள் தோன்றும். இலைகளில் ஒழுங்கற்ற பழுப்பு முதல் கருப்பு நிறத்தில் சிறிய புள்ளிகள் தோன்றும். தெளிவாக வரையறுக்கப்பட்ட நடுத்தர அளவிலான செறிவுடைய வளையத்துடன் புள்ளிகள் படிப்படியாக வட்ட வடிவத்தை அடையும். பின்னர், முதிர்ச்சியடைந்த சிதைவுகள் ஒன்றிணைந்து, சிறிய வெள்ளை புள்ளிகளால் மூடப்படலாம். அது காய்ந்தவுடன், புண்களின் மையம் காகிதம் போன்று, வெண்மையாக மாறி, இறுதியில் விழுந்து இலைகளில் ஒழுங்கற்ற குண்டடிபட்ட துளைகளை ஏற்படுத்தும். நோயின் பிந்தைய கட்டங்களில் முழு தாவரமும் சரிந்து போகக்கூடும், ஆனால் பழங்கள் அரிதாகவே பாதிக்கப்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இன்றுவரை மைரோதிசியம் இலைப்புள்ளி நோய்க்கு எதிரான உயிரியல் கட்டுப்பாட்டு முறை எதுவும் தெரியவில்லை. இந்த பூஞ்சைக்கு சிகிச்சையளிக்க ஏதேனும் முறை உங்களுக்குத் தெரிந்தால் தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். அறிகுறிகளை முதன் முதலாக கவனிக்கும்போது, மான்கோசெப் அல்லது தாமிரம் ஆக்ஸிகுளோரைடு என்பவற்றை ஹெக்கடேருக்கு 2 கிலோ வீதம் தெளிக்கவும், மேலும் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முதல் மூன்று முறை இந்த சிகிச்சையை மீண்டும் செய்யவும். பருவத்தின் பிற்பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டால், அறுவடைக்கு முந்தைய இடைவெளி இருப்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது மைரோதிசியம் ரோரிடம் என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது, இந்த நோய்க்கிருமி பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த எண்ணற்ற பயிர்கள் மற்றும் அலங்கார தாவரங்களில் உச்சி மற்றும் தண்டு அழுகலை அவ்வப்போது ஏற்படுத்தும். இந்த நோய் பல வழிகளில் பரவுகிறது, எடுத்துக்காட்டாக, நடவு செய்யும்போது மோசமான நடைமுறைகள் மற்றும் மேல்நிலை நீர்ப்பாசனம் மூலமும், இயந்திரம் அல்லது பூச்சிகள் காயப்படுத்தும் போதும் பரவும். காயமடைந்த திசுக்கள் ஒரு நுழைவு வாயிலாக மாறும், இதன் மூலம் பூஞ்சை தாவரத்தை பாதிக்கும். நோயின் நிகழ்வு மற்றும் அறிகுறிகளின் ஈர்ப்பு இரண்டும் சூடான, ஈரமான வானிலை மற்றும் அதிக ஈரப்பதமான நிலைகளில் அதிகரிக்கின்றன. அதிகப்படியான உரமிடுதலானது பசுமையான இலைத்திரள்களை ஏற்படுத்தி, அதன் வழியாக நோய் அதிகப்படியாக ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்பு திறன் கொண்ட வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை உபயோகிக்கவும்.
  • அதிகப்படியான உரப்பயன்பாட்டை தவிர்க்கவும் மற்றும் பருவகாலத்தில் உரங்களை பிரித்து பயன்படுத்தவும்.
  • வயலில் வேலை செய்யும்போது தாவரங்களுக்கு காயங்கள் ஏற்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளவும்.
  • கவனமாக சரியான நேரத்தில் நீர்ப்பாசனம் செய்வதன் மூலம் இலை ஈரப்பதமாக இருக்கும் காலங்களை குறைத்துக்கொள்ளவும்.
  • வயல் பணிக்கு பிறகு அனைத்து கருவிகளையும் சுத்தம் செய்து, தொற்று நீக்கவும்.
  • மோசமான நடவடிக்கைகள் உற்பத்தி செய்தவற்றை காயமடையச்செய்யும் என்பதால், பேக் செய்யும்போது உற்பத்தி செய்தவற்றை கவனமாக கையாளுங்கள்.
  • பாதிக்கப்பட்ட தாவர கழிவுகளை அகற்றி அழிக்கவும்.
  • ஒற்றை பயிர் முறை நோயை நன்கு பரப்பும் என்பதால் அவற்றை தவிர்க்கவும்.
  • உங்கள் பயிர்களுக்கு சிறந்த ஹைட்ரஜன் அயனிச்செறிவு கிடைக்க வயல்களில் சுண்ணாம்பு பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க