Leveillula taurica
பூஞ்சைக்காளான்
தண்டுகள் மற்றும் பழங்கள் அவ்வப்போது பாதிக்கப்பட்டாலும், லெவெயிலுலா பெரும்பாலும் இலைகளைப் பாதிக்கிறது. முதல் அறிகுறிகளானது இலைகளின் அடிப்புறத்தில் மாவு போன்ற, வெண்ணிற புள்ளிகள் மற்றும் இலைகளின் மேல்புறத்தில் வெவ்வேறு அடர்த்தியை உடைய மஞ்சள் நிறப் புள்ளிகள் ஆகும். பின்னர், வெண்ணிற மாவு போன்ற புள்ளிகள் இலைகளின் மேல்புறத்திலும் தோன்றும். நோய் அதிகரிக்கையில், பாதிக்கப்பட்டப் பாகங்கள் சுருங்கி, இலைகள் உதிர்ந்து, தாவரங்கள் இறந்துவிடக்கூடும்.
தோட்டங்களுக்கு, தண்ணீர் கலந்த பாலின் கரைசல் இயற்கை பூஞ்சைக் கொல்லியாகச் செயல்படக்கூடும். ஒவ்வொரு இரண்டாவது நாளிலும் இலைகளில் இந்தக் கரைசலை பயன்படுத்துங்கள். புரவலனைப் பொறுத்து, சாம்பல் நோயின் வகைகள் மாறுபடும். மேலும் இந்தக் கரைசல் அனைத்து வகையான சாம்பல் நோய்க்கும் பயனுள்ளதாக இருக்காது. எந்த முன்னேற்றமும் இல்லை என்றால், பூண்டு அல்லது சோடியம் பைகார்பனேட் கரைசல்களை முயற்சிக்கவும். வணிக ரீதியான உயிரியல் சிகிச்சை முறைகளும் கிடைக்கப்பெறுகின்றன.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். சாம்பல் நோய்க்கு எளிதில் பாதிக்கப்படக்கூடிய பயிர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, இவற்றுக்கு ஏதேனும் இரசாயனச் சிகிச்சை முறையைப் பரிந்துரைப்பது மிகவும் கடினம். ஈரமான கந்தகம், ட்ரைஃப்ளூமிஜோல், மைக்ளோபூட்டனில் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட பூஞ்சைக்கொல்லிகள் சில பயிர்களில் பூஞ்சை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன.
இலை மொட்டுகளுக்குள் மற்றும் பிற தாவரக் குப்பைகளில் பூஞ்சை வித்துக்களானது குளிர்காலத்தைச் செயலற்ற நிலையில் கழிக்கும். காற்று, நீர் மற்றும் பூச்சிகள் ஆகியவை அருகிலுள்ள தாவரங்களுக்கு வித்துக்களை பரப்பும். இது ஒரு பூஞ்சையாக இருந்தாலும், சாம்பல் நோய் சாதாரணமாக உலர்ந்த நிலைகளிலேயே ஏற்படும். 10-12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இது உயிர் வாழ்கிறது, ஆனால் 30 ° செல்சியஸ் இவற்றின் உகந்த நிலைகளாகும். அடிச்சாம்பல் நோய்க்கு மாறாக, லேசான மழை மற்றும் வழக்கமான காலைப் பனி ஆகியவை சாம்பல் நோய் பரவுவதைத் துரிதப்படுத்துகிறது.