சோயாமொச்சை

சோயாமொச்சையின் அடிச்சாம்பல் நோய்

Peronospora manshurica

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இலையின் மேற்பரப்பில் சிறிய, வெளிர் நிற புள்ளிகள்.
  • முதிர்ந்த காயங்கள் பிரகாசமான மஞ்சள் நிற ஒளிவட்டத்துடன் பழுப்பு நிறமாக மாறும்.
  • இலையின் கீழ் புறத்தில் சாம்பல் நிற தெளிவில்லாத தோற்றம்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோயாமொச்சை

அறிகுறிகள்

அடிச்சாம்பல் நோயின் ஆரம்ப அறிகுறிகள் இளம் தாவரங்களில் ஏற்படுகின்றன, ஆனால் வளர்ச்சியின் பிந்தைய நிலை வரையிலும் அல்லது ஆரம்ப இனப்பெருக்க நிலைகள் வரையிலும் இந்த நோய் வயலில் தென்படாது. ஆரம்பத்தில் சிறிய, ஒழுங்கற்ற, வெளிர் மஞ்சள் நிற புள்ளிகள் இலை மேற்பரப்பில் தோன்றும். பின்னர், அவை மஞ்சள் நிற ஓரங்களுடன் சாம்பல்-பழுப்பு நிறமாகின்றன. இலைகளின் கீழ் பக்கத்தில், நோய்க்கிருமி இருப்பதால் புள்ளிகள் சாம்பல் நிற மங்கலான தோற்றத்தைக் கொண்டுள்ளன. பயிர் விதானம் முழுவதும் அறிகுறிகள் குறைந்த மட்டத்தில் அடிக்கடி ஏற்படுகின்றன. காய்கள் பாதிக்கப்படும்போது, காய்களுக்குள் பூஞ்சை போன்ற வளர்ச்சியை ஏராளமாக காணலாம். பாதிக்கப்பட்ட விதை மந்தமான வெள்ளை தோற்றத்தைக் கொண்டிருக்கும் மற்றும் அது பூஞ்சை மூலம் ஓரளவு அல்லது முழுமையாக சூழ்ந்திருக்கும். காயத்தின் அளவு மற்றும் வடிவம் இலையின் வயதைப் பொறுத்தது. முதிர்ந்த காயங்கள் மஞ்சள் அல்லது பச்சை விளிம்புகளுடன் சாம்பல் பழுப்பு நிறம்முதல் கரும் பழுப்பு நிறம் வரையிலும் மாறும். கடுமையாக பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாக மாறி முன்கூட்டியே உதிர்ந்துவிடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கிருமிக்கு எதிராக எந்தவொரு உயிரியல் கட்டுப்பாட்டு முறையும் இதுநாள் வரை எங்களுக்குத் தெரியவில்லை. அறிகுறிகளின் நிகழ்வு அல்லது ஈர்ப்பைக் குறைக்க ஏதேனும் வெற்றிகரமான முறை உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சை கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். விதை சிகிச்சைக்கு மான்கோசெப், மானெப் அல்லது ஜினெப் ஆகியவற்றுடன் மெட்டாலாக்ஸில், ஆக்சாடிக்சைல் போன்ற பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்துங்கள்.

இது எதனால் ஏற்படுகிறது

பெரோனோஸ்போரா மன்ஷூரிகா என்ற பூஞ்சை போன்ற உயிரினத்தால் அடிச்சாம்பல் நோய் ஏற்படுகிறது. இது இலை குப்பைகளில் தடிமனான சுவர் கொண்ட தங்கும் வித்துக்களாக வயலில் குளிர் காலத்தை செயலாற்ற நிலையில் கழிக்கும், விதைகளில் இது குறைவாக காணப்படும். பூக்க தொடங்கிய பிறகு இந்த நோய் மிகவும் பொதுவாக காணப்படுகிறது. இளம் இலைகள் மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன மற்றும் பாதிக்கப்பட்ட இலைகள் பெரும்பாலும் தாவரங்களின் உச்சியில் காணப்படுகின்றன. முதிர்ந்த சோயா மொச்சை செடிகளில் ஏற்படும் காயங்கள் எண்ணிக்கையில் அதிகரிக்கலாம், ஆனால் முதிர்ந்த இலைகளில் அளவு குறையக்கூடும். மிதமான வெப்பநிலை (20-22 °செல்சியஸ்) மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவை இந்த நோய்க்கு சாதகமான சூழலாகும். அடிச்சாம்பல் நோயின் பூஞ்சை இலைக் குப்பைகளிலும் விதைகளிலும் தடிமனான சுவர் கொண்ட தங்கும் வித்துக்களாக (கருஉள்ளுறக்கநிலைச் சிதல்) வயலில் குளிர் காலத்தை செயலற்ற நிலையில் கழிக்கிறது. நோயின் வளர்ச்சி பெரும்பாலும் காலநிலையைப் பொறுத்தது. ஈரப்பதம் குறையும் போது, பூஞ்சை காளான் நோய்க்கிருமி பாதிக்கப்படும் மற்றும் எதிர்காலத்தில் நோய் பரவுவதும் தவிர்க்கப்படும். அதிக ஈரப்பதம் மற்றும் சீரான மழைப்பொழிவு ஏற்பட்டால், அடிச்சாம்பல் பூஞ்சை காளான் தொடர்ந்து வளர்ச்சி அடையும்.


தடுப்பு முறைகள்

  • நடவு செய்வதற்கு எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளிலிருந்து கிடைக்கக்கூடிய சான்றளிக்கப்பட்ட விதைகளைப் பயன்படுத்துங்கள்.
  • நெருக்கமாக நடவு செய்வது அல்லது அதிகப்படியாக உரமிடுதலைத் தவிர்க்கவும்.
  • சோயாமொச்சைகளை புரவலன் அல்லாத பயிர்களுடன் குறைந்தது ஒரு வருடத்திற்கு பயிர் சுழற்சி செய்தால், அடிச்சாம்பல் நோய் பாதிப்பு குறையும்.
  • வரும் ஆண்டில் அடிச்சாம்பல் நோய் ஏற்படுவதை குறைக்க பாதிக்கப்பட்ட பயிர் எச்சங்களை புதைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க