பருத்தி

பருத்தியின் கோரினெஸ்போரா இலைப்புள்ளி நோய்

Corynespora cassiicola

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இலைகளில் சிறிய பழுப்பு நிற வட்ட வடிவிலான புள்ளிகள் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே உதிர்ந்துவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பருத்தி

அறிகுறிகள்

ஆரம்பப் பருவத்தில் தாவரங்களின் கீழ்ப்பகுதி இலைகளில் அறிகுறிகள் முதலில் காணப்படும். பின்னர் அவை நடவு செய்த முதல் மாதத்தில் முழு செடியிலும் பரவும். இலைகளில் ஆரம்பத்தில் பல சிறிய, அடர் சிவப்பு புள்ளிகள் தென்படும், இவை கருமையான ஓரங்களுடன் பழுப்பு நிறமாக மாறும், ஆனால் பொதுவாக அவற்றின் பச்சை அல்லது பச்சை-மஞ்சள் நிறத்தைத் தக்கவைத்துக்கொள்ளும். காயங்கள் காய் மொட்டுகளிலும் மற்றும் காய்களிலும் காணப்படும். புள்ளிகள் ஏற்பட்டு நாளாகையில், ​​இவை ஒளி மற்றும் அடர் பழுப்பு நிற வளையங்களை உருவாக்கும். 30 முதல் 40% முன்கூட்டிய இலை உதிர்வு விளைச்சல் குறைப்புக்கு வழிவகுக்கும். கடுமையாக பாதிக்கப்பட்ட காய்கள் தரத்தை இழந்து தொற்றுடைய விதையை உற்பத்திச் செய்யும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ், பருத்தியின் கோரினெஸ்போரா இலைப் புள்ளி நோய்க்கு எதிராக உயிரியல் கட்டுப்பாட்டு ஆற்றலைக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரசாயன கட்டுப்பாடு

கார்பென்டாசிம் மற்றும் காப்பர் தயாரிப்புகள் போன்ற பூஞ்சைக் கொல்லிகளை பூக்கும் கட்டத்தின் முதல் மற்றும் ஆறாவது வாரத்திற்கு இடையில் பயன்படுத்தலாம். பூக்கும் 1 வது அல்லது 3 வது வாரத்தில் தொடங்குவதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது, தேவைப்பட்டால் 3வது அல்லது 5வது வாரத்தில் இரண்டாவது முறையாகப் பயன்படுத்தலாம். மாற்றாக, நோயின் முதல் அறிகுறி தென்படும்போதே பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம், தேவைப்பட்டால் இரண்டாவது தடவை பயன்படுத்தலாம். மற்றொரு விருப்பம், இலையுதிர்வின் முதல் அறிகுறி தென்பட்டவுடனே பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்துவதாகும், அதன் பிறகு தேவைப்பட்டால் இரண்டாவது முறை பயன்படுத்தலாம். இருப்பினும், முன்கூட்டிய இலை உதிர்வின் காரணமாக 25-30% இலைகள் ஏற்கனவே கொட்டியிருந்தால், பூஞ்சைக் கொல்லிகளால் இந்த நோயைக் கட்டுப்படுத்துவது கடினம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

25°C முதல் 30°C வரையிலான மிதமான வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் அடிக்கடி பெய்யும் மழை, கடும் பனி அல்லது மூடுபனி ஆகியவற்றால் இலைகளின் நீண்ட நேர ஈரத்தன்மை தொற்று மற்றும் நோய்ப் பரவலை ஊக்குவிக்கிறது. அதிக விளைச்சல் திறன் கொண்ட நீர்ப்பாசனம் செய்யப்படும், வலுவாக வளரும் பருத்திப் பயிரில் தொற்று மிகவும் கடுமையானதாக இருக்கும்.


தடுப்பு முறைகள்

  • சகிப்புத்தன்மை மற்றும் எதிர்ப்புத் திறன் கொண்ட வகைகளைப் பயிர் செய்யவும்.
  • தொடர்ந்து ஒரே நிலத்தில் பருத்தியையும் சோயா மொச்சையையும் பயிரிட வேண்டாம்.
  • அதற்குப் பதிலாக பருத்தி மற்றும் சோயாமொச்சைக்குப் பிறகு சோளம், மக்காச்சோளம் அல்லது தினையை நடவு செய்வதன் மூலம் நீங்கள் பயிர் சுழற்சி செய்யலாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க