Rhizoctonia solani
பூஞ்சைக்காளான்
தாவரங்கள் முதிர்ச்சியாகி 40-50 நாட்களில் பூப்பதற்கு முன்பான நிலையில் இந்த நோய் ஏற்படும், ஆனால் இளம் தாவரங்களிலும் இந்த நோய் ஏற்படும். இலைகள், உறைகள் மற்றும் தண்டுகளில் இந்த நோய் அறிகுறிகள் ஏற்படும், பின்னர் இது காதுப் பகுதிகளுக்கும் பரவும். இலைகள் மற்றும் உறைகளில், நீர் ஊறிய, நிறம் மாற்றமடைந்த ஒரே மையத்தை உடைய எண்ணற்றப் பட்டைகள் மற்றும் வளையங்கள், பெரும்பாலும் பழுப்பு, தோல் அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும். வழக்கமாக, அறிகுறிகள் ஆரம்பத்தில் நிலத்திற்கு மேல் உள்ள முதல் மற்றும் இரண்டாவது இலை உறைகளில் தோன்றும். காலப்போக்கில், பாதிக்கப்பட்டத் திசுக்களில் சிறிய, வட்ட வடிவிலான, கருப்பு நிறமுள்ள புள்ளிகளுடன் கவனத்தை ஈர்க்கின்ற வெளிர் பழுப்பு நிறப் பஞ்சு போன்ற வளர்ச்சி காணப்படும். பின்னர் இவை காதுப்பகுதிகளுக்கும் பரவும். உருவாகிக்கொண்டிருக்கும் சோளத் தண்டு முழுவதும் பாதிக்கப்பட்டு, உமி இலைகள் வெடிப்பதன் மூலம் முதிர்ச்சி அடைவதற்கு முன்னதாகவே காய்ந்து விடும். நோய்த் தொற்றின் தீவிரமானது நோய்த் தொற்று ஏற்படும்போது காதுப்பகுதியின் வளர்ச்சி நிலையைச் சார்ந்து இருக்கும். நாற்றுகள் பாதிக்கப்பட்டால், வளரும் பகுதிகள் இறந்து போகக்கூடும் மற்றும் முழுத் தாவரமும் ஒரு வாரத்திற்குள் கருகிவிடக்கூடும்.
நோய்த்தாக்கம் மற்றும் தீவிரத்தைக் குறைக்க, மக்காச்சோள விதைகளை 1% சோடியம் ஹைபோகுளோரைட் கரைசல் மற்றும் 5% எத்தனால் ஆகியவற்றைக் கொண்டு 10 நிமிடங்கள் தொற்றுநீக்கி, பின்பு மூன்று முறைத் தண்ணீரில் கழுவி, காற்றில் உலர வைக்கலாம். பேசில்லஸ் சப்டிலீஸ் கொண்ட சூத்திரங்களுடன் மேற்கொள்ளப்படும் கூடுதல் சிகிச்சை இந்த விளைவை மேம்படுத்துகிறது. பூஞ்சை டிரைகோடெர்மா ஹார்ஜியானம் அல்லது டி. விரிடியைக் கொண்டிருக்கும் தயாரிப்புகள் நோய்த்தொற்றின் பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மக்காச்சோள விதைகளை கேப்டான், திரம் அல்லது மெட்டாலாக்சில் ஆகியவற்றைக் கொண்டு சிகிச்சை அளித்து, பின்னர் வடிகட்டிய தொற்று நீக்கப்பட்ட தண்ணீரில் மூன்று முறை கழுவி, காற்றில் உலரவைப்பதன் மூலம் விதைகளைப் பாதுகாக்கலாம். எளிதில் பாதிக்கக்கூடிய வகைகள் பயிர் செய்யப்பட்டு, கால நிலைகள் நோய்க்கு ஏதுவாக இருந்தால், பூஞ்சைக்கொல்லித் தெளிப்பான்களைப் பயன்படுத்துவது பொருளாதார ரீதியாக சாத்தியமாகும். பிராப்பிகொனாஸோல் என்ற வேதிப்பொருளைக் கொண்ட தயாரிப்புகள் மோசமான அறிகுறிகள் ஏற்படுவதைத் தடுக்கப் பயனுள்ளதாக இருக்கும்.
அறிகுறிகளானது ரைசோக்டோனியா சொலானி என்னும் மண் மூலம் பரவும் பூஞ்சையினால் ஏற்படுகிறது. இது மண்ணில், பாதிக்கப்பட்ட பயிர்க் குப்பைகள் மீது அல்லது புற்களைகள் மீது உயிர்வாழும். வளரும் பருவம் தொடங்கும் போது நிலவும் சாதகமான ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை (15 முதல் 35 டிகிரி செல்சியஸ், உகந்தது 30 டிகிரி செல்சியஸ்) ஆகியவற்றின் விளைவாக, பூஞ்சை மீண்டும் வளரத் தொடங்கி, புதிதாக நடவு செய்யப்பட்ட புரவலன் பயிர்களைத் தாக்குவதற்குக் குறிவைக்கும். 70 சதவிகிதம் ஒப்பு ஈரப்பதம் இருக்கும் நிலையில், நோய்த்தாக்கம் குறைவாக இருக்கும், எனினும் 90 -100 சதவிகிதம் ஒப்பு ஈரப்பதம் இருக்கும்போது, நோயானது அதிகபட்ச அளவில் தூண்டப்படுகிறது. நீர்ப்பாசன நீர், வெள்ளம் மற்றும் உபகரணங்கள் அல்லது துணியில் உள்ள மாசுபடுத்தப்பட்ட மண்ணைப் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்வதன் மூலம் இந்தப் பூஞ்சை பரவுகிறது. இது வெப்ப மண்டல மற்றும் மிதமான வெப்ப மண்டலங்களில் ஈரப்பதமான மற்றும் சூடான காலநிலையில் மிகவும் அதிகமாக நிலவுகிறது. பூஞ்சைக் கொல்லிகளைக் கொண்டு இந்தப் பூஞ்சையைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம், எனவே பல மேலாண்மை நடைமுறைப் பயிற்சிகளின் கலவை தேவைப்படுகிறது.