Alternaria porri
பூஞ்சைக்காளான்
அறிகுறிகளானது முக்கியமாக சுற்றுப்புற ஈரப்பதத்தை (RH) சார்ந்துள்ளது. சிறிய, ஒழுங்கற்ற, மூழ்கிய மற்றும் வெண்மையான புள்ளிகள் முதலில் முதிர்ந்த இலைகள் மற்றும் பூ தண்டுகளில் தோன்றும். சுற்றுப்புற ஈரப்பதம் குறைவாக இருந்தால், மேலும் வளர்ச்சி ஏதும் அவதானிக்கப்படவில்லை. இருப்பினும், அதிக சுற்றுப்புற ஈரப்பதத்தில், இந்த புண்கள் நீள்வட்ட பழுப்பு அல்லது ஊதா நிற கொப்புளமாக உருவாகின்றன, அவற்றின் மையப் பகுதியில் செறிவுகளை உடைய வெளிர் மற்றும் அடர் நிற மண்டலங்கள் உள்ளன. காலப்போக்கில், இந்த புண்கள் பல சென்டிமீட்டர் நீளத்திற்கு பரவி மஞ்சள் நிற எல்லையைக் கொண்டிருக்கும். இந்த புண்கள் இணைந்து, இலை அல்லது மலர் தண்டுகளை குடைந்து, வாட்டம் மற்றும் இறப்பினை ஏற்படுத்தும். அறுவடையின் போது காயமடைந்தால், குமிழ்த்தண்டுகள் தாக்கப்படலாம், முக்கியமாக கழுத்துப்பகுதி தாக்கப்படலாம். குமிழ்த்தண்டுகளின் வெளிப்புற அல்லது உட்புற செதில்களின் அடர் மஞ்சள் முதல் சிவப்பு நிறம் வரையிலான, பஞ்சுபோன்ற அழுகலாக சேமிப்பு அறிகுறிகள் தோன்றும். இந்த நோயால் வெங்காயம், பூண்டு மற்றும் லீக் (வெங்காய வகை) பாதிக்கப்படலாம்.
இன்றுவரை, இந்த நோய்க்கான பயனுள்ள உயிரியல் கட்டுப்பாடு எதுவும் கிடைக்கவில்லை. கிளாடோஸ்போரியம் ஹெர்பரம் என்ற எதிர்வினை தன்மை உடைய பூஞ்சை விவோவில் பயன்படுத்தும்போது ஆல்டர்நேரியா பொர்ரி என்ற நோய்க்கிருமியைத் தடுக்கிறது, இது தொற்றுநோயை 66.6% வரை குறைக்கிறது. மற்ற பூஞ்சைகள் மிகவும் குறைவான செயல்திறன் கொண்டவை, எடுத்துக்காட்டாக பென்சிலியம் இனங்கள் (54%). பல எதிர்ப்பு தன்மை கொண்ட கலவையானது 79.1% வரை நோய்த்தொற்றை குறைக்கிறது. இருப்பினும், இந்த கண்டுபிடிப்புகளில் இதுவரை எந்த வணிக தயாரிப்புகளும் உருவாக்கப்படவில்லை. ஆசாதிராச்டா இண்டிகா (வேம்பு) மற்றும் டடுரா ஸ்ட்ராமோனியம் (ஜிம்ஸன்வீட்) ஆகியவற்றின் நீர்மச் சாறுகள் ஊதா நிற கொப்புளங்களின் உயிரியக்கக் கட்டுப்பாட்டுக்கு பயன்படுத்தப்படலாம்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். தடுப்பு பூஞ்சைக் கொல்லிகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் பெரும்பாலான வணிக வெங்காய பயிர்கள் ஊதா கொப்புளங்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். போஸ்கலிட், குளோரோதலோனில், ஃபெனாமிடன் மற்றும் மான்கோசெப் (அனைத்தும் @ 0.20 - 0.25%) என்ற பூசண கொல்லிகளை அடிப்படையாகக் கொண்ட கரைசல்களை நடவு செய்யப்பட்ட ஒரு மாதத்திலிருந்து தொடங்கி இரண்டு வார இடைவெளியில் தடுப்பு சிகிச்சையாக தெளிக்கலாம். செப்பு பூசண கொல்லிகள் ஊதா நிற கொப்புளங்களை கட்டுப்படுத்த பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் அவை மிகவும் பயனுள்ளதாக இல்லை. எதிர்ப்பின் வளர்ச்சியைத் தவிர்க்க வெவ்வேறு குடும்பங்களிலிருந்து மாற்று பூசண கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆல்டர்நேரியா பொர்ரி என்ற பூஞ்சையால் ஊதா நிற கொப்புளங்கள் ஏற்படுகிறது. இது பாதிக்கப்பட்ட பயிர் குப்பைகள் அல்லது மண் மேற்பரப்புக்கு அருகே குளிர்காலத்தில் உயிர்வாழ்கிறது. வசந்த காலத்தில் நிலவும் வெதுவெதுப்பான, ஈரமான நிலைமைகளால், வித்துக்கள் உற்பத்தியுடன் அதன் வாழ்க்கைச் சுழற்சியை மீண்டும் தொடங்குகிறது. காற்று, நீர்ப்பாசன நீர் அல்லது தெறிக்கும் மழை போன்றவை வித்துக்களை ஆரோக்கியமான தாவரங்கள் மற்றும் வயல்களுக்கு பரப்பும். வெப்பநிலை 21-30º செல்சியஸ் மற்றும் 80-90% ஒப்பு ஈரப்பதம் போன்ற சாதகமான சூழ்நிலையில் இந்த நோய் ஏற்படுகிறது. நோயின் நிகழ்வு மற்றும் அறிகுறியின் தீவிரம் ஆகியவை பருவம் மற்றும் தளத்தின் நிலைமைகளைப் பொறுத்தது. இந்த நோய் ஸ்டெம்பிலியம் கருகல் நோயுடன் சேர்ந்து ஏற்படும்போது, சேதம் தீவிரமாக இருக்கும். ஊதா நிற கொப்புளங்களுக்கான எதிர்ப்புத்திறன் முக்கியமாக புறத்தோலின் தடிமனால் ஏற்படுகிறது. இந்த எதிர்ப்பு சக்தியானது காயங்கள் மூலம், உதாரணமாக வயல் பணியின்போது அல்லது மணல்-புயலுக்கு பிறகு ஏற்படும் காயங்கள் மூலம், குறையக்கூடும்.