கத்திரிக்காய்

ஃபோமோப்சிஸ் கருகல் நோய்

Diaporthe vexans

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • பழங்களில் பழுப்பு நிறத்தில், மென்மையான, மூழ்கிய காயங்கள்.
  • இலைகளில் வெளிறிய மையப்பகுதியுடன் சாம்பல் முதல் பழுப்பு நிற புள்ளிகள்.
  • இலைகள் கருகுதல் மற்றும் வாடிவிடுதல்.
  • தண்டுகளில் இருண்ட, மூழ்கிய சொறிநோய்கள்.

இதிலும் கூடக் காணப்படும்


கத்திரிக்காய்

அறிகுறிகள்

அறிகுறிகள் இலைகள், தண்டு மற்றும் பழங்களில் தோன்றும், பிந்தையவற்றில் அறிகுறிகள் அதிகம் காணப்படுகின்றன. இலைகளில் வெளிர் மையங்களுடன் சிறிய சாம்பல் முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும், பின்னர் பலவாகி இலை மேற்பரப்பின் பெரும்பகுதியை மூடிக்கொள்ளும். கடுமையாக பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாகி, பின்னர் வெடித்த, கிழிந்த திசுக்களுடன் (இலை கருகல்) வாடிப்போகும். தண்டுகள் பழுப்பு முதல் அடர் நிறம் வரை, வெடித்து, அவற்றில் மூழ்கிய சொறிநோய்கள் உருவாகும். தாவரத்தின் அடிப்பகுதியில் இந்த சொறிகள் தண்டினை சுற்றி, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும், இறுதியில் தாவரத்தை கொல்லும். பழங்களின் மீது பழுப்பு நிறத்தில், மென்மையான, மூழ்கிய காயங்கள் தோன்றும். அவை பெரிதாகையில், இவை பெரும்பாலும் ஒன்றிணைந்து, பழ மேற்பரப்பின் பெரும்பகுதியை மூடி, அவற்றின் ஓரங்களில் சிறிய கருப்பு புள்ளிகளின் செறிவான வளையங்களை உருவாக்கும். இறுதியில், பழங்கள் அழுகும். இலைகள் மற்றும் தண்டுகளில் உள்ள முதிர்ந்த காயங்களில் சிறிய கருப்பு புள்ளிகள் தெரியும். நிலைமைகள் வறண்டுவிட்டால், பாதிக்கப்பட்ட பழம் சுருங்கி, உலர்ந்து, தாவரத்திலேயே பூசணமாகிவிடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கரிம பூசண கொல்லிகளுடனான சிகிச்சைகள் நோய் ஏற்படுவதையும், அதன் தீவிரத்தை குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கும். செப்பு கரைசல்களை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகள் (எ.கா. போர்டியாக்ஸ் கலவை) இலைத்திரள் தெளிப்பானாக பயன்படுத்தப்படலாம். வேப்பஞ்சாறுகள் பாதுகாப்பான மற்றும் சுற்று சூழலுக்கு உகந்த கரைசலாகும், இது நோயை சமாளிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. விதைகளை சூடான நீரில் சிகிச்சையளிப்பது குறித்தும் கருத்தில் கொள்ளலாம் (15 நிமிடங்களுக்கு 56 ° செல்சியஸ் வெப்பநிலையில்).

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வயலில் நோய் அடையாளம் காணப்பட்டு பொருளாதார வரம்புகளை அடைந்தால், பூஞ்சைக் கொல்லிகளுடன் சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இலைத்திரள் தெளிப்பான்களாக பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான பூஞ்சைக் கொல்லிகள் அசோக்ஸிஸ்ட்ரோபின், போஸ்கலிட், கேப்டன், குளோரோதலோனில், தாமிரம் ஆக்ஸிகுளோரைடு, டிதியோகார்பமேட்ஸ், மானெப், மான்கோசெப், தியோபனேட்-மெத்தில், டோல்க்ளோஃபோஸ்-மெத்தில், பைராக்ளோஸ்ட்ரோபின். பாரம்பரிய கட்டுப்பாட்டு உத்திகளுடன் இணைந்தால் பூஞ்சைக் கொல்லிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விதை சிகிச்சைகளும் பயன்படுத்தப்படலாம், எடுத்துக்காட்டாக தியோபெனேட் மெத்தில் (0.2%).

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகள் ஃபோமோப்சிஸ் வெக்ஸன்ஸ் என்ற பூஞ்சையால் ஏற்படுகின்றன, இது கத்திரிக்காய்களை மட்டும் தாக்குவதாக தெரிகிறது (தக்காளி மற்றும் மிளகு நோய்த்தொற்றுகள் சில சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட போதிலும்). பயிர் குப்பைகளில் பூஞ்சை உயிர்வாழ்கிறது மற்றும் அதன் வித்துக்கள் காற்று மற்றும் மழையால் ஆரோக்கியமான தாவரங்களுக்கு பரவுகின்றன. இது விதைகள் மூலம் பரவுவதாகவும் கருதப்படுகிறது. இந்த நோய்க்கு எதிரான போராட்டத்தில் சான்றளிக்கப்பட்ட விதைகள் மற்றும் ஆரோக்கியமான நாற்றுகளை வாங்குவது முக்கியமானது. இலை திசுக்களின் ஊடுருவல் 6-12 மணி நேரத்திற்குள் நடைபெறலாம், மேலும் தொற்று மற்றும் நோய் வளர்ச்சிக்கு (27-35° செல்சியஸ்) வெப்பமான மற்றும் ஒப்பீட்டளவில் ஈரப்பதமான நிலைமைகள் தேவைப்படுகின்றன. சேமிப்பகங்களில் பழ காயங்களின் வளர்ச்சி 30 ° செல்சியஸ் மற்றும் 50% ஈரப்பதத்தில் பெரும்பாலும் நிகழும்.


தடுப்பு முறைகள்

  • நம்பகமான ஆதாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற உயர்தர சான்றளிக்கப்பட்ட விதைகளைப் பயன்படுத்தவும்.
  • மாற்றாக, ஆரோக்கியமான தாவரங்களிலிருந்து விதைகளை சேகரிக்கவும்.
  • எதிர்ப்பு சக்தி கொண்ட வகைகள் கிடைக்கப்பெற்றால், மற்றும் அது உங்கள் சந்தை தேவைகளுக்கு பொருத்தமாக இருந்தால், அவற்றை நடவு செய்யவும்.
  • தாவரங்களுக்கு இடையில் மற்றும் வரிசைகளுக்கு இடையில் பெரிய இடைவெளி விடவும்.
  • இலைகள் வேகமாக உலர அனுமதிக்க நிலவும் காற்றின் திசைக்கு இணையாக நடவும்.
  • இலைகள் அந்திக்கு முன் உலரும் வகையில் நீர்ப்பாசனத்தை திட்டமிடவும்.
  • தழைச்சத்து குறைந்த வீதத்திலும், மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து அதிக வீதத்திலும் இருக்கும் உரங்களை பயன்படுத்தவும்.
  • அறுவடைக்குப் பிறகு பயிர் எச்சங்களை அகற்றி அழிக்கவும் (ஆழமாக உழுதல் அல்லது எரித்தல்).
  • பழங்களை உகந்த சேமிப்பு வெப்பநிலையில் வைக்கவும் (குளிர்ச்சியாக மற்றும் உலர்வாக).
  • பயிர் சுழற்சியை மேற்கொள்ளவும் (3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக).

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க