வெள்ளரிக்காய்

வெள்ளரி இனங்களின் அடிச்சாம்பல் நோய்

Pseudoperonospora cubensis

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இலையின் மேற்பரப்பில் மஞ்சள் நிற புள்ளிகள்.
  • இலையின் கீழ்ப்புறத்தில் வெல்வெட் போன்ற, தெளிவில்லாத சாம்பல் நிற வளர்ச்சி.
  • இளம் தளிர்கள், பூக்கள் அல்லது பழங்கள் குன்றுதல் அல்லது இறந்து போகுதல்.
  • குன்றிய வளர்ச்சி.

இதிலும் கூடக் காணப்படும்

5 பயிர்கள்
பாகற்காய்
வெள்ளரிக்காய்
முலாம்பழம்
பூசணிக்காய்
மேலும்

வெள்ளரிக்காய்

அறிகுறிகள்

பயிர்களுக்கு இடையில் அடி சாம்பல் நோய்க்கான அறிகுறிகளில் சிறிய வேறுபாடுகள் இருந்தபோதிலும் வெள்ளரி இனங்களில் ஏற்படும் அடி சாம்பல் நோயானது இலைகளின் மேல்புற பகுதிகளில் ஏற்படும் மஞ்சள் நிற, கோண வடிவ இலைப்புள்ளிகளால் பொதுவாக வகைப்படுத்தப்படுகிறது, இந்தப் புள்ளிகள் முக்கிய நரம்புகளை தாண்டி பெரிதாகாது. இந்த நரம்புகளுக்கு இடையேயான வெளிறிய சோகை படிப்படியாக மஞ்சள் முதல் பழுப்பு நிற தேமல் போன்ற அமைப்புகளாக மாறும், இவற்றை வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகளோடு குழப்பிக்கொள்ள கூடாது. இலைகளின் கீழ்ப்பக்கத்தில், குளிர்ந்த வெப்பநிலை மற்றும் உயர், நீடித்த ஈரப்பதம் நிலவும் போது, இந்தப் புள்ளிகளுக்கு கீழே தோன்றும் நீர் தோய்த்த புண்கள் மெதுவாக லேசான சாம்பல் நிறத்தில், வெல்வெட்டு போன்று, தெளிவற்ற தோற்றத்தைப் பெறுகின்றன. பூஞ்சைகள் தாவரத்திலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதால், இது இளம் தளிர்கள், பூக்கள் அல்லது பழங்கள் குன்றுவதற்கும் அல்லது இறந்து போவதற்கும் காரணமாகிறது மற்றும் இவை குன்றிய வளர்ச்சி மற்றும் விளைச்சல் குறைவதற்கு வழிவகுக்கிறது. சாம்பல் நோய்க்கு மாறாக, இதன் பூச்சுகள் இலைகளின் அடிப்பகுதியில் பிரத்யேமாக தோன்றும் மற்றும் அதன் வளர்ச்சி முக்கிய நரம்புகளால் வரையறுக்கப்படும், அதை எளிதாக நீக்க முடியாது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

அடிச்சாம்பல் நோயை எதிர்த்துப் போராடும் வணிக உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கின்றன. இலேசான சந்தர்ப்பங்களில், எதுவுமே செய்யாமல் இருப்பது சிறந்தது மற்றும் வானிலை அதிகரிக்கும் வரை காத்திருக்கவும். சில சந்தர்ப்பங்களில், கரிம நோய்த்தடுப்பு பூஞ்சைக் கொல்லிகள் தாவரங்கள் மாசுபடுவதைத் தவிர்க்க உதவும், இவற்றுள் போர்டாக்ஸ் கலவை உட்பட செம்பு அடிப்படையிலான பூஞ்சைக்கொல்லிகளும் அடங்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பாதுகாப்பு பூஞ்சைக் கொல்லிகள் தாவரங்களின் மாசுபாட்டைத் தடுக்க உதவும், ஆனால் அவற்றை இலைகளின் அடிப்பகுதியில் முறையாக தெளிக்க வேண்டும். மான்கோஜெப், குளோரோதலோனில் அல்லது செப்பு சார்ந்த சேர்மங்கள் கொண்ட பூஞ்சைகொல்லி சூத்திரங்களைப் பயன்படுத்தலாம். நோய்த்தொற்றுக்கு பிந்தைய பூஞ்சைக்கொல்லிகளை முதல் அறிகுறிகளை கண்டறிந்தவுடன் உடனடியாகப் பயன்படுத்த வேண்டும். பொதுவாகப் பயன்படுத்தப்படும் நோய்த்தொற்றுக்குப் பிந்தைய பூஞ்சைக்கொல்லிகளானது மெஃபோனாக்சாம், ஸ்டிராபிலுரின்ஸ், ஃபுளூபிகோலைட், ஃபேமோக்சாடன் + சைமக்சானில், சைசோஃபாமிட், மற்றும் ஜோக்ஸாமைடு ஆகியனவாகும். சில தயாரிப்புகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி உருவாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள், சூடோபெரோனோஸ்போரா குபென்சிஸ் என்னும் பூஞ்சையின் நீர்பாசி கூட்டத்தால் ஏற்படுகிறது. இந்த ஒட்டுண்ணி வாழ்வதற்கு உயிர்வாழும் பசுமையான தாவர திசுக்கள் கண்டிப்பாக தேவை. குளிர்ந்த, ஈரமான மற்றும் ஈரப்பதமான நிலைமைகள் (கடுமையான மூடுபனி, உறைபனி, மழைப்பொழிவு) மற்றும் 15-23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் கூடிய நிழல் பகுதிகளில் இவை குறிப்பாகஅழிக்கக்கூடியவை. பூஞ்சை பாதிக்கப்பட்ட தாவர குப்பைகள் அல்லது தளிர்கள் அல்லது மாற்று புரவலன்கள் (பயிர்கள் மற்றும் களைகள்) மீது குளிர்காலத்தை செயலற்ற நிலையில் கழிக்கும். காற்று, காற்றோட்டங்கள் மற்றும் மழைப்பொழிவு ஆகியவை சாதகமான நிலையில் ஆரோக்கியமான தாவரத் திசுக்களுக்கு நோய் வித்துக்களைப் பரப்புகின்றன. பாதிப்பு ஏற்படக்கூடிய புரவலனை அவை அடைந்ததும், வித்துக்கள் முளைத்து மற்றும் கட்டமைப்புகளை உருவாக்கும், இது இலைகளின் அடிப்பகுதியில் உள்ள இயற்கைத் துளைகள் வாயிலாக தாவரத் திசுக்களை அடைகிறது. அங்கு அவை பரவ ஆரம்பித்து, இறுதியில் உட்புற திசுக்களில் வளர்ந்து மற்றும் வெளியே வெண்பூஞ்சை போன்ற கட்டமைப்புகளை உருவாக்குகிறது. அங்கு, வித்துக்கள் உற்பத்தியாகி, மேலும் நோய்களைப் பரப்புகிறது.


தடுப்பு முறைகள்

  • நோய்கள் இல்லாத விதைகள் மற்றும் நாற்றங்கால்களை நடவு செய்யவும்.
  • பருவ காலத்தின் ஆரம்பத்தில் வெள்ளரி இனங்களை நடவு செய்யவும்.
  • தாவரங்களுக்கு இடையில் நல்ல இடைவெளி விடவும்.
  • நன்கு சூரிய ஒளிப்படும் வயல்களில் நடவு செய்யவும் மற்றும் சரியான நோக்குநிலையைத் தேர்வு செய்யவும்.
  • எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றைத் தேர்வு செய்யவும்.
  • உங்கள் தாவரங்களை உலர்வாக வைத்துக்கொள்ளவும் உதாரணமாக சரியான காற்றோட்டம் மூலம் உலர்வாக வைத்துக்கொள்ளவும்.
  • மாலை நேரத்தை விட காலை நேரங்களில் நீர் பாய்ச்சவும்.
  • மணல்கள் நல்ல வடிகால்கள் கொண்டிருப்பதை உறுதி செய்து கொள்ளவும் மற்றும் இலைகள் ஈரமாக இருக்கும்போது வயல்களில் வேலை செய்யக் கூடாது.
  • கொடிகளை தரையில் படாமல் மற்றும் நன்கு கட்டி வைக்கவும்.
  • தாவரங்களின் வீரியத்திற்குச் சமச்சீரான உரமிடுதலை உறுதி செய்து கொள்ளவும்.
  • தாவரங்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதற்குச் செறிவூட்டியைப் பயன்படுத்துங்கள்.
  • வயலில் மற்றும் அதனைச் சுற்றி வளரும் களைகளைக் கட்டுப்படுத்தவும்.
  • வயலில் இருந்து தாவரக் கழிவுகளை அகற்றவும்.
  • கருவிகள் மற்றும் உபகரணங்களைச் சுத்தம் செய்யவும் மற்றும் ஊழியர்கள் ஒரு வயலில் இருந்து மற்றொன்றுக்குச் செல்வதற்கு முன் நன்கு கை கழுவியிருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  • ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்கு பாதிக்கப்பட்ட மண் மற்றும் தாவர பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க