Erysiphe diffusa
பூஞ்சைக்காளான்
சாம்பல் நோய் முதலில் சிறிய வட்ட வடிவில் சோயாபீன் இலைகளின் மேற்பரப்பில் வெள்ளை, நுண்துகள் போன்ற, பூஞ்சை வளர்ச்சி தோன்றும். பாதிக்கப்பட்ட பகுதிகள் மேலும் பெரிதாகி, இலைகளின் மேல் மற்றும் கீழ் பரப்புகளின் பெரும்பகுதிகளில் படரும். பூஞ்சை வளர்ச்சிகள் தண்டுகள் மற்றும் காய்களிலும் காணப்படும். கடுமையான தொற்றுநோய் பாதிப்பின் போது, சோயாபீன் தாவரங்களின் அனைத்து பகுதிகளும் வெள்ளை முதல் வெளிர் சாம்பல் நிற நுண்துகள் பூஞ்சைகள் வளர்ச்சியால் சூழப்படும். சில சோயா வகைகள் இலைகளின் அடிப்பகுதியில் பச்சைச் சோகை, அல்லது இலைகள் மஞ்சள் நிறமாதல் மற்றும் துருபிடித்தாற் போன்ற திட்டுக்கள் போன்றவற்றை வெளிப்படுத்தும். பெரிதும் பாதிக்கப்பட்ட தாவரங்களில் முன்கூட்டியே இலையுதிர்தல் ஏற்படலாம். கடுமையாக பாதிக்கப்பட்ட காய்கள் பொதுவாக சுருங்கிய, வளர்ச்சியற்ற, உருக்குலைந்த , தட்டையான பச்சை விதைகளை கொண்டிருக்கும்.
சிறிய விளைநிலப் பகுதிகளுக்கு, பால்-நீர் கரைசல்கள் இயற்கை பூசணமாக செயல்படுகின்றன. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இலைகளுக்கு இந்த கரைசலைப் பயன்படுத்துங்கள். பூண்டு அல்லது சோடியம் பைகார்பனேட் கரைசல்களும் திருப்திகரமான விளைவை ஏற்படுத்துகிறது. ஈரமான கந்தகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 3 கி கலந்து தெளிப்பதும் பயனுள்ளதாக இருக்கும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். ஈரப்பதமான கந்தகம், ட்ரைஃப்ளூமிஜோல், மைக்ளோபூட்டானில் ஆகியவற்றின் அடிப்படையிலான பூஞ்சைக்கொல்லிகள் சில பயிர்களின் பூஞ்சை வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன.
இந்த நோய்க்கான அறிகுறிகள் எரிசிபே டிஃப்யூசா என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது, இதன் வித்துக்கள் காற்றின் மூலமாக ஆரோக்கியமான தாவரங்களுக்குப் பரவும். அந்த வித்துக்கள் வளர்ந்து, தாவர திசுக்களினுள் ஊடுருவும்போது, இந்த வித்துக்களானது கிருமி குழாய்களாக உருவாகி, கட்டமைப்பின் வழியாக இலை செல்களில் தன்னை ஒட்டிக்கொள்ளும். இறுதியில், இது சோயாபீன் இலைக்கு (வெள்ளை தோல்) அப்பால் உண்ணும் அமைப்பிற்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. காற்றின் மூலம் பரவும் வித்துக்கள் புதிய நோய்த்தாக்கங்களை ஏற்படுத்தி, சோயா செடிகள் முதிர்ச்சியடையும்வரை நோயின் சுழற்சி மீண்டும் நிகழ்கின்றன. 30 டிகிரி செல்சியசிற்கு மேலான வெப்பநிலையில் நோய் வளர்ச்சிக்கு தடுப்பு ஏற்படுகிறது மற்றும் குளிர்ச்சியான வெப்பநிலை நோய் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கிறது. மழைப்பொழிவு நோயின் மீது எந்த தாக்கமும் ஏற்படுத்துவதில்லை. சோயாபீன் தாவரங்கள் அனைத்து வளர்ச்சிக் கட்டத்திலும் பாதிக்கப்படக்கூடியவை என்றாலும், நடுத்தர - பிந்தைய கால இனப்பெருக்க நிலைகளுக்கு முன்பு அறிகுறிகள் தென்படுவது மிகவும் அரிது.