வாழைப் பழம்

வாழைப்பழ இலை கொப்புளங்கள்

Cordana musae

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இலைகளின் கீழ்ப்பகுதியில் உள்ள இலை விளிம்புகளுக்கு அருகே மஞ்சள் அல்லது வெளிர் பழுப்பு நிற முட்டை வடிவ புள்ளிகள் காணப்படும்.
  • வெளிர் பழுப்பு நிற சிதைந்த திசுக்களில் நீண்ட கோடுகள் காணப்படும்.
  • பிரகாசமான மஞ்சள் ஒளி வட்டங்களுடன் பெரிய திட்டுக்கள்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

வாழைப் பழம்

அறிகுறிகள்

கீழ்ப்புற இலைகளின் இலை விளிம்புகளுக்கு அருகே மஞ்சள் அல்லது வெளிர் பழுப்பு நிற, வட்ட வடிவ அல்லது கண் வடிவ புள்ளிகள் தோன்றும். காலப்போக்கில், புள்ளிகள் பெரிதாகி, அவற்றின் மையப்பகுதி சிதைந்து, படிப்படியாக தெளிவான மற்றும் திட்டவட்டமான செறிவு மண்டலத்தை உருவாக்குகிறது. இலைகள் வளருகையில் இந்தப் புள்ளிகளின் நீட்டிப்பு நரம்புகள் வழியாக உருவாகும். பல புள்ளிகள் இணைந்து பெரிய சிதைந்த திட்டுக்களாக உருவாகும், மேலும் இவை மஞ்சள் நிற திசுக்களால் சூழப்பட்டுள்ளது. இலை விளிம்புகள் பாதிப்படைந்த பிறகு, சிறிய செறிவுள்ள புள்ளிகள் உருவாகி, பின்னர் அவை வெளிர் பழுப்பு நிற சிதைந்த திசுக்களில் நீண்ட கோடுகளாக மாறும். இந்தக் கோடுகள் சிலநேரங்களில் மையப்பகுதி வரை நீட்டிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகள் வழக்கமாக பிரகாசமான மஞ்சள் நிற ஒளிவட்டங்களால் சூழப்பட்டுள்ளதால் நோயுற்ற இலைகள் மிகவும் வெளிப்படையாகத் தெரியும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கு எதிராக முற்றிலும் தீர்வு காணும் உயிரியல் சிகிச்சைகள் இல்லை. எனவே, வாழைப்பழ மரங்களின் சரியான மேலாண்மை மிகவும் முக்கியமானது. கடுமையான சந்தர்ப்பங்களில், கரிம செப்பு சூத்திரங்கள், எடுத்துக்காட்டாக 1% போர்டாக்ஸ் கலவை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தெளிக்கப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வாழைமரங்களில் பல்வேறு வகையான இலைப்புள்ளி நோய் ஏற்படுவதால், நீங்கள் கோர்டானா இலைப்புள்ளி நோய்க்கு தான் சிகிச்சை அளிக்கிறீர்கள், சுருக்க இலைப்புள்ளி நோய் அல்லது சிகடோகா இலைப்புள்ளி நோய்க்கு அல்ல என்பதை உறுதி செய்து கொள்ளவும். உதாரணமாக, கடுமையான நோய்த்தொற்றின் போது, 0.4% மான்கோசெப் அல்லது எண்ணெய் அடிப்படையிலான செம்பு ஆக்ஸிக் குளோரைடு 0.2-0.4% பயன்படுத்தவும். குளோரோதலோனில் அல்லது மான்கோஸெப் போன்ற பூஞ்சைக்கொல்லிகள் மற்றும் டெபுகொனாஸோல் அல்லது பிராப்பிகொனாஸோல் போன்ற முறையான பூஞ்சை கொல்லிகள் பரிந்துரைக்கப்படுகிறது. நாம் உபயோகிக்கும் போது அவை மேல் இலைகளை வரை சென்றடைகிறதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் பூஞ்சை கோர்டானா முஸேவால் ஏற்படுகிறது. கோர்டானா இலைப்புள்ளி நோய் என்று அழைக்கப்படும் இவை, வாழைப்பழ மரங்களை தாக்கும் மிக முக்கியமான பூஞ்சாண நோய்களில் ஒன்றாகும், கிட்டத்தட்ட வாழைமரம் வளரும் அனைத்து பகுதிகளிலும் அதிகமாக காணப்படுகிறது. உட்புகும் பொருட்கள் தெளிக்கும் நீர் மற்றும் காற்று மூலம் பரவுகிறது, அதன் பரவலானது நெருக்கமாக நடவு செய்யப்பட்ட வயல்களில் குறிப்பாக பேரழிவை ஏற்படுத்துகிறது. அடிக்கடி மழைகளுடன் சூடான மற்றும் ஈரப்பதம் நிறைந்த நிலையில் இந்த பூஞ்சையின் வளர்ச்சி அதிகரிக்கிறது. நோய்த்தொற்றின் காரணமாக இலைக்கு ஏற்படும் சேதங்கள் ஒளிச்சேர்க்கை பகுதியிலும், மகசூலிலும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகிறது.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பகுதியில் கிடைக்கப்பெறும் (பல சந்தையில் கிடைக்கின்றன) நெகிழ்வு திறன் கொண்ட தாவர வகைகளை பயன்படுத்தவும்.
  • பரஸ்பர நிழல் மற்றும் இலைகளின் தொடர்புகளைத் தவிர்க்க சரியான இடைவெளியைப் பயன்படுத்துங்கள்.
  • பரஸ்பர நிழல் மற்றும் இலைகளின் தொடர்புகளைத் தவிர்க்க சரியான இடைவெளியைப் பயன்படுத்துங்கள்.
  • புதிய தோட்டங்கள் நோயுற்ற தோட்டங்களில் இருந்து சரியான தூரத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • ஈரப்பதத்தைக் குறைக்க தெளிப்பான் நீர்ப்பாசனத்தை தவிர்க்கவும், அதற்கு பதிலாக சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தவும்.
  • சமச்சீரான உரங்களை பயன்படுத்தவும், குறிப்பாக அதிக அளவிலான தழைச்சத்து கொண்ட உரங்களைத் தவிர்க்கவும்.
  • பாதிக்கப்பட்ட இலைகளை நீக்கி அவற்றை அழிக்கவும்.
  • பழைய உலர்ந்த தொங்கும் இலைகளை அகற்றுவதன் மூலம் வயலில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க