Puccinia hordei
பூஞ்சைக்காளான்
முதல் அறிகுறிகள் இலைகளின் மேல் பக்கத்தில் சீரற்ற முறையில் சிறிய, வட்ட வடிவ, ஆரஞ்சு-பழுப்பு நிற கொப்புளங்களாக குளிர்காலத்தின் பிற்பகுதியில் இருந்து வசந்த காலத்தில் சிதறி காட்சியளிக்கும். இவை பார்லி செடிகளுக்கு இடையே தொற்று செயல்முறைக்கு வழிவகுக்கும் வித்துகளைக் கொண்டிருக்கும். எப்போதாவது தண்டுகள், இலை உறைகள் மற்றும் பயிர்காதுகளிலும் இந்த கொப்புளங்கள் உருவாகும். மஞ்சள் அல்லது பச்சை நிற ஒளிவட்டம் பெரும்பாலும் அவைகளைச் சுற்றி இருக்கும். பருவத்தின் பிற்பகுதியில் (வசந்த காலத்தின் பிற்பகுதியில் அல்லது கோடையின் தொடக்கத்தில்) சிறிய கருப்பு கொப்புளங்கள் இலைகளின் அடிப்பகுதியில் படிப்படியாக வளரும். இந்த புதிய பைகளில் வித்துகள் இருக்கும், இவை பின்னர் சுழற்சியை மறுதொடக்கம் செய்ய பயிரின் பக்கக்கன்றுகள் அல்லது மாற்றுப் புரவலன்களில் உயிர்வாழும். வெளிர் பழுப்பு நிற கொப்புளங்களுக்கு மாறாக, கருப்பு நிறத்தில் உள்ளவற்றைத் தேய்க்கும் போது விரல்களில் படியாது.
இன்றுவரை, பார்லியின் பழுப்பு துரு நோய்க்கு உயிரியல் கட்டுப்பாட்டு தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். புரோதியோகோனசோலை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு பூஞ்சைக் கொல்லிகளை சரியான நேரத்தில் தெளிப்பது பழுப்பு துரு நோயை பொதுவாகக் கட்டுப்படுத்த உதவும். பார்லியில் ஏற்படும் இலை துரு நோய்க்கு சிகிச்சை அளிக்க பலவிதமான இலைத்திரள் பூஞ்சைக் கொல்லிகளும் உள்ளன. சிறந்த அடக்குமுறைக்கு, இலை துரு நோய் முதலில் கண்டறியப்படும் போதே அவற்றைப் பயன்படுத்துங்கள். பருவமானது துரு நோய்களுக்கு சாதகமாக இருக்கும்போது கூடுதல் பயன்பாடுகள் தேவைப்படலாம்.
பார்லியில் துரு நோயைத் தூண்டும் நான்கு வகையான பூஞ்சைகளில் ஒன்றான புசினியா ஹார்டி என்ற பூஞ்சையால் அறிகுறிகள் ஏற்படுகின்றன. இந்த உயிரினங்கள் பச்சை தாவரங்களில் மட்டுமே வளரும். புசினியா ஹார்டியைப் பொறுத்த வரையில், இது கோடையில் தாமதமாக வளரும் பக்கக்கன்றுகள் மற்றும் ஸ்டார் ஆஃப் பெத்லஹேம் (ஆர்னிதோகலம் அம்பெல்லாட்டம்) போன்ற மாற்று புரவலன்களில் உயிர்வாழும். அதிக ஈரப்பதம் மற்றும் அடிக்கடி பெய்யும் மழைப்பொழிவுகளுடன் கூடிய வெப்பமான காலநிலை (15° முதல் 22° செல்சியஸ் வரை) நோய் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும், அதே சமயம் வறட்சியான காற்று வீசும் நாட்கள் வித்துகளின் பரவலுக்கு உதவுகின்றன. பார்லியில் பழுப்பு துரு நோயின் கடுமையான தாக்குதல்கள் முக்கியமாக பருவத்தின் பிற்பகுதியில் ஏற்படும், குறிப்பாக அதிக அளவு நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டால் ஏற்படும். ஆரம்பத்தில் விதைக்கப்பட்ட பயிர்கள், குறிப்பாக இரவு நேரம் நன்கு சூடாக இருக்கும் போது, பின்னர் விதைக்கப்பட்ட பயிர்களை விட கடுமையாக பாதிக்கப்படும். இருப்பினும், பயிர்களுக்கு பூஞ்சைக் கொல்லியைக் கொண்டு சிகிச்சையளிக்கப்பட்டால், பார்லியில் பழுப்பு துரு நோய் அரிதான ஒரு பிரச்சனையாக இருக்கும்.