Uromyces viciae-fabae
பூஞ்சைக்காளான்
இலைகள், தண்டுகள் மற்றும் காய்கள் பாதிக்கப்படலாம். முதல் அறிகுறிகளாக இலைகளின் மேற்பரப்பில் சிறிய, வெண்ணிற, சிறிது உப்பிய புள்ளிகள் காணப்படும். அவை பெரிதாகும் போது, இந்த புள்ளிகள் நுண்துகள்களாக மஞ்சள் நிறத்தில் மாறும். இவை பெரும்பாலும் லேசான ஒளிவட்டங்களினால் சூழப்பட்டிருக்கும். இந்தக் கொப்புளங்கள் இலைகளின் மேல் மற்றும் அடி பாகங்கள், தண்டுகள் மற்றும் காய்களின் மீது காணப்படும். பின்வரும் நிலைகளில், முதன்மை கொப்புளங்களுக்குள் இரண்டாம் நிலை கொப்புளங்களும் உருவாகக்கூடும், இவை வட்ட வடிவத்தில் அதன் மையத்தில் ஒரு புள்ளியோடு உருவாகின்றன. துரு நோயின் தோற்றம் மற்றும் தீவிரத்தன்மை நிலவும் வானிலையைப் பொறுத்து அமையும். வெப்பநிலை 20º செல்சியஸிற்கு அதிகமாக இருக்கும்போது, இது தாவரங்களின் மீது வேகமாக வளர்ந்து, அதன் மீது படரும். கடுமையான நோய்த்தொற்று இலை உதிர்வு, குன்றிய தாவர வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியடைவதற்கு முன்பே இறந்து போதல் ஆகியவற்றை ஏற்படுத்தும் .
இந்த நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்த எந்த உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளும் இல்லை. வேப்ப எண்ணெய், ஜட்ரோபா எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய்யின் ஆகியவற்றின் பிரப்பிலாக்டிக் தெளிப்பான்கள் நோயின் தீவிரத்தைக் குறைத்து, சிறந்த தானிய விளைச்சலைக் கொடுக்கிறது.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பெனில்மெர்குரி அசடேட் மற்றும் டிக்ளோபுட்ரசோல் ஆகியவற்றைக் கொண்ட விதை சிகிச்சைகள் விதை வழியாக நோய்பரவுவதைத் தடுக்க பயன்படுத்தப்படுகின்றன. அறிகுறிகள் தென்பட்ட பிறகு, பூஞ்சைக் கொல்லிகளின் இலைவழிப் பயன்பாடு, அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு தெளிப்புகள் நோய் தாக்கம் மற்றும் அதன் தீவிரத்தைக் குறைக்கிறது. புளூட்டிரஃபால், மெட்டாலாக்ஸில் போன்றவை துரு நோயை சமாளிக்க பயன்படுத்தப்படுகிறது. மான்கோஜெப், குளோரோதலோனில் மற்றும் தாமிரம் போன்றவற்றைக் கொண்டிருக்கும் உருவாக்கமும் இந்த நோயைக் கட்டுப்படுத்தும் பிற தயாரிப்புகள் ஆகும்.
இந்த நோயின் அறிகுறிகள் உரோமைசஸ் விசியே-ஃபேபேவால் என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது, இது பயிர்கள் இல்லாத போது தாவரக் குப்பைகள், தானே வளரக்கூடிய தாவரங்கள் மற்றும் களைகள் ஆகியவற்றில் வாழும். இது விதைகள் மூலம் இணைந்த மாசுபடுத்திகளாகவும் எடுத்துச் செல்லலாம். இதன் புரவலன்கள் குறைந்த எண்ணிக்கையைக் கொண்டது. அவரை வகையைத் தவிர, அகன்ற பீன்ஸ் மற்றும் பட்டாணி ஆகியவையும் இவற்றுள் அடங்கும். நிலைமைகள் சாதகமானதாக இருக்கும் போது (17 முதல் 25 டிகிரி செல்சியஸ் மற்றும் நீடித்த இலை ஈரப்பதம்) இது உற்பத்தி செய்யும் சிதல்கள், புதிய தாவரங்கள் அல்லது வயல்களை பாதிக்கச் செய்வதற்கு நீண்ட தூரத்திற்கு காற்று மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. நோய் பரவுவதற்கான பிற வழிகள் வயல்களுக்கிடையே தாவரக் கழிவுகளை எடுத்துச் செல்லுதல், நோய்தொற்றுடைய வைக்கோல், நோய் தொற்றுடைய ஆடை, கருவி மற்றும் இயந்திரங்கள் முதலியனவாகும். இதன் பரவும் திறன் காரணமாக இந்த நோய் பொருளாதார அளவில் மிகவும் அச்சுறுத்தும் நோயாக கருதப்படுகிறது.