திராட்சை

திராட்சையின் சாம்பல் நோய்

Erysiphe necator

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இளம் இலைகளின் மேல் பரப்புகளில், பொதுவாக விளிம்புகளின் அருகே, மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றும்.
  • சாம்பல் நிற அல்லது வெள்ளை பூஞ்சை வளர்ச்சி இந்த புள்ளிகளில் வளரும்.
  • இலை நரம்புகள் மற்றும் தளிர்கள் மீது, பழுப்பு அல்லது கருப்பு திட்டுக்களும் தோன்றும்.
  • பழமானது இருண்ட பழுப்பு நிறமாகவும் கரடுமுரடாகவும் மாறும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

திராட்சை

அறிகுறிகள்

நோய்க்கான அறிகுறிகளின் தீவிரம் திராட்சைகளின் வகை மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளை சார்ந்துள்ளது. வழக்கமாக, வெளிறிய புள்ளிகள் ( 2 முதல் 10 மிமீ விட்டம்) பொதுவாக விளிம்புகள் அருகில், இளம் இலைகளின் மேற்பரப்பில் தோன்றும். சாம்பல் நிற அல்லது வெள்ளை பூஞ்சை வளர்ச்சி இந்த புள்ளிகளில் படிப்படியாக வளரும். நோய் அதிகரிக்கும் போது, புள்ளிகள் பெரிதாகி, முழு இலைகளை மூடும் அளவிற்கு ஒன்றாக இணையக்கூடும், இது இறுதியில் சிதைந்து, உலர்ந்து மற்றும் கீழே விழுந்துவிடும். பாதிக்கப்பட்ட இலைகளின் கீழ்ப்பகுதியில் உள்ள நரம்பு பகுதிகள் பழுப்பு நிறமாக மாறும். தளிர்கள் மீது, பழுப்பு அல்லது கருப்பு திட்டுக்களும் தோன்றும். நோயின் பிந்தைய நிலையில், மஞ்சரிகள் மற்றும் பெர்ரிகள் கூட பாதிக்கப்படும் மற்றும் திராட்சைக் கொடிகள் ஊசிப்போன நாற்றத்தை வெளிபடுத்தும். பாதிக்கப்பட்ட பெர்ரிகள் கரும் பழுப்பு நிறமாக மாறி, கரடுமுரடாக மாறும். சில திராட்சை வகைகளில், அதன் தோல்பகுதி சிதறி, அதன் இலைகளில் அறிகுறிகளாக சாம்பல் அல்லது ஊதா நிறமாற்றம் மட்டுமே ஏற்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சல்பர், தோட்டக்கலை எண்ணெய் மற்றும் பல்வேறு வகையான வர்த்தக தயாரிப்புகள் இயற்கை முறையில் சான்றளிக்கப்பட்ட திராட்சை தோட்டங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒட்டுண்ணி பூஞ்சை அம்பெலோமைசஸ் குயிஸ்குவாலிஸ் எர்சிப்பே நெக்ட்டரின் வாழ்க்கைச் சுழற்சியை முறியடிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பூஞ்சையை உண்ணும் பூச்சிகள் மற்றும் வண்டுகளும் சில திராட்சை தோட்டங்களில் காணப்படும் சாம்பல் நோயை குறைக்கின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். அனைத்து பச்சை தாவர பரப்புகளையும் சரியான நேரத்தில் தெளிப்பான்கள் உபயோகிப்பது அவசியம். சல்பர், எண்ணெய்கள், பைகார்போனேட் அல்லது கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு தயாரிப்புகளை ஆரம்ப தொற்றுக்களை குறைக்க பயன்படுத்தலாம். சாம்பல் நோய் கண்டறியப்பட்டவுடன் ஸ்ட்ரோபிலுரின்ஸ் மற்றும் அஸோநாப்தாலின் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட தயாரிப்புகளையும் தெளிக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

சாம்பல் நோய் எரிசிபே நெக்ட்டார் என்னும் பூஞ்சை நோய்கிருமியால் ஏற்படுகிறது. இது குளிர் காலத்தில் செயலற்ற மொட்டுகள் அல்லது மரப்பட்டைகளில் அமைதியான பூஞ்சை சிதல்களாக உயிர் வாழும். வசந்த காலத்தில், இந்த சிதல்கள் புதிய தாவரங்களுக்கு (முதன்மை தொற்று) காற்று மூலம் எடுத்துச் செல்லப்படும். தாவரங்களின் பல்வேறு பகுதிகளில் சாம்பல் நோய் ஏற்பட்ட பிறகு, இது புதிய சிதல்களை உற்பத்தி செய்யத் தொடங்கி, அது காற்று (இரண்டாம்நிலை தொற்று) மூலம் மேலும் பரவுகிறது. மூடுபனி மற்றும் பனியின் ஈரப்பதம், நீடித்த இலையின் ஈரப்பதம் அல்லது மேகமூட்டமான வானிலை சிதல் உற்பத்திக்கு சாதகமானவை. ஆனால் தொற்று நோய் செயல்முறைக்கு (பிற பூஞ்சை நோய்களுக்கு மாறாக) இந்த சூழ்நிலை அவசியமில்லை. குறைவான, மிதமான கதிர்வீச்சு மற்றும் 6 முதல் 33° செல்சியஸ் வரையிலான வெப்பநிலை (22 முதல் 28° செல்சியஸ் வரை உகந்த வெப்பநிலை) பூஞ்சை வாழ்க்கை சுழற்சிகளுக்கு உகந்ததாகும். 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, நேரடி சூரிய ஒளி மற்றும் அடிக்கடி மழை போன்ற சூழலில் வெளிப்படுத்தப்பட்ட இலை பரப்புகளில் சாம்பல் நோய் குறைந்து காணப்படும்.


தடுப்பு முறைகள்

  • நோய்யெதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை பயன்படுத்தவும்.
  • நல்ல காற்றோட்டத்திற்கு, திராட்சைக் கொடிகளுக்கிடையே நல்ல இடைவெளி விடவும்.
  • மாற்றாக கவிகைக்கு சாதகமாக, நல்ல சீர்திருத்த நடைமுறைகளை தேர்ந்தெடுக்கவும்.
  • நல்ல சூரிய ஒளி இருக்கும் வயல்களை தேர்ந்தெடுக்கவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களை கண்காணிக்கவும்.
  • அதிகப்படியான தாவர வளர்ச்சியை தவிர்க்க எச்சரிக்கையுடன் நைட்ரஜன் உரங்களை பயன்படுத்துங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க